New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Sunday 28 September 2014

Yogas in Horoscope 6 - Mridanga Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 6 - மிருதங்க யோகம்

Mridanga Yoga, horoscience.com
Lord Ganesha dancing playing Mridanga (Pray to him and let the joy fill in all our lives)


This is one of the very rare yoga. If it is found in the charts of any person his/her life will be enriched with full of joy and happiness even though hard time comes he/she will move on easily. Everyone around this person will also be joyous.

This yoga is named after Mridangam a musical instrument. Also described as Divine Instrument / Deva Vaadyam. Mrida means, “one who makes joyful”. This instrument is widely used in South India. In temples and during wedding ceremonies in South India it is played sometimes along with Thavil and Nadhaswaram . In Tamil classics it is also named as tannumai. Read more here.
 

In the Temple Gopurams Temple Gopurams you can notice this instrument sculpted in the hands of divine beings to bring joy in lives of people.
 

Classic astrology authors state “Mridanga yoga can make one respected by rulers, famous, attractive and influential.”
 

According to my research, the person who has this yoga will be surrounded by many friends or relatives.
 

The formation of this yoga is caused by any planet which is exalted or in its own sign in a kendra/kona/friendly sign and its navamsa lord also being exalted or in its own sign in a kendra/kona/friendly sign provided lagna lord should be strong.
 

I recommend using Jagannatha Hora software to check for the presence of this yoga, as manually locating it in the horoscopes will be tedious for beginners in astrology.
 

If anyone has this yoga then he/she might in list among the happiest persons in the world. But remember when malefic planets run their dasa or bhukti one may suffer hurdles, hindrances and setbacks in life but still can be recovered easily.
 

Below is the chart of my friend who is having this yoga. He faced some hurdles related to relationships, but soon he recovered and started to move on quickly. He is an entrepreneur and a humble, polite and of course happy person.

Mridanga Yoga, horoscience.com
(Click to Enlarge)

The next chart is one of my friend’s chart. He is from Indonesia and he has very peculiar traits in regards with enjoying his life. He lives his own way touring and visiting countries. I got to know about him during our post graduate days. He is easy going, helping and of course joyful person.
 

Mridanga Yoga, horoscience.com
(Click to Enlarge)


So now open up your charts, friends and relatives in Jagannatha Hora and check for this joyful Mridanga Yoga and learn whether it is true about what has been written above.


மிகவும் அரிதான யோகங்களுள் இந்த மிருதங்க யோகமும் ஒன்றாகும். இந்த யோகத்தை ஒருவர் பெற்றிருப்பாரேயானால் அவரது வாழ்கை குதூகலமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். எந்த ஒரு துன்பமயமான காலம் வந்தாலும் அவர் அதிலிருந்த வெகு சுலபமாக மீண்டு வருவார். இவர்களை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.

 

இப்பெயர் இந்த யோகத்திற்கு வர காரணம் மிருதங்கம் என்ற தேவ வாத்திய கருவிதான். மிருதங்கம் என்றால் நாம் அறிந்த ஒன்றே. அதில் இருந்து வரும் ஓலியானது நம் அனைவர் மனதையும் காலம் காலமாக கவர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. மிருத என்ற சொல்லுக்கு உற்சாகத்தை கொடுப்பவர் என்பதாக பொருள். எனவே தான் இதை நமது கணபதி வாசிப்பதாக சிலைகளை காண்கிறோம். பல தெய்வ சிற்பங்களில் குறிப்பாக கோபுரங்களில் நாம் இந்த மிருதங்கத்தை காணலாம். தமிழ் இலக்கியங்களில் மிருதங்கம் தண்ணுமை என்றும் பெயர் பெற்றிருக்கிறது.

 

பழங்கால ஜோதிட நூல் ஆசிரியர்கள், மிருதங்க யோகத்தை பற்றி கூறுகையில், இந்த யோகம் ஒருவருக்கு புகழ், வசீகரத்தன்மை, அரசாளுபவர்களால் போற்றப்படுபவர் என்று கூறியிருக்கின்றனர்.
 

என்னுடைய ஆராய்ச்சியில், இந்த யோகம் உள்ளவர்கள் என்றும் நிறைய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் சூழ்ந்து இருப்பார்கள்.
 

இந்த யோகம் ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகம் உச்சமோ/ஆட்சியோ பெற்று கேந்திரம்/திரிகோணம்/நட்பு வீட்டில் அமயப்பெற்று, பின்பு அந்த கிரகத்தின் நவாம்ச அதிபதி உச்சமோ/ஆட்சியோ பெற்று கேந்திரம்/திரிகோணம்/நட்பு வீட்டில் அமர்ந்து, லக்னாதிபதியும் வலிமையுடன் இருந்தால் மட்டுமே உருவாகும்.

 

மேலே உள்ளதை படித்து ஜாதகத்தை ஆராய்ச்சி செய்கிற‌ புதிதாக ஜோதிடம் கற்கும் அன்பர்களுக்கு சற்று கடினம் தான். எனவே Jagannatha Hora மென்பொருளை பயன்படுத்தி யோகம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
 

இந்த யோகத்தை உடையவர்கள் நிச்சயம் உலகித்தில் சந்தோஷமாக வாழும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பர். ஆனால், அசுப கிரகங்களின் தசா/புத்தி ஆதிகத்தின் காலத்தில் துன்பங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டாலும், இந்த யோகத்தின் காரணமாக‌ சுலபமாக துன்பங்களிலிருந்து விடுதலை பெருவார்க‌ள்.
 

கீழே எனது நண்பரின் ஜாதகத்தை கொடுத்துள்ளேன். அவருக்கு இந்த யோகம் நன்றாக அமைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் மனைதை வாட்டும் விதமாக சில‌ துன்பங்களை அனுபவித்தார். ஆனால் அதிலிருந்து சீக்கிரம் விலகி வந்தார். அவர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். மிகவும் பணிவாக, கண்ணியமாக மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். 

 

Mridanga Yoga, horoscience.com
(Click to Enlarge)

 

அடுத்த ஜாதகம் என்னுடைய இந்தோனேசிய நண்பர் ஒருவருடையது. இவர் சற்று வித்தியசமாக மகிழ்வுற்று எப்போதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பார். இவரை சுற்றி இருப்பவர்களும் அப்படித்தான். இந்த யோகத்தின் வினோதம் என்று நினைக்கிறேன். இவர் எப்போதும் பல நாடுகளை சுற்றி கொண்டிருப்பார். இவரை பற்றி எங்களது முதுகலை படிப்பின் போது அறியப்பெற்றேன். இவர் ஜாலியாக, மற்றவர்களுக்கு உதவி புரிந்து என்றும் உற்சாகமாக இருப்பார்.
 

Mridanga Yoga, horoscience.com
(Click to Enlarge)

 

இப்போது தாங்கள், தங்களுடைய,  நண்பர்ளுடைய மற்றும் உறவினர்களின் ஜாதகங்களை Jagannnatha Hora'வில் திறந்து இந்த மிருதங்க‌ யோகம் இருக்கிறதா என்று பார்த்து மேலே கூறியது அனைத்தும் உண்மைதானா என்று பாருங்கள்.

-Karthik. R



Thursday 25 September 2014

Jagannatha Hora: Font size adujustment - எழுத்தின் அளவுகளை சரிசெய்ய‌

Font size adujustment in Jagannatha Hora


When you install and open Jagannatha Hora for the first time you will see the view like below screenshot. 

Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge

There are 6 division charts displayed. This is called Packed Chart Mode. To turn off this you need to,
1. Right Click on the chart area a list will be shown
2. At the bottom you can find “Turn OFF packed chart mode”. Click on that.
3. Click OK and open the Jagannatha Hora again to get Rasi and Navamsa chart view only. 




Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge


Next the font size on both chart and right information panels will be different.
To adjust font size properly follow these steps.
1. Click on “Preferences ---- > Related to Display ----- > Font size Adjustment ----- > Adjust font size” 



Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge

Then in the window
2. Select the one like given below
    “Much bigger”
    “Make them much smaller”
      Click OK. 


Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge



Now look the below image you can see “A A
Click on big A to increase and small A to decrease font size in Jagannatha Hora according to your choice.



Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge

Then Click on “Preferences ----- > Save Preferences” 

Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge

 I have used these adjustments in Windows 7 and look fine. I hope for other operating systems also this will work.

நீங்கள் புதிதாக Jagannatha Hora'வை பதிவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸடால் செய்து அதை திறந்தீர்களானால் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.

 
Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge

6 வர்க்க கட்டங்களை கொண்டு காட்டப்படும். இதற்கு Packed Chart Mode என்று கூறுவர். இதை மாற்றம் செய்ய 

 

1. கட்டங்கள் உள்ள இடத்தில் வலது கிளிக் செய்யவும்.
2. கீழே கடைசியில் “Turn OFF packed chart mode” என்று    கொடுக்கபட்டிருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
3. பின்பு "OK" பொத்தானை அழுத்தவும். 

Jagannatha Hora'வை மீண்டும் திறக்கவும். இப்போது ராசி மற்றும் நவாம்ச கட்டம் மற்றும் நன்றாக தெரியும்.

 
Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge

அடுத்து எழுத்தின் அளவுகள் பொரியதாகவும் சிரியதாகவும் இருபுறம் இருக்கவும். சமமான அளவில் சரி செய்ய கீழே கொடுக்கபட்டுள்ளதை பார்த்து செய்யவும்.



"Preferences ---- > Related to Display ----- > Font size Adjustment ----- > Adjust font size” கிளிக் செய்யவும்.

 

Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge



1. பின்பு, கீழே உள்ளது போல் செலக்ட் செய்யவும்

“Much bigger”
"Make them much smaller”


பொத்தானை "OK" கிளிக் செய்யவும்

 

Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge



இப்போது “A A என்று கொடுக்கப்பட்டிருக்கும்.



பெரிய A 'வை கொண்டு மொத்த எழுத்துக்களின் அளவினை பெரிதாக்கவும்
சிறிய‌ A 'வை கொண்டு மொத்த எழுத்துக்களின் அளவினை சிரிதாக்கவும் பயன்படுத்தலாம்.

 

Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge

பிறகு Preferences ----- > Save Preferences” கிளிக் செய்யவும்.

 

Font size adujustment in Jagannatha Hora
Click to Enlarge


நான் வின்டோஸ் 7 லில் இவ்வாறு செய்தேன். சரியாக வந்தது. மற்ற OS'களிலும் இது சரியாக வரும் என்று நம்புகிறேன்.

-Karthik. R



Sunday 21 September 2014

Yogas in Horoscope 5 – Gaja-Kesari Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 5 ‍- கஜகேசரி யோகம்



Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga, SImha Ganapathi, சிம்ம கணபதி
Simha Ganapathi. Lord Ganesha in the form of Lion(Pray to him as he saves his devotees from enemies and give them the strength to fight against the bad things) - சிம்ம கணபதி. எதிரிகளிடமிருந்தும், தீயவைகளை எதிர்த்து போராட நமக்கு சக்தி கொடுப்பவர்.

Sometimes called kesari yoga. Gaja means Elephant and Kesari is Lion. Hence the name Gaja-Kesari indicates that if a person has this yoga in his chart he would win over his enemies.

Two planets viz., Jupiter and Moon are solely responsible for this yoga to occur.

This yoga is formed when Jupiter is placed in Kendra houses(1,4,7,10) from Moon. It is called Gaja-Kesari.

“Note: In a horoscope, the place where Moon is positioned is called Moon Lagna/Ascendant.”

Further, here if Jupiter and Moon are conjunct that is both are placed in the same house(1st Kendra) then it is the powerful placement of other three Kendra(4,7,10) houses. This kind of placement is usually called as Guru-Chandra Yoga.

Many astrological authoritative classical works say great things about this Gaja-Kesari yoga. Lord Sri Rama has this yoga formation the birth Lagna/Ascendant itself which is cancer/kataka, where Jupiter is exalted and Moon in present in his own house, hence both the planets are in full power and this gave Lord Sri Rama full strength to win over his enemy the Great King Ravana. Also, all the other planets are a in exaltation in his chart as he is avatar and true incarnation of God Vishnu. Hence in India his chart is kept in prayer room with all other deities and worshipped for his blessings. The chart is given below(tamil). 

horoscience.com
Lord Sri Rama and Lord Hanuman Horoscope

King Alexander the Great has this yoga in his chart. Now, we can understand what made him conquer the world.

This yoga also gives wealth, long life and leadership qualities if the planets Jupiter and Moon are placed in good houses in a horoscope chart. You may notice this yoga in plenty of charts. But the strength of yoga differs according to the yoga giving planets position.

But according to my research one thing is sure whether the planets are powerfully placed or not, if the above mentioned yoga is present in your chart all your problems will fade away at-least in the last minute. You might get timely help through someone, even from a stranger. Any problem might it be, the strength will be there for you to come over it.

I have given two charts of my friends showing Gaja-Kesari yogas.

Chart 1 showing Gaja kesari yoga, here Jupiter is in 4th quadrant/Kendra from Moon. Jupiter is Exalted. 

Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga
Chart 1 (Click to Enlarge)



Chart 2 showing Guru and Chandra in same house in Aries/Mesha. Since Jupiter and Moon are in the same house it is powerful Gaja-Kesari yoga also called as Guru-Chandra Yoga. 

Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga
Chart 2 (Click to Enlarge)


So, now open up your charts in Jagannatha Hora and check whether you have this mighty yoga. If you have this yoga then you might be a leader in your surroundings and your skills, talents will be appreciated by all.
 

கேசரி யோகம் என்றும் சில சமயங்களில் அழைக்கப்படும். கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். எனவே கஜ கேசரியை போல் இந்த யோகத்தை யுடைய ஜாதகன் தனது எதிரிகளை வென்றிடுவான் என்பது பொருள்.

 

குரு மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரங்களால் மட்டுமே இந்த யோகம் உருவாகிறது.

 

சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து குரு 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் அதுவே கஜகேசரி யோகம் எனப்படும்.

"குறிப்பு: ஒரு ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த இடத்தை சந்திர லக்னம் என்று கூறுவர்."

 

மேலும், குருவும் சந்திரனும் ஒன்றாக ஓரே வீட்டில் அமர்ந்திருந்தால் அதாவது 1 ஆம் கேந்திரத்தில் இருந்தால் இவ்வகையான கஜகேசரி யோகத்திற்கு குருசந்திர‌ யோகம் என்று கூறுவர். மற்ற கேந்திர(4,7,10) ஸ்தானங்களைக் காட்டிலும் இது வலிமையானது.

 

பல ஜோதிட ஆதார நூல்கள் இந்த கஜகேசரி யோகத்தை பற்றி மிகவும் போற்றி கூறியிருக்கிறார்கள். தசரத புதல்வனான ராமபிரானின் ஜாதகத்தில் ஜெனம லக்னமான கடகத்தில் இந்த யோகம் அமையப்பெற்றது மிகவும் சிறப்பாகும். அதாவது, குரு தனது உச்ச வீடான கடகத்தில் இருக்கிறார். சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் இருக்கிறார். இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள். எனவே சிறந்த கஜகேசரி யோகமான, குருசந்திர யோகத்தை பெற்று தனது சத்துருவான மகா பராக்கிரமசாலியான ராவனனை வதைத்தார். மேலும் பகவான் ராமபிரானின் ஜாதகத்தில் மற்ற எல்லா கிரகங்களும் உச்சமாகி உள்ளது. ஏனேனில் அவர் பரமாத்மாவான மகா விஷ்ணு ஆயீற்றே. ஆதலால் தான் அவரது ஜாதகத்தை நமது பாரத தேசத்தில் பூஜை அறையில் மற்ற ஏனைய தெய்வ படகங்களுடன் ஒன்றாக வைத்து பெருமாளின் அருளை பெற வேண்டி ஆராதனை செய்கிறார்கள். கீழே அவரது ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது.

horoscience.com
Lord Sri Rama and Lord Hanuman Horoscope

 மாவீரன் அலக்ஸான்டரும் தனது ஜாதகத்தில் கஜகேசரி யோகத்தை பொற்றிருந்தார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் அவர் எவ்வாறு உலக நாடுகளை தன்வசம் ஆக்கினார் என்று.

 

குருவும் சந்திரனும் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால் இந்த யோகமானது ஒருவருக்கு தனம், ஆயுள் மற்றும் தலைவராகும் தன்மைகளை அளிக்கவல்லது. இந்த யோகத்தை நிறைய ஜாதகங்களில்
பார்க்க இயலும். ஆனால் யோகத்தின் பலமானது, யோகத்தை கொடுக்கும் கிரங்கள் அமர்ந்த இடத்தை பொருத்து வித்தியாசப்படும்.

 

ஆனால், என்னுடைய ஆராய்ச்சியின் படி யோகத்தை தரும் கிரகங்கள் நல்ல இடத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கஜகேசரி என்ற யோகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலே போதும், உங்களது பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் கடைசி தருனத்திலாவது சூரியனை கண்ட பனி போல் மறைந்து விடும். உங்களுக்கு தக்க சமயத்தில் யாரேனும் ஒருவரால் உதவி கிடைக்கலாம், முன் பின் தெரியாதவராக கூட இருக்கலாம். எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் சரி நீங்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான சக்தி உங்களிடம் இருக்கும்.

 

என்னுடைய நன்பர்கள் இருவரின் ஜாதகங்களை கீழே கொடுத்துள்ளேன்.

 

ஜாதகம் ஒன்று, சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து குரு நான்காம் இடத்தில்/கேந்திரத்தில் உள்ளார். குரு உச்ச பலத்தில் உள்ளார். நல்ல பலமான கஜகேசரி யோகம் இது.

Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga
Chart 1 (Click to Enlarge)

 

 

ஜாதகம் இரண்டில் குருவும் சந்திரனும் மேஷத்தில் அதாவது ஒரே வீட்டில் அமைந்திருக்கிறார்கள். எனவே இது சிறந்த கஜகேசரி யோகமான குருசந்திர யோகம் ஆகும்.

Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga
Chart 2 (Click to Enlarge)

 

எனவே, உங்கள் ஜாதகத்தி கஜமும் கேசரியும் இருக்கிறதா என்று பாருங்கள். Jagannatha Hora'வில் உங்கள் ஜாதகங்களை திறவுங்கள். இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் தாங்கள் இருக்கும் சுற்று வட்டாரத்தில் தலை சிறந்து விள்ங்குவீர்கள், உங்களது திறமைகள் பலராலும் பாராட்டபடும்.

-Karthik. R



Thursday 18 September 2014

Ayanamsa Setting in Jagannatha Hora - அயனாம்சம்

horoscience.com

Ayanamsa plays a vital role in calculation part of astrology. Normally, Lahiri Ayanamsa is used by majority of astrologers in India. Hence I recommend everyone who learns from HoroScience using the same.

Check in Jagannatha Hora in your computer whether Lahiri Ayanamsa is set.

Open Jagannatha Hora

Click “Preferences -> Related to Calculations -> Ayanamsa”

Select “Traditional Lahiri”

Click on “OK”

Again “Click Preferences -> Save Preferences”.

Look at the below given images one by one to understand.

There are many ayanamsas introduced by several scholars. If you use different ayanamsa Dasa, Bhukti, Antar dates may vary according to that and also the planetary degrees will also vary. Hence the prediction may become false.

It is better to use Lahiri Ayanamsa as it recommend by Lahiri Commission formed by Indian Government.

To understand what is an Ayanamsa one should know about Astronomy. Hence I cannot explain it here briefly.

The author of the Jagannatha Hora says,

“Ayanamsa is the angle between the start of Aries in tropical zodiac and the start of Aries in sidereal zodiac.Different parts of India got used to different ayanamsas over centuries, differing by upto 5-6 degrees!Standardization of Lahiri ayanamsa by Lahiri commission formed by Indian government led to some uniformity over the last few decades, but still Vedic astrologers use many ayanamsas differing by a few degrees.”

Source for the above

Wikipedia link for Ayanamsa 


To Know More about Ayanamsa


1 (Click to Enlarge)





2 (Click to Enlarge)




3 (Click to Enlarge)




4 (Click to Enlarge)




ஜாதக கணிதத்தில் அயனாம்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக லாகிரி அயனாம்சம் தான் பொரும்பாலான ஜோதிடர்கள் நமது பாரதத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே நானும் இந்த தளத்தின் மூலம் ஜோதிடம் படிப்பவர் அனைவரையும் இந்த அயனாம்சத்தை பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கணினியில் உள்ள Jagannatha Hora'வில் இந்த அயனாம்சம் பயன்படுத்த பட்டுள்ளதா என்று பார்க்கவும்.

Jagannatha Hora'வை திறவுங்கள்

பிறகு "Preferences -> Related to Calculations -> Ayanamsa" கிளிக் செய்யவும்

"Traditional Lahiri" செலைக்ட் செய்யவும்

"OK" பொத்தானை அழுத்தவும்.

பிறகு “Click Preferences -> Save Preferences” கிளிக் செய்யவும்

மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்களை வரிசையாக பார்த்து புரிந்து கொள்ளவும்.

பல வகையான அயனாம்சங்கள் பல்வேறு அறிஞர்களால் அறிமுகபடுத்தப்பட்டது. நீங்கள் வேறு அயனாம்சத்தை பாவித்தீரகளானால் தசா, புத்தி, அந்தரில் மாற்றங்கள். அது மட்டுமல்லாமல், கிரகங்கள் நிற்கும் பாகைகளும் வேறுபடும். அதனால் பலன்கள் தவறாக போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே லாகிரி அயனாம்சத்தை பயன்படுத்துங்கள். ஏனேனில் இது லாகிரி கமிஷன் மூலம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது.

அயனாம்சம் என்றால் என்ன என்ற கேள்விக்கு விளக்கத்தை தெரிந்து கொள்ள‌ வானவியல் சாஸ்திரம் அறிந்திருக்க வேண்டும். எனவே அதை பற்றி நான் விரிவாக கூறப்போவதில்லை.

Jagannatha Hora'வின் மென்பொருள் ஆசிரியர் அயானம்சம் பற்றி கூறுவதை வாசிக்க (ஆங்கிலத்தில்) கிளிக் செய்யவும்.

விக்கிபீடியாவில் வாசிக்க கிளிக் செய்யவும். (ஆங்கிலத்தில்)

மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும். (ஆங்கிலத்தில்)

-Karthik. R



Saturday 13 September 2014

Yogas in Horoscope 4 – Chandra-Mangala Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 4 - சந்திரமங்கள‌ யோகம்

For Mars pray to Lord Muruga, For Moon pray to Somanathar(Lord Siva, as he adorns crescent moon in his head)

In the list of wealth giving yogas, Chandra-Mangala yoga is one among them.

Planet Mars and Moon are the only two planets when combined or in aspect with one another gives rise to this yoga.

To know about different aspects of planets click here.

This yoga can be seen in the charts of materially successful people. Easy Work Easy Gain is the principle for this yoga.


There are three ways on how this yoga forms.


Conjunction: Mars and Moon combined in the same house.
Below is a chart of my friend who has this yoga, where Mars and Moon are combined in the 11th house of gains. Hence his earning capability improves continuously. He is working in the States.

Conjunction(Click to Enlarge)
Opposition: Both Mars and Moon aspects each other through their 7th sight.

Below is a chart of my relative who has this yoga, where Mars and Moon are in aspect with each other through their 7th sight. He is working in one of the countries in Gulf.


 
Opposition(Click to Enlarge)

Parivartana: Both Mars and Moon exchange their houses to give this yoga.

We know that Mars owns two houses Aries/Mesha and Scorpio/Vrischika. And Moon owns only one Cancer/Kataka.


Exchange of planets can happen in two ways.
Mars in Cancer/kataka and Moon in Aries/Mesha.
Mars in Cancer/Kataka and Moon in Scorpio/Mesha.


To know more about houses and house lords click here.


Below is a chart of my friend in abroad who has this wonderful yoga. He is working in a wealthy island country in Southeast Asia.

Parivarthana(Click to Enlarge)
Look in the chart,

Mars is in cancer/kataka which is Moon’s house and
Moon is in Aries/Mesha which is Mars house.


Thus by exchange of house Parivartana Yoga is formed. As Mars and Moon are involved in this exchange Chandra-Mangala Yoga is formed.


Note: Some astrology authors say this yoga does not give much benefits regarding wealth. They say it because Mars is Neecha/debilitated in Moon House Cancer/Kataka and Moon is Neecha/debilitated in Mars house Scorpio/Vrischika. But according to my research and experience I have seen this yoga in full effect in charts of people who are earning a level good compared to those who do not have this yoga.


To know more strength of planets in different signs/rasis click here.


So, open your charts in Jagannatha hora and check whether you have the yoga to earn easily. Chandra-Mangala yoga formed due to Parivartana will not be listed in Jagannatha hora. So check manually yourself by looking at your rasi chart.



தன பாக்கியம் கொடுக்கும் யோகங்களில் சந்திரமங்கள யோகமும் ஒன்று.

 

செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் மட்டுமே இந்த யோகத்தை தர இயலும். அவை இரண்டும் சேர்ந்த நிலையிலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நிலையில் இந்த யோகமானது உதயமாகும்.


கிரங்களின் பார்வைகள் பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 

பொருளாதார வசதி திருப்திகரமாக‌ இருப்பவர்கள் ஜாதகங்களில் இந்த யோகம் இருக்கும். கஷ்டமில்லா வேலை நிறைவான ஊதியம் தான் இந்த யோகத்திற்கு தாரக மந்திரமாகும்.

 

 

மூன்று விதங்களில் இந்த யோகம் உருவாகும். அவை,

 

1. ஒரே வீட்டில்/ராசியில் செவ்வாய்யும் சந்திரனும் ஓன்றாக சேர்ந்து இருப்பது.

கீழே உள்ள என்னுடைய நன்பர் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சேர்ந்து அமர்ந்து இந்த யோகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே இவரது பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் ஸ்டேட்ஸில் வேலை பார்க்கிறார்.

 

Conjunction(Click to Enlarge)

2. செவ்வாய் சந்திரன் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது ஏழாம் பார்வையினால் பார்த்து கொள்வது.

 

கீழே உள்ள என்னுடைய உறவினர் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் தங்களது ஏழாம் பார்வையினால் ஒருவரை ஒருவர் பார்த்து இந்த யோகத்தை கொடுக்கிறார்கள். அவர் வளைகுடா நாடுகள் ஒன்றில் வேலை செய்கிறார்.

 

Opposition(Click to Enlarge)

3. செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனை பெற்றிருப்பது. அதாவது அவர்களது வீடுகளில்/ராசியில் இடமாறி அமர்ந்திருப்பது.

 

செவ்வாய் கிரகத்துக்கு ராசி சக்கரத்தில் மேஷம் மற்றும் விருச்சிகம் என இரு வீடுகளும் சந்திரனுக்கு கடகம் என ஒரு வீடும் இருப்பது நாம் முன்பே அறிந்த விஷயம் தான்.

 

பரிவர்தனை இரு நிலையில் நடக்கும்.

1. செவ்வாய் கடகத்தில் அமர்ந்து, சந்திரன் மேஷத்தில் அமர்ந்திருப்பது.

2. செவ்வாய் கடகத்தில் அமர்ந்து, சந்திரன் விருச்சிகத்தில் அமர்ந்திருப்பது.


மேலும் ராசி/வீடுகளின் அதிபதிகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

 

கீழே உள்ள‌ எனது நன்பர் ஒருவரின் ஜாதகத்தில் இந்த அற்புத யோகம் இருப்பதை பாருங்கள். இவர் தென்கிழக்கில் உள்ள செல்வம் மிகுந்த ஒரு தீவில் பணியாற்றி வருகிறார்.

 

Parivarthana(Click to Enlarge)

 

ஜாதகத்தை பாருங்கள்,

 

செவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கிறார் மற்றும்

சந்திரன் செவ்வாயின் வீடான மேஷத்தில் இருக்கிறார்.

 

எனவே தத்தம் வீடுகள் மாற்றி அமர்ந்து பரிவர்தனை யோகத்தை தந்துள்ளார்கள். செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனை ஆனதால் இந்த யோகம் சந்திரமங்கள யோகம் என பெயர் பெற்றது. 

 

குறிப்பு: சில ஜோதிட ஆசிரியர்கள் இந்த யோகம் செல்வத்துக்கு உண்டான பலன் ஏதும் அளிப்பதில்லை என கருத்துக்கள் கூறியிருக்கிறார்கள். ஏனேனில், செவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் நீச்சம் ஆகிறார் மற்றும் சந்திரன் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் நீச்சம் ஆகிறார். ஆனால் என்னுடைய ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தில் இந்த யோகமானது நல்ல வருவாய் இருக்கும் நபர்களின் ஜாதகத்தில் முழு பலத்துடன் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.



கிரகங்கள் எந்த ராசியில் அமர்ந்தால் என்ன நிலை என்பது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

 

எனவே, உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora'வில் திறந்து நீங்கள் சுலபமாக வருவாய் ஈட்டுவீர்களா என்று பார்க்கவும். பரிவர்தனையால் ஏற்படும் சந்திரமங்கள யோகமானது Jagannatha Hora'வின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. எனவே அதை நீங்கள் ராசி கட்டத்தை பார்த்து சுயமாக தெரிந்து கொள்ளவும். 

 

-Karthik. R