New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 8 December 2015

Remedy for Happiness, Love, Fun - சந்தோஷம், அன்பு மற்றும் இன்பத்திற்கான வழிபாடு

Sandal paste offering to Shiva Linga


Like the snakes shed their old skin and go on live out with a new life with its new shining layer of skin, Similarly we humans also go on to live with new life ahead by taking resolutions on the eve of new  year, birthdays and on several  other festivals.

But which is the Correct day in our life each year to recharge, rejuvenate or revitalize ourselves with new fresh cosmic energy and enjoy the year ahead without troubles.

Of course it is on your Birthday each year you get a new chance to live a new life ahead. You are re-born on that day with new fresh energy. The only problem is we are not aware of ourselves and do not celebrate our birthdays on the correct day. Please find out the Tithi and the Vedic month in which you are born and note down it and that is when you should celebrate or at least do the remedies given below to stay out of troubles ahead for another 1 year until your next birthday kicks in.

To find out your birth Tithi using Jagannatha Hora, please read the previous post. The link is also given below.


So after reading it you would have know that unlike English calendar date,according  Indian/Vedic calendar Each year your actual Birth date differs as it follow calendar of 360 days a year which is the Lunar Calendar and that is the right one. Know your Tithi.

What exactly should be done on Birthday ?

On each year birthdays comes in different days. Note down on what day your birthday comes according to Tithi. Except Tuesday and Saturday all other days are good.

If your annual birthday comes out to be Tuesday then its shows some kind of obstacles in every endeavour you take will be there a year until your next birthday.
Similarly, Saturday which will halt you down on every circumstances. 
If it is on Sunday then the year ahead, you will be more egoistic.
If it turns out to be on Monday, Wednesday, Thursday and Friday, Everything will be good and great year ahead.
  
As we have seen Tithi is the relationship between the Father and Mother, Shiva and Sakthi, we need to offer following items on your birthday each year based on what day it comes each year. As that planet will work for you the whole year and provides you with new energy. If for ex, Thursday, then it is Jupiter. If it is weak in your chart the year ahead might not be wonderful. So it is recommended to offer these products to Shiva Linga in nearby Shiva temples in your location.

Sunday(Sun)= Honey
Monday(Moon) = Cow Milk
Tuesday(Mars) = Light a Clay Lamp in Temple or Candle.
Wednesday(Mercury) = Any Green Leaves (Vilva, Shiva’s favourite)
Thursday(Jupiter)= Any Flowers (Datura or Crown flower,  Shiva’s favourite)
Friday (Venus) = Rice Food or Fruits (Datura fruit, Shiva’s favourite)
Saturday(Saturn) = Incense Sticks or Fragrance product(Sandal or Jasmine sticks, Sambarani)

Once you are in Shiva Temple and offer the following products on each year on your Birthday(Tithi), you will get recharged yourself and be filled with new energy to run your life a year until your next birthday.

Please read the previous post fully to understand how to find your birth Tithi and upcoming Birthdays using Jagannatha Hora. As this post is continuation of it. In the previous post we would have seen an example chart for the person born on May 30, 2002, the birthday next year would be May 26, 2016, which turns out to be a Thursday, thus showing the events will be good and a good start for another year. Since it is Thursday, he should be offering Flowers to Shiva Linga which would give him great benefits and be recharged with new energy for 1 year.
Practically, we can’t celebrate our Birthday’s on our Tithi Days, as we are westernized and adapted to the use of English calendar(not in all parts of India). Hence you can enjoy with sweets, party’s on your solar calendar never mind. But make sure you do the necessary things said above according to your birth Tithi each year which your actual birthday. Tithi=Disatance between Sun and Moon.

List of Tithi names can be found on this wiki link. https://en.wikipedia.org/wiki/Tithi

Still do you feel some planet is doing a lot of havoc and crisis in your life, feel free to consult and get a reading and a Kavach.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link or button.

(Or)

Send a facebook message to சந்தோஷம், அன்பு மற்றும் இன்பத்திற்கான வழிபாடு


பாம்பு எப்படி தனது பழைய தோளை விட்டு புது பொலிவுடன் தனது வாழ்க்கை பயணத்தை அவ்வப்போது தொடர்கிறதோ அதே போல் நாம் மனிதர்களும் ஒவ்வொரு புத்தாண்டு அல்லது பிறந்தநாள் அல்லது வேறு பண்டிககைகளின் போது சில புதிய நோக்கங்களை முன் நிறுத்தி வாழ்க்கை பயணத்தை தொடர்கிறோம்.


ஆனால் ஒவ்வொரு வருடமும் எந்த நாளில் நாம் இவ்வாறு புது பொலிவுடன், புத்துணர்ச்சி பெருவது, தெய்வ சக்தியை எந்த நாளில் நாம் பெற்று 1 வருடம் கவலையில்லாமல் இருக்க முடியும்.


உங்கள் பிறந்தநாள் அன்று தான் உங்களால் அந்த சக்தியை பெற்று புத்துணர்ச்சியுடன் தடைகள் இல்லாமல் அடுத்த ஒரு வருடத்திற்கு பாதுகாப்பாக வாழ்க்கை பயணத்தை தொடர முடியும். பிறந்தநாள் எது, நீங்கள் பிறந்த தமிழ் மாதம் மற்றும் திதியை குறித்து வைத்து கொள்ளுங்கள். ஒவ்வொறு வருடமும் நீங்கள் பிறந்தமாதத்தில் வரும் உங்கள்து பிறந்த திதி தான் உங்களுடைய உண்மையான பிறந்த நாள்.

உங்களது பிறந்த திதி மற்றும் ஒவ்வொரு வருடமும் வரும் உங்கள் பிறந்தநாளை சரியாக கண்டுபிடிக்க நீங்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். இந்த பதிவிற்கு முந்தைய பதிவு ஆகும்.


http://horoscience.blogspot.in/2015/12/when-is-my-next-birthday.html


ஆக நீங்கள் படித்த பின் உங்களுக்கு ஒன்று விளங்கி இருக்கும் அதாவத் பிறந்தநாள் வருடாவருடம் வெவ்வெறு நாளில் வரும் என்று. ஏன் என்றால் 360 நாட்கள் கொண்ட நமது இந்திய நாட்காட்டி படி அது தான் சரி. பிறந்த திதி வரும் நாள் தான் பிறந்தநாள், ஆங்கில நாட்காட்டி படி அல்ல.


உங்கள் பிறந்தநாள் அன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?


உங்கள் திதி படி பிறந்தநாள் எப்போது வருகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். அது எந்த கிழமை என்று பாருங்கள். செவ்வாய் மற்றும் சனி கிழமை தவிர மற்ற நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள்.


உங்களது வருட பிறந்தநாள் வரும் நாள் செவ்வாய் கிழமையாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் எதோ சில பிரச்சனைகளும் தடைகளும் இருந்து கொண்டே இருக்கும்.


அதே போல் சனி கிழமையாக இருந்தால் எல்லா விஷயங்ககும் ஸ்தம்பித்தது போல் அந்த வருடம் முழுவது இருக்கும்.ஞாயிற்று கிழமை எனில் உங்களது அகங்காரம் சற்று கூடுதலாக இருக்கும்.


திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி எனில் மிகவும் நல்லதாக அடுத்த ஒரு வருடத்திற்கு இருக்கும்.

திதி என்பது தந்தைக்கும் தாய்க்கும் உள்ள உறவு முறை. ஆக சிவபெருமானையும் பராசக்தியையும் உங்கள் பிறந்த நாள் அன்று வழிபட வேண்டும். உங்கள் பிறந்தநாள் வரும் அந்த கிழமை வியாழன் என்றால் அதற்குரிய கிரகம் குரு. ஆக குருவிற்குண்டான சில பொருட்களை நிங்கள் சிவலிங்கத்துக்கு அற்பனித்தால் அடுத்த ஒருவருடத்திற்கு இடர்கள் இல்லாமல் புது பொலிவுடன், புது சக்தியுடன் வாழ்க்கை பயணத்தை தொடரலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமயில் உள்ள சிவன் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை தரிசனம் செய்து கீழே உள்ள பொருட்களை அற்பணித்தால் போதுமானது.

 

பிறந்தநாள்(திதி படி) வரும் கிழமை எற்ப,


ஞாயிறு(சூரியன்) = தேன்


திங்கள்(சந்திரன்) = பசும்பால்


செவ்வாய் = அகல் விளக்கு


புதன் = பச்சை இலைகள் எதுவாக இருந்தாலும் சரி(வில்வம் சிவனின் விருப்பமான இலை)


வியாழன்(குரு) = பூக்கள் எதுவாக இருந்தாலும் சரி (ஊமத்தை செடி பூ, எருக்கன் செடி பூ, சிவனின் விருப்பமான பூக்கள்)


வெள்ளி(சுக்கிரன்) = அன்னம் அல்லது பழங்கள் எதுவாக இருந்தாலும் சரி(ஊமத்தை, சிவனின் விருப்பமான பழம்)


சனி = ஊதுபத்தி அல்லது சாம்பிரானி(சந்தனம் அல்லது மல்லிகை மனம்)


நீங்கள் உங்கள் பிறந்த திதி வரும் கிழமை ஒவ்வொறு வருடமும் சிவன் கோவிலுக்கு சென்றால் அடுத்த பிறந்த நாள் வரும் வரை ஒரு வருடத்திற்கு எந்த தடைகளும் இல்லாமல் எல்லா நன்மைகளும் பெற்று வருவீர்கள்.இந்த பதிவிற்கு முந்தைய பதிவை தயவு செய்து முழுமையாக படியுங்கள். ஏன் எனில் அதன் தொடர்ச்சி தான் இப்பதிவு. வருக்கின்ற அணைத்து பிறந்த நாட்களையும் திதி படி ஜகன்நாத ஹோரா உதவியுடன் தெரிந்து கொள்ளுங்கள். 

சென்றைய பதிவில் நாம் பார்த்த உதாரண ஜாதகப்படி அவருடைய பிறந்த தேது மே 30, 2002, அடுத்த பிறந்த நாள் மே 26, 2016 அன்று வியாழக்கிழமை வருகிறது. எனவே அவர் பூக்கள் கொடுத்து லிங்க வழிபாடு செய்தால் தடைகள் வராமல் நல்ல பயணத்தை அடுத்த ஒரு வருடம் கழிப்பார்.


யதார்தத்தில் நாம் திதி படி பிறந்தநாளை கேக் வெட்டி, மிட்டாய் கொடுத்து கொண்டாடாவிடினும் நாம் சிவன் கோவில் சென்று மேற்குரிய விஷயங்களை செய்தாலே போதுமானது. நீங்கள் வேண்டுமானல் நாம் இது நாள் வரை மேற்கத்திய முறைபடி கொண்டாடும் பிறந்த நாளை எப்போதும் போல் கொண்டாடி கொள்ளலாம். திதி என்பது சூரியன் மற்றும் சந்திரனுக்கு உண்டான இடைவெளியாகும்.

திதியின் பெயர்களை இந்த விக்கி லிங்கின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.


https://ta.wikipedia.org/wiki/திதி


இன்னும், உங்ககுக்கு எதோ ஒரு கிரகத்தினால் துன்பங்கள் விளைகிறது என்று தெரிந்தால் கீழே உள்ள லிங்கின் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் உங்கள் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொண்டு கவசங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். https://www.facebook.com/horoscience அல்லது 

மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 

[email protected]
- Karthik. RWednesday 2 December 2015

When is my next Birthday - என் அடுத்த பிறந்த நாள் எப்போது ?

Birthday each year should be celebrated according to the Tithi one is born


Many of us are celebrating our yearly birthday on a wrong date. Why ? Because we are following English Solar Calendar instead of Indian Lunar Calendar.

For ex., If a person was born on May 30, 2002. Each year he/she celebrates their birthday on May 30, which is totally wrong. As according to Solar calendar it is celebrated, mostly in the western countries people celebrate on that day as only SUN in the horoscope will come to the exact point each year on the particular birth date. SUN represents FATHER, only father is not enough for creating us. MOTHER is also needed. Thus Lunar Calendar/Indian Calendar should be followed.

When does the exact Birthday occur each year ?

To know this, you should first know your Birth Tithi. Tithi is distance between SUN and MOON. When Sun and Moon are together it is called AMAVASYA TITHI(New Moon). Similarly when the Sun and Moon are 12 degrees apart, there comes next Tithi. There are 16 Tithis, in which 14 Tithi’s repeat itself after AMAVASYA and PURNIMA for each day constituting 30 Tithis per month, hence we have 30 days in a month. Tithi in spiritual sense is the relationship between the Father and Mother. Ie., between Shiva and Sakthi. Each Tithi represents each kind of relationship. There are 30 kinds of relationship. When Sun and Moon are 180 degree apart from each other it is called PURNIMA(Full Moon).

Whenever your birth Tithi comes in the month you are born in each year that is the day you need to celebrate your birthday.

Look at the example horoscope. Person born on May 30, 2002. Look at the Birth Tithi highlighted and shown below in the horoscope. The person is born on Krishna Panchami, which is Panchami Tithi. Similarly, anyone can know their Birth Tithi using Jagannatha Hora.

Tithi, திதி, horoscience
(Click to Enlarge)


Note: Here Krishna means Dark Fortnight(waning moon) and Sukla means Bright Fortnight(waxing moon).


To find out the exact birthday each year, which means to locate your Birth Tithi each year, use “Tithi Pravesha” Tab in Jagannatha Hora and find out. See the example below.

Open your chart in Jagannatha Hora and Click on "Tithi Pravesha" Tab
Then click on find "Tithi Pravesha Chart".
You can change the year for which you need to know the birthday to celebrate it.

Tithi, திதி, horoscience
(Click to Enlarge)
  
In the above chart we can see clearly that the exact birthday of the person was to be celebrated on June 7, 2015 instead of May 30, 2015 Look at the birth Tithi which is Panchami Tithi which is exactly the same as natal chart. Since this year his birthday was passed and sure he wouldn’t have celebrated it correctly. We will check for next year 2016, when does it actually come.

Just change the year to 2016 and click in “Find Tithi Pravesha Chart” button.

Tithi, திதி, horoscience
(Click to Enlarge)

So next year he should celebrate his birthday on May 26, 2016 instead of May 30, 2016.

Why this difference occurs each year. Actually speaking, you will not see any difference if Lunar Calendar is followed. Mostly in India this calendar is followed for the celebration of God Avatar’s Birthday’s like Krishna Ashtami, as Lord Krishna was born on Ashtami Tithi which is the 8th Tithi and Rama Navami as Lord Rama was born on Navami Tithi 9th Tithi. And all other God Avatars birthdays are also celebrated in this manner as a festival. Luckily for normal people the Birth Tithi is considered only for mourning/pitru ceremonies after his/her death each year.

Thus we have to stop celebrating on the same date each year following the Solar Calendar(365.25 days). And please celebrate on the day exactly your Birth Tithi comes as per Lunar Calendar(30x12=360 days). 30 types of Tithis hence 30 days per month which constitutes 360 Tithi days per year.

In the next post we will see the importance of celebrating birthday as per your Birth Tithi and how to find out and determine the year ahead will be either good or bad and what remedies should be done each year on your true Birthday(Tithi)

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below button or link.


(Or)

Send a facebook message to 
Or email [email protected]

Tithi, திதி, horoscience
பிறந்தநாளை ஒருவர் தான் பிறந்த திதியில் கொண்டாட வேண்டும்

என் அடுத்த பிறந்த நாள் எப்போது ?


நாம் நமது பிறந்த நாளை தவறான தேதியில் கொண்டாடி வருகிறோம். ஆம் ஒருவர் பிறந்தது மே 30, 2002 எனில் அவர் தனது பிறந்த நாளை வருடாவருடம் மே 30 அன்று கொண்டாடுவார் அது முற்றிலும் தவறு. ஏனேனில் சூரிய நாட்காட்டி படி அது கொண்டாடபடுகிறது, மேற்கத்தியர்களால் பின்பற்றபடுவது. அந்த நாள் அன்று சூரியன் மட்டும் தான் நமது ஜாதகத்தில் இருப்பது போல் அதே இடத்திற்கு வருடம் தோறும் வரும். அந்த நாளில் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது சரியில்ல. சூரியன் மட்டுமா,  அதவாது தந்தை மட்டுமா நமது பிறப்பிற்கு காரணமாகிறார். இல்லவே இல்லை, தந்தையும் தாயும் இணைவதனாலையே நமது பிறப்பு நிகழ்கிறது, அதற்காக தான் சந்திர நாட்காடியை பயன் படுத்த வேண்டும்.


சரியான பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் எப்போது வரும் ?


இதற்கு நீஙகள் பிறந்த திதி எது என்று முதலில் தெரிந்து வைத்து கொள்ளவேண்டும். ஆம், திதி என்பது சூரியனுக்கு சந்திரனுக்கும் உள்ள இடைவேளி. அதாவது சூரியனும் சந்திரனும் சேர்ந்திருந்தால் அன்று அமாவாசை. பின்பு சுக்கில பட்சம் ஆரம்பம், அதாவது 12 பாகை இருவருக்குமான இடைவேளி இருந்தால் முதல் திதியான பிரதமை வரும்,
பின்பு துவிதியை அப்படியே 180 பாகை இடைவேளி வந்து விட்டால் பௌர்ணமி வந்து விடும், மிண்டும் கிருஷ்ண பட்சம் ஆரம்பம்மாகி பிரதமை, துவிதியை திருதியை வரும்.


ஆண்மீக ரீதியாக பார்த்தால், திதி என்பது ஒரு உறவு முறை. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கு உண்டான உறவு. அதாவது சிவனும் பார்வதியும் சேர்ந்திருக்கும் போது இப்புவியில் உயிர்கள் உருவாகின்றன. அவர்கள் தானே நம் எல்லோருக்கும் தந்தையும், தாயுமாக உள்ளனர். ஆக 30 திதிகள் 30 வகையாக உறவுகள், எனவே ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்.


நீங்கள் பிறந்த திதி நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் ஒவ்வொரு வருடம் வரும் நாள் தான் உண்மையான பிறந்த நாள் தினம், அன்று உங்கள் பிறந்த நாளை கொண்டாடுவது மிகவும் சிறப்பு.


உதாரண ஜாதகத்தை பாருங்கள். மே 30, 2002 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். கீழே உள்ள படத்தில் பாருங்கள், ஜகன்நாத ஹோரவை பயன்படுத்தி நீங்கள் எளிதாக உங்கள் பிறந்த திதியை தெரிந்து கொள்ளலாம். இந்த ஜாதகர் பிறந்த திதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் கிருஷண பஞ்சமியில் பிறந்துள்ளார். அதாவது தேய்பிறை பஞ்சமியில் பிறந்துள்ளார்.

Tithi, திதி, horoscience
(Click to Enlarge)


குறிப்பு: இங்கே சுக்கில பட்சம் என்பது வளர்பிறை நாட்கள், கிருஷ்ண பட்சம் என்பது தேய்பிறை நாட்கள்.ஒவ்வொரு வருடமும் வரும் சரியான பிறந்த நாளை எளிதில் கண்டுபிடிக்க ஜகன்நாத ஹோராவில் திதி பிரவேஷா எனபதை பயன்படுத்த வேண்டும். உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோரவில் திறவுங்கள்.


பின்பு "Tithi Pravesha" என்பதை கிளிக் செய்யவும்.

பின்பு "Tithi Pravesha Chart" என்பதை கிளிக் செய்யவும்.

எந்த வருடத்திற்கு பார்கக வேண்டுமோ அந்த வருடத்தை டைப் செய்யுங்கள்.


கீழே உள்ள படத்தை பாருங்கள்.

Tithi, திதி, horoscience
(Click to Enlarge)


எனவே மேலே உள்ள படத்தில் நாம் தெளிவாக காணலாம், அதாவது இந்த வருடம் அவரது பிறந்த நாள் ஜுன் 7 ஆம் தேதி கொண்டடியிருக்க வேண்டும், மே 30 அல்ல. ஏன் என்றால் அவரது பிறந்த திதியையும் ஜுன் 7 அன்று உள்ள திதியையும் கவணியிங்கள் பஞ்சமி திதி என்று சரியாக வருகிறது.

இவர் கண்டிப்பாக தவறாகத்தான் இந்த வருடம் கொண்டாடியிருப்பார். சரி அடுத்த 2016 ஆம் ஆண்டு இவரது பிறந்தநாள் எப்போது கொண்டாட வேண்டும் என்று பார்ப்போம். 2016 என்று மாற்றம் செய்த பின்பு "Tithi Pravesha Chart" என்பதை கிளிக் செய்யவும்.

Tithi, திதி, horoscience
(Click to Enlarge)


எனவே அடுத்த பிறந்த நாள் மே 26, 2016 அன்று வருகிறது.

ஏன் இத்தனை மாற்றம் தேதியில், உண்மையாக பார்த்தால் எந்த மாற்றமும் இல்லை, அதாவது சந்திர நாட்காட்டியை பயன்படுத்தும் வரை, ஏன் என்றால் தமிழ் மாதத்தில் 30 நாட்கள் 30x12=360 நாட்கள் ஒரு வருடம். ஆனால் நாம் ஆங்கில நாட்காட்டி பயன்படுத்துவதால் தான் இத்தனை குழப்பம். உதாரணத்திற்கு நாம் சில விஷயங்களில் சரியாகத்தான் உள்ளோம் அதாவது கடவுளின் அவதார நாட்களை சரியாக கொண்டாடுகிறோம், கிருஷ்ணரின் பிறந்தநாளை அஷ்டமி திதி அன்றும் ராமரின் பிறந்தநாளை நவமி திதி அன்றும் கொண்டாடி மகிழ்கிறோம். சாதரன மக்களின் பிறந்த திதி இறந்த பிறகு வருடாவருடம் பித்ரு திதி சடங்குகளுக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். 


எனவே மேற்கத்தியரை போன்று ஆங்கில நாட்காட்டி படி பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை நிறுத்தி கொண்டு சரியான சந்திரா நாட்காட்டி/இந்திய‌ நாட்காட்டி, அதாவது பிறந்த திதி படி கொண்டாடுங்கள்.


அடுத்த பதிவில், திதி படி பிறந்த நாள் விழாவை கொண்டுவதனால் வரும் பயன்கள், மற்றும் அந்த வருடத்தில் நடக்கும் பலா பலன்கள் நனமை அல்லது தீமை உண்டாக்கும் வருடாமா என்பது எப்படி பார்ப்பது போன்ற விஷயங்கள் மற்றும் அதற்கு நாம் என்ன வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]


- Karthik. R


Wednesday 25 November 2015

Build your Immunity 2015 - எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள் 2015


horoscience, neem tree
Sri Karuvurar Siddhar(Mystic/Hermit) - painting from Tanjore, Tamilnadu


               In order to achieve things in this world we should be alive. To be alive we should be healthy.  To be healthy our IMMUNE SYSTEM, the defending mechanism in our body should be built up strong. How is that possible ?

               It is possible in an easy way. In the books written by Siddhars, the great Tamil Mystics. They have a solution for turning their bodies into super immunity, so that they can be free from diseases and do their research from alchemy to astronomy without bodily suffering. They achieved this some 2000 years back. 

               So it possible for people like us. Yes, in their medicinal research books they have mentioned. Usually Siddhars or Tamil Mystics used to write their findings with the grace of Lord Muruga in Tamil Langauage and also as poems. One such poem deal with this topic.

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
   தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
   வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
   இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
   அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.(Karuvurar)

            
As it is given in Tamil Language, I will write up here the instructions given in the poem on what to do to get immunity.

Medicine: Indian Neem Tree Leaf. (not the grown green leaf but the brown tender leaf usually seen in the tip of the bark).

Day: On Nov 27 or Nov 30, 2015 one should pluck 5 to 6 fresh brown leaves from the neem tree, which has more juice in it and eat it raw anytime between 6.00 a.m to 10.00 a.m before taking any breakfast or hot drinks.

How many days to continue: For a total of 27 days one should eat it like said above.
If you start on Nov 27, 2015 you can continue till Dec 23, 2015
or
If you start on Nov 30, 2015 you can continue till Dec 26, 2015

This is the only simple solution. Many of you might ask why on Nov 27 and 30, 2015. It is because on the day of Nov 27, 2015, Mrigasirisha nakshatra/asterism shows up and on Nov 30, 2015 Pushya nakshatra/asterism shows up. If you can check in Indian calendar you will find it. 

It is only said that on the tamil lunar month of Karthiga in mrigasirisha nakshatra or on pushya nakshatra one should start eating the tender neem leaves continuing up to 27 days.  Nov 27 and 30, 2015 are those days according to solar calendar. For each year it might be different in solar calendar.

The Siddhars call this as Vembu karpam. Vembu means neem, karpam means medicine. Karuvurar siddhar explained this in his medicinal treatise.

Try it and don’t miss the day because you will have to wait for one more year to do this.

************************************************
For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.(Or)

Send a facebook message to 
horoscience, neem tree
I believe that the readers of the blog around the world could find this tree in their country


உலகத்தில் நாம் நமது கடமைகளை செய்ய நாம் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருக்க நாம் உடல் வலிமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வேண்டும். 


எப்படி அதை செய்வது, அது சாத்தியமா ? சாத்தியம் தான்.
நமது தமிழ் சித்தர்கள் அதற்கு பாடல்களாக தங்கள் கண்டுபிடிப்புகளை இயற்றியுள்ளனர்.

 

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
      தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
      வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
      இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
      அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.


கருவூரார் சித்தர் கூறுவது போல், கார்திகை மாதத்தில் வரும் மிருகசிரிசம் அல்லது பூசம் நட்சத்திர நாளில் வேப்ப மர இலை கொகழுந்தை கிள்ளி தொடர்ந்து 27 நாட்களுக்கு மென்று சாப்பிட்டு வர, உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

வரும் நவம்பர் 27 ஆம் தேதி மிருகசிரிசம் நட்சத்திரம் வருகிறது, 30 ஆம் தேதி பூச நட்சத்திரம் வருகிறது.

ஆகவே , நவம்பர் 27 அல்லது 30 ஆம் தேதி ஆரம்பித்து 27 நாட்கள் தொடர்ந்து காலையில் உணவுக்கு முன் 6.00 - 10.00 மணிக்குள் நல்ல நீர் பதம் உள்ள வேப்பங் கொழுந்த்தை மென்று உண்டு வரவும்.நவம்பர் 27, 2015 ஆரம்பித்தால் டிசம்பர் 23, 2015 வரை சாப்பிடலாம்
நவம்பர் 30, 2015 ஆரம்பித்தால் டிசம்பர் 26, 2015 வரை சாப்பிடலாம்


இது வேம்பு கற்பகம் என்று சித்தர்களால் சொல்லப்படும். முயற்சி செய்யுங்கள், இல்லை என்றால் அடுத்த வருடம் கார்த்திகை மாதம் வரை காத்திருக்க வேண்டும்.


********************************************************************

உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4


(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]


- Karthik. R

Saturday 14 November 2015

Uccha and Neecha Grahas - உச்சம் மற்றும் நீச்ச கிரகங்கள்


Goddess Durga Devi


Uccha means Exalted. The planet is said to have full strength or can give better results.
Neecha means Debilitated. The planet is said to have no strength or cannot give any good result.

If in a horoscope if any planet is exalted, then it means that particular horoscope has blessings of Lord Vishnu. For ex., if moon is exalted, it means blessing of Lord Krishna is present.

Exalted or Uccha graha also means that the planet is in Hyperactive state. Sometimes it may also give worst results based on its position and relationship with other planets. Hence worshipping the corresponding avatar of Vishnu will give good results. In Kali yuga, just chanting the name of the god itself is a great worship only.


In the below, two tables are given.

- The first table shows the exalted planets and corresponding avatars of Lord Vishu.


- The second table shows the debilitated planets and corresponding Dasa Mahavidhyas to be worshipped to get favourable results of planets.

dasa avatars, horoscience
(Click to Enlarge)


Lagna is represented as life force and hence represents new beginning by Kalki Avatar, similarly Goddess Bhairavi.

Maatangi  or Shyamala are the powerful forms of Goddess Saraswati. Maatangi, this name came so because She is praised as the daughter of Matanga Rishi/Munivar.

So, if any planet is neecha or debilitated in a chart, worshipping the corresponding Devi forms will give better results.

Many of us still do not know about these Dasa Mahavidhya or 10 Devi forms of Durga or Parasakthi. They are the 10 great Cosmic powers required for procreation.  These 10 powers are eternal and exist forever. Even Parvati Devi born as human to Parvata Raja, had to undergo various penances with the help of Lord Shiva to attain these great 10 cosmic powers and become the Mother Goddess of all and spouse of Lord Shiva.

Click here the below links to download the books on 10 Mahavidhyas. List of 3 books.

Ten Cosmic Powers - Download
Ten Mahavidhyas - Download
Tantric Visions of Divine Feminine - Download

These books will explain all about the worship and the 10 forms of Mahavidhyas(Cosmic Powers) briefly. Very rare books. Please download and keep it safe.

Still if you are not able to follow the rituals or mantra chanting for the neecha planets in your horoscope. You can still wear Planetary Kavach for benefic results.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscienceLord MahaVishnu


உச்சம் என்றால், கிரகம் முழு பலத்துடன் இருக்கிறது அல்லது சுப பலன்களை கொடுக்கும் என்று பொருள்.


நீச்சம் என்றால், கிரகத்திற்கு பலம் இல்லாமல் இருப்பது, அல்லது எந்த ஒரு சுப பலன்களையும் கொடுக்க இயலாத நிலை என்று பொருள்.ஒரு ஜாதகத்தில் ஏதேனும் கிரகம் உச்சம் பெற்றால், அந்த ஜாதகம் மகாவிஷ்ணுவின் ஆசியை பெற்றது என்று பொருள். உதாரணத்திற்கு, சந்திரன் உச்சம் என்றால், கிருஷ்ணரின் அருள் உண்டு.உச்ச கிரகம் என்றால் அக்கிரகம் மிகவும் சுறுசுறுப்பாக உயர்ந்த இயக்கத்தில் இருக்கிறது, அதனால் சில சமயம் அக்கிரகம் அமர்ந்த இடம் மற்றும் வேறு சில கிரகங்களின் தொடர்பால் கெடுதல் பலன்களையும் கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே அக்கிரகத்திற்கு எற்ற விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவரை நாம் வழிபட்டு வந்தால் நல்லது. கலியுகத்தில் வெறும் கடவுளின் நாமத்தை கூறினாலே பெரும் வழிபாடுதான்.கீழே இரண்டு அட்டவனைகள் கொடுக்கப்பட்டுள்ளது,


- முதல் அட்டவனையில் உச்ச கிரகங்களும் அதற்கு ஏற்ப‌ விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் நாமங்களும் கொடுக்கபட்டுள்ளது.- இரண்டாவது அட்டவனையில் நீச்ச கிரகங்களும் அதற்கு ஏற்ப தசமகாவித்யா அதாவது பராசக்தியின் பத்து அவதாரங்களை வழிபடுவதன் மூலம், நீச்ச கிரகங்களின் சுப பலன்களை பெற இயலும்.
dasa avatars, horoscience
(Click to Enlarge)லக்னம் என்பது உயிர் அதனால், கல்கி அவதாரம் லக்னத்தை குறிக்கிறது, அதேபோது பைரவி தேவியும் லக்னத்தை குறிக்கிறார்.


மாதங்கி அல்லது ஷியாமளா, சரஸ்வதி தேவியின் உயர் நிலை சக்தி. மாதங்கி என்ற பெயர் வர காரணம், அவர் மதங்க முனிவரின் பெண் ஆதலால்.


எனவே, எதாவது கிரகம் ஜாதகத்தில் நீச்சம் பெற்றிருந்தால், பராசக்தியின் 10 அவதாரங்களை அதாவது கிரகத்திற்கேற்ப 10 தேவி அம்சங்களுள் ஒருவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.


நம்மில் நிறைய பேருக்கு, தசமகாவிதயா அதாவது தேவியின் பத்து அம்சங்களை பற்றி தெரியாது. இந்த அம்சங்கள் பிரபஞ்சத்தில் 10 ஆதார சக்திகள். என்றும் எங்கும் நிறைந்து இருப்பவை. பார்வதி தேவி மானுட பெண்ணாக பர்வத ராஜனுக்கு பிறந்த போது, நிறைய தவங்கள் சிவனின் ஆசியுடன் செய்து இந்த பத்து ஆதார சக்திகளை தனக்குள் பெற்று பின்பு பராசக்தியானாள். சிவனின் சரிபாதியாகி, நமக்கெல்லாம் தாய் ஆனாள்.


கீழே உள்ள லிங்கில் 10 தசமகாவித்யாகளை பற்றிய புத்தகங்கள் உள்ளன. மொத்தம் 3 புத்தகங்கள். தமிழில் இல்லை, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.


பத்து பிரபஞ்ச சக்திகள்பதிவிறக்கவும்


பத்து மகாவித்யா - பதிவிறக்கவும்


தெய்வீக பெண்மையின் தந்திர தரிசனங்கள் - பதிவிறக்கவும்

இந்த புத்தகங்களில், தசமகாவித்யாகளின் மந்திரங்கள், எந்திரங்கள், அவர்களின் சக்தியின் விளக்கங்கள் மிக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிதான புத்தகங்கள். பதிவிறக்கி பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்.

நீச்ச கிரகங்களுக்கு வழிபாடு செய்ய இயலவில்லை என்றால், நீச்ச கிரகத்திற்குரிய‌ கிரக கவசங்களை அணிந்து கொள்ளலாம். நற்பலன்கள் கிடைக்கும்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]
- Karthik. R


Friday 30 October 2015

Remedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்

Goddess Gaja Lakshmi - Goddess of Wealth, Luck https://en.wikipedia.org/wiki/Gajalakshmi

In the previous post we have seen how to find out the planet which gives money and wealth. This method is explained by Pt. Sanjay Rath in his videos at sohamsa.com. Click here to Read previous post.

In this post, we will see simple remedies for the money giving planet if it is weak in horoscope.

In order to do the remedy we need to determine either we should worship and offer to Lord Shiva or Goddess Shakti. Because,
Shiva represents Sun = Father
Shakti represents Moon = Mother

We need to know to whom we should offer our prayer either to Father or Mother.

First we have to find, in which hora we were born. There are 2 horas viz., Sun and Moon. Every one of us has been born in anyone of these two horas.

So, I will show you an example horoscope using Jagannatha Hora to know in which hora one has taken birth.

Look at the example chart below.

We need to choose Hora(D2) chart instead of Navamsa(D9)
“Right Click” anywhere in Navamsa chart and click on “Hora(D-2)”. Look at the image below.And now again “Right Click” anywhere in Hora Chart and move the cursor over “Choose Hora(D-2)” -----> and select “Traditional Parasara hora(only Cn & Le)” option.Now you will get the Hora chart as shown below. Since there are only 2 horas, all the planets are placed in Sun and Moon’s house ie., in Cancer/Kataka and Leo/SimhaHere we need to look at the Asc/Lagna, where it is placed. Is it placed in Moon or Sun. In the example chart Asc/Lagna is placed in Sun’s house. Hence the person is born in Sun’s hora.

Sun is Shiva. Hence the remedies are in the form of worshipping and offering to Lord Shiva, the Ultimate Father.

So, according to the example horoscope as we have seen in the earlier post(click here to read), wealth giving planets are Mars and Moon. Here Moon is the gatherer of Money as Mars is in Moon’s house kataka/cancer. So moon should be strong to collect and give money. Hence remedy of Moon is done to Lord Shiva. In the example horoscope both the planets has exchanged its houses forming Parivatana Yoga and hence they are strong. But let us assume they are weak. Suppose if Moon is weak,

For Moon, Milk Abisheka is to be done to Lord Shiva, as he is born is Sun’s hora. At least once a week the person can donate milk to Abisheka for Shiva in temple.

Suppose, if the person is born in Moon’s hora, he should offer milk to Goddess Shakti.

Even if you do not know in which Hora you were born, It is always better to go to nearest Shiva Temple and offer the items and worship the Shiva Linga. Shiva Linga itself represents both Shiva and Shakti, Father and Mother.
Similarly, for each planet the offering should be made are given below,

Sun = Honey
Moon = Milk
Mercury = Green Leaves (Vilva, Shiva’s favourite)
Venus = Food or Fruits (Datura fruit, Shiva’s favourite)
Jupiter = Flowers (Datura or Crown flower,  Shiva’s favourite)
Saturn = Incense Sticks or Fragrance product(Sandal or Jasmine sticks, Sambarani)
Mars = Lamps

These are the only simple remedies available. Follow it once in a week in Shiva Temple. You will see the changes.

Find out the wealth giving planets in your horoscope using the excel file given previous post. Read it, understand it and use it. If any doubt email to [email protected]

Besides these remedies you can also wear gemstones for the respective planet. I personally don’t recommend gemstones. You can wear Kavach for respective planets according to your horoscope.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.


(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email [email protected]


சென்றயை பதிவில் நாம் எந்த கிரகங்கள் செல்வம், பணத்தை பெற்று தரும் என்பதை பற்றி பார்ப்போம். இந்த முறையை பற்றி பன்டித சஞ்ஐ ரத் அவர்கள் தமது sohamsa.comஇணையதளத்தில் விவரித்துள்ளார். சென்றைய பதிவை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.


இந்த பதிவில் செல்வம் தரக்கூடிய கிரகங்கள் பலமற்று இருந்தால் அதற்குன்டான சில எளிய வேண்டுதல் முறைகளை பார்ப்போம்.


வேண்டுதல் முறைகளை அறிவதற்கு முன் நாம் யாரிடம் வேண்டுவது என்று அறிவது அவசியம். அதாவது சிவனிடமா அல்லது அம்பாளிடமா.
சிவன் சூரியனை குறிப்பவர் = தந்தை
அம்பாள் சந்திரனை குறிப்பவர் = தாய்


எனவே நாம் தந்தையிடம் வேண்டுவதா அல்லது தாயிடம் வேண்டுவதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.


அதற்கு நாம் எந்த ஹோராவில் பிறந்தோம் என்பதை அறிய வேண்டும். இரண்டு ஹோராக்கள் உண்டு. அவை சூரியன் மற்றும் சந்திரன். நாம் அனைவரும் இந்த இரண்டில் எதேனும் ஒன்றில் தான் ஜெனித்திருக்க வேண்டும்.


இங்கே ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஜகன்நாத ஹோரா மென்பொருள் மூலம் எவ்வாறு ஒருவர் பிறந்த ஹோராவை கண்டுபிடிப்பது என்பதை பார்ப்போம்.


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.


நாம் நவாம்ச அட்டவனைக்கு பதிலாக ஹோரா அட்டவனையை மாற்ற வேண்டும்.


நவாம்ச கட்டத்தின் மேல் "வலது கிளிக்" செய்யவும், பின்பு "Hora(D-2)" என்பதை கிளிக் செய்யவும்.


கீழே உள்ள படத்தை பாருங்கள்.
பின்பு மறுபடியும் ஹோரா அட்டவனை மீது "வலது கிளிக்" செய்யவும், பின்பு "Choose Hora(D-2)" மீது மெளஸை வைத்து "Traditional Parasara hora(only Cn & Le)" என்பதை கிளிக் செய்யவும்.
கீழே உள்ளது போல் ஹோரா அட்டவனை காண்பிக்கபடும். 
இரண்டு ஹோரைகள் தான் உள்ளதால் எல்லா கிரகங்களும் சூரியன் அல்லது சந்திரனின் வீட்டில் அதாவது கடகத்தில்
அல்லது சிம்மத்தில் அமர்ந்திருக்கும்.


இங்கே நாம் லக்னம் எங்கே உள்ளது என்பதை பார்க்க வேண்டும். சூரியன் வீட்டிலா அல்லது சந்திரன் வீட்டிலா என்று. உதாரண ஜாதகத்தில் லக்னம் சூரியன் வீட்டில் அமர்ந்திருக்கிறது. எனவே இந்த ஜாதகர் சூரியனின் ஹோராவில் பிறந்துள்ளார்.


சூரியன் சிவன். எனவே சிவனிடம் வேண்டுதல்களை செய்ய வேண்டும். ஏனேனில் சிவன் தானே நம் எல்லோருக்கும் தந்தையாகிறார். எனவே, உதாரண ஜாதகத்தில் சென்றய பதிவின்(வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்) அடிபடையில் பார்க்கும் போது பணம் தரும் கிரகங்கள் செவ்வாய் மற்றும் சந்திரன். சந்திரன் தான் பணத்தை சேகரிப்பவர், ஏன்னென்றால் செவ்வாய் சந்திரன் வீடான கடகத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே பணம், செல்வத்தை கொடுக்க சந்திரன் வலுவாக இருக்க வேண்டும். ஆகவே சந்திரனுக்கான வேண்டுதல்களை சிவனிடத்தில் செய்ய வேண்டும். இந்த உதாரண ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் பரிவர்தனையாகி யோகம் பெற்றுள்ளனர் ஆக வலுவாகத்தான் உள்ளனர். 

உதாரணதிற்கு சந்திரன் வலுவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆம் சந்திரனுக்குரியது பால், எனவே சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். என்னென்றான் ஜாதகர் சூரியன் ஹோராவில் பிறந்ததால், தந்தைக்கு அதாவது சிவனுக்கு செய்து வணங்கிவர வேண்டும். வாரம் ஒரு முறையாவது இவ்வாறு செய்ய வேண்டும்.

ஒருவேளை, ஜாதகர் சந்திரனின் ஹோராவில் பிறந்திருந்தால், அம்பாக்ளுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.


உங்களுக்கு எந்த ஹோராவில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியவில்லை என்றால், நீங்கள் சிவன் கோவில் சென்று சிவலிங்கத்திற்கு வேண்டுதல்களை செய்தாலே போதுமானது. ஏன் என்றால் சிவலிங்கமே, சிவனும் அம்பாளும் தான், தாயும் தந்தையும்.
சிவலிங்கத்திற்கு படைக்க வேண்டிய ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய பொருட்கள்.


சூரியன் = தேன்
சந்திரன் = பால்
புதன் = பச்சை இலைகள் எதுவாக இருந்தாலும் சரி(வில்வம் சிவனின் விருப்பமான இலை)
சுக்கிரன் = அன்னம் அல்லது பழங்கள் எதுவாக இருந்தாலும் சரி(ஊமத்தை, சிவனின் விருப்பமான பழம்)
குரு = பூக்கள் எதுவாக இருந்தாலும் சரி (ஊமத்தை செடி பூ, எருக்கன் செடி பூ, சிவனின் விருப்பமான பூக்கள்)
சனி = ஊதுபத்தி அல்லது சாம்பிரானி(சந்தனம் அல்லது மல்லிகை மனம்)
செவ்வாய் = அகல் விளக்கு


இவை தான் எளிய முறை வழிபாடுகள் மற்றும் வேண்டுதல்கள். சிவன் கோவிலில் வாரம் ஒரு முறையாவது இதனை கடைபிடியுங்கள். நீங்கள் மாற்றம் காண்பீர்கள்.


உங்கள் ஜாதகப்படி பணம், செல்வம் தரும் கிரகம் எது என்பதை சென்றைய பதிவில் உள்ள எக்ஸல் கோப்பை கொண்டு அறிந்து கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.


இந்த வேண்டுதல் முறைகள் தவிர, கிரகத்திற்கேற்ப ரத்தின கற்கள் அணியலாம், ஆனால் நான் பெரும்பாலாக கற்களை அணிய யாரையும் ஊக்குவிப்பதில்லை, வேண்டுமென்றால்
கிரகத்திற்கேற்ப கவசங்களை அணியலாம்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected] 


- Karthik. R