சில ஜோதிட அன்பர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து விட்டு, அடடா எனக்கு இப்போது கெட்ட நேரம் ஆயிற்றே, நான் என்ன செய்வது என்று
எண்ணுவார்கள்.
இன்னும் சிலர், மற்றவர் ஜாதகங்களை ஆராய்ந்து கொண்டு அடடா எனக்கு இந்த யோகம் இல்லாமல் போயிற்றே என்று வருந்தி கொண்டிருப்பார்கள்.
எது எப்படியோ இதனால் ஒன்றும் மாறப்போவதில்லை.
பல தடைகள் துன்பங்கள் எல்லாவற்றையும் நாம் அனு தினமும்
சந்திக்கிறோம்.
இதற்கு என்ன வழி, பரிகாரமா ?
அதுவும் இல்லை, பரிகாரம் என்ற பெயரில் பித்தலாட்டம் தான் நடக்கிறது
என்று எல்லோரும் அறிந்ததே. மேலும், வீன் அலைச்சல் மற்றும் பொருள்
சேதாரம் தான் சம்பவிக்கும், அதனால், கடவுள் மீது கோபம் வரும்,
மனக்கவலை அதிகரிக்கும்.
ஆக என்ன வழி ? இதைத்தான் நான் ஆராய்ந்தேன் இத்தனை நாட்கள்.
தூய பக்தி ஒன்றே அதற்கு வழி.
யாரிடம் தூய பக்தி கொள்வது ?
இறைவனிடம் தூய பக்தி கொள்ள வேண்டும்.
இறைவன் யார் ?
சிவபெருமான், திருமால்(விஷ்ணு), பிரம்மா(சிவபெருமானல் சபிக்கப்பட்டாதில் இவருக்கு கோயில்கள் வழிபாடுகள் இல்லை).
யாரை வழிபடுவது ?
உங்கள் விருப்பம்.
பக்தியின் முதல் படி ?
உங்கள் ஊரில் அல்லது அருகில் உள்ள எதாவது ஒரு சிவன் அல்லது
விஷ்ணு கோயிலை தேர்ந்து எடுங்கள்.
அங்கு இருக்கும் மூலவரை பக்தியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
எப்படி ?
மந்திரத்தை கூறிக்கொண்டிருங்கள்.
எந்த மந்திரம் ? எப்படி கூறுவது ?
"ஓம் சிவ சிவ ஓம்"
அல்லது
"ஓம் ஹரி ஹரி ஓம்"
108 முறை தினமும் கூறினாலே போதும்.
மற்ற மந்திரங்கள் எல்லாம் 1,00,000 ஒரு லட்சம் தடவை சொன்னால் தான்
அது நமக்கு உரு பெற்று உதவும். அதுவும் அவ்வாறான மந்திரங்கள் குரு
முகமாக கேட்டு, பல ஆன்மீக கட்டுப்பாடுகளுடன் கூற வேண்டும்.
எவ்வாறு கூறவேண்டும் என்பது கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நொட்டீஸை படித்து பாருங்கள்.

(Click to Enlarge)
