Shani(Saturn) Shrine at Thirunaraiyur Ramanathaswamy Temple. Sani with family and King Dasarathar and his Guru Lord Bhairavar |
“Maandhi is Terrible than the Terrible Rahu”
Maandhi, the son of Saturn is a very cruel one and considered one among the upa grahas(sub planets) in Vedic Astrology.
Astronomically, Maandhi is known as Titan, which is a Moon of the Planet Saturn.
Maandhi is cause for holocaust, massive massacre, crowd death, instant death and other awful accidents that occur on our planet earth. In mundane astrology, He plays a Major Role.
In individual horoscopes, it is said that when Maandhi is placed in a house, it destroys all the significations of that particular house. Exceptions are given to upachaya houses viz., 3,6,10,11 from Lagna/Asc in astrological texts.
But in experience, Maandhi, only when placed in 6th and 11th house from Lagna/Asc gives minimum bad effects because it will destroy any one of the significations or functions related to particular house. For example., If placed in 6th it might give either debts or diseases. Similarly when placed in 11th house either it would be destroy the relation with elder brothers and friends or there will be only minimum gain/profits in any ventures. Mixed results may occur if any good or bad planet related to lagna/Asc is present in the horoscope.
Many people confuse Maandhi with Gulika. Both are different. And both Maandhi and Gulika are sons of Saturn according to Vedic texts.
Predicting how and when will Maandhi affect the concerned person of the horoscope is not an easy task for any astrologer. In India, Maandhi is in practice by astrologers of Kerala particularly and in some parts of Tamilnadu. Rest of other states in India doesn’t take it as a serious one.
There are no proper references or sufficient and exhaustive astrological research works written on Maandhi.
To pacify the malefic effects of Maandhi, one Shiva Temple in the State of Tamilnadu is present at Thirunaraiyur. In this temple, Lord Saturn is present with his two wives and two sons. Devotees worship here to get relief from Saturn’s evil effects and Maandhi’s terrible effects. King Dasaratha, father of Lord Rama, worshipped and praised Lord Shani here. So there is also statue for him. His sung a song which when recited by people would get relief from the evil effects of Saturn.
Birth of Maandhi:
There is a major role of Maandhi in the epic Ramayana, when Demon King Ravana took nine planetary gods as prisoners and summoned them to be present in the 11th house in the chart of his son Indrajit/Meganathan. This threatened the Devas and their King Indra, that Ravana’s son would be invincible if it happens, as the 11th house describes victory and gains. But then Sani(Saturn) quickly acted upon and cut a part of flesh from his leg and placed it in 12th house of Indrajit’s horoscope. From the flesh arised Maandhi. This also made Saturn to move slower due to his leg crippled. So that is reason why transit of Saturn in long compared to other planets. And finally Indrajit was defeated in war by Lord Rama.
Open your charts in Jagannatha Hora and check in which place Maandhi is present. It would be indicated as Md and Gulika as Gk. Look at the below image example for reference.
For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Or email [email protected]
"கெடுதல் செய்யும் ராகுவை விட பயங்கரமாக கெடுதல்களை விளைவிப்பவர் தான் மாந்தி."
இவர் சனியின் மைந்தன் மற்றும் ஜோதிடத்தில் ஒரு உப கிரகம் ஆவார்.
விஞ்ஞான ரீதையாக மாந்தி என்பது சனி கிரகத்தை சுற்றியுள்ள சந்திரன்களில் ஒருவர். விஞ்ஞான பெயர் டைட்டன்.
மாந்தி இன அழிப்பு, படுகொலைகள், கோரமான விபத்துக்கள், விபத்தில் பல உயிர்கள் ஒரே நேரத்தில் மரணித்தல், தீடீர் மரணம் போன்ற சம்பவங்களுக்கு காரகன் ஆவார். இவை அனைத்திம் இகலோக ஜோதிடவியலில் பேசப்படுகிறது.
தனி மனித ஜாதகத்தில், மாந்தி எந்த பாவத்தில் அமர்ந்திருக்கிறாரோ அந்த பாவத்தின் மொத்த காரக பலன்களை நாசமாக்கி விடுவார் என கூறப்படுகிறது. லக்னத்திலிருந்து 3,6,10,11 ஆகிய உபஜெய வீடுகளுக்கு விதிவிலக்கு என சில ஜோதிட கூறிப்புகள் விளக்குகின்றன.
ஆனால் அனுபவ ரீதியாக பார்க்கும் போது 6 மற்றும் 11 ஆம் பாவத்தில் மாந்தி அமர்ந்திருந்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால் அந்த பாவத்தின் மொத்த காரக் பலன்களில் எதேனும் ஒன்றை கட்டாயம் பாதித்து விடுவார். உதாரணத்துக்கு, 6 ஆம் இடத்தில் நின்றால், ஜாதகரை கடனாளியாகவோ அல்லது நோய்யாளியாகவோ ஆக்கிவிடுவார். இதே போல் 11 ஆம் வீட்டில் நின்றால், உடன் பிறந்த மூத்தவர்களுடன் பகை, நண்பர்களுடன் பகை அல்லது வாழ்வில் எந்த வித லாபங்கள் இல்லாமல் தடுத்துவிடுவார். வேறு கிரகங்களுடன் கூட்டணியில் இருக்கும் போது பலன்கள் அந்த கிரகங்களுக்கேற்ப மாறுபடும்.
பொதுவாக மாந்தியையும் குளிகனையும் ஒன்று என்ற குழப்பம் நீடிக்கிறது. ஆனால் உண்மையில் இருவரும் வேறு. மேலும் இருவறும் சனியின் மைந்தர்கள் ஆவர். மாந்தி எவ்வொரு பலன்களை தருவார் என்பதை ஜாதகத்தில் கண்டுபிடிப்பது என்பது ஜோதிடர்களுக்கு ஒரு போராட்டமான விஷயம் தான். கேரள ஜோதிடர்கள் தான் அதிகமாக மாந்தியை வைத்து பலன் கூறுகிறார்கள். அது போல தமிழ்நாட்டிலும் சிலர் கூறுகிறார்கள். வேறு எந்த இந்திய மாநிலங்களிலும் மாந்திக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
மாந்தியை பற்றி விரிவான ஆராய்ச்சிகள் இதுவரை சரியாக எழுதப்படவில்லை. மாந்தியின் கெடுதல் பலன்களை குறைக்க தமிழ்நாட்டில் திருநரையூரில் உள்ள சிவன் கோவில் பிரசத்தி பெற்றது. சனி மற்றும் மாந்தி பரிகார ஸ்தலமாகும். சனி பகவான தனது இரு மனைவிகளுடன், மற்றும் இரு புதல்வர்களுடன் அருள்பாலிக்கிறார். ராமரின் தந்தை தசரத மகாராஜா சனி பகவானை போற்றி வழிபட்ட ஸ்தலம் இதுவாகும். அவருக்கும் இங்கே சிலையுண்டு. மேலும் அவர் சனி பகவானை போற்றி பாடலை பாடியுள்ளார். அப்பாடலை தினமும் வாசிப்பவருக்கு எந்த ஒரு தீங்கும் சனியினால் வராது என்று ஐதிகம்.
இக்கோவிலை பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மாந்தியின் பிறப்பு:
ராமாயனத்தில் மாந்தி பெரும் பங்களிக்கிறார். அசுர தலைவர் இராவணன் நவகோள்களையும் சிறை பிடித்தான். மேலும் அவர்களை தனது புதல்வன் மேகநாதனின் ஜாதகத்தில் 11 ஆம் வீட்டில் இருக்கும்படி செய்தான். இது தெரிந்த தேவர்களும் அவர்களது தலைவன் இந்திரனும்
அச்சமுற்றார்கள். ஏனேனில் 11 ஆம் வீடானது வெற்றியை குறிக்கும், மேகநாதனை யாரும் தோல்வியுற செய்ய இயலாது. உடனே சனீஸ்வரர் தனது காலில் உள்ள சதை பகுதியை வெட்டி எடுத்து 12 ஆம் வீட்டில் வீசினார். அந்த சதையிலிருந்து உதித்தவர்தான் மாந்தி. இதனாலயே சனி பகவான் மந்தமாக நடப்பார், ஆக அவரது பெயர்ச்சியும் மற்ற கிரகங்களை காட்டிலும் அதிக நாட்கள் ஆகிறது. இந்திரஜித் பிறகு யுத்ததில் ராமரால் வீழ்த்தப்பட்டான்.
உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோராவில் திறந்து, மாந்தி எங்கே அமர்ந்திருக்கிறது என்று பாருங்கள். "Md" என கொடுக்கப் பட்டிருக்கும். குளிகன் "Gk" என கொடுக்கப் பட்டிருக்கும். உதாரண ஜாதகத்தின் படத்தை கீழே பாருங்கள்.
கடக லக்னம். மாந்தியும், குளிகனும் 11 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். |
உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள முகநூல் தள்த்தில் செய்தி அனுப்பவும்.
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். [email protected]
- Karthik. R