New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 30 October 2015

Remedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்

Goddess Gaja Lakshmi - Goddess of Wealth, Luck https://en.wikipedia.org/wiki/Gajalakshmi

In the previous post we have seen how to find out the planet which gives money and wealth. This method is explained by Pt. Sanjay Rath in his videos at sohamsa.com. Click here to Read previous post.

In this post, we will see simple remedies for the money giving planet if it is weak in horoscope.

In order to do the remedy we need to determine either we should worship and offer to Lord Shiva or Goddess Shakti. Because,
Shiva represents Sun = Father
Shakti represents Moon = Mother

We need to know to whom we should offer our prayer either to Father or Mother.

First we have to find, in which hora we were born. There are 2 horas viz., Sun and Moon. Every one of us has been born in anyone of these two horas.

So, I will show you an example horoscope using Jagannatha Hora to know in which hora one has taken birth.

Look at the example chart below.

We need to choose Hora(D2) chart instead of Navamsa(D9)
“Right Click” anywhere in Navamsa chart and click on “Hora(D-2)”. Look at the image below.



And now again “Right Click” anywhere in Hora Chart and move the cursor over “Choose Hora(D-2)” -----> and select “Traditional Parasara hora(only Cn & Le)” option.



Now you will get the Hora chart as shown below. Since there are only 2 horas, all the planets are placed in Sun and Moon’s house ie., in Cancer/Kataka and Leo/Simha



Here we need to look at the Asc/Lagna, where it is placed. Is it placed in Moon or Sun. In the example chart Asc/Lagna is placed in Sun’s house. Hence the person is born in Sun’s hora.

Sun is Shiva. Hence the remedies are in the form of worshipping and offering to Lord Shiva, the Ultimate Father.

So, according to the example horoscope as we have seen in the earlier post(click here to read), wealth giving planets are Mars and Moon. Here Moon is the gatherer of Money as Mars is in Moon’s house kataka/cancer. So moon should be strong to collect and give money. Hence remedy of Moon is done to Lord Shiva. In the example horoscope both the planets has exchanged its houses forming Parivatana Yoga and hence they are strong. But let us assume they are weak. Suppose if Moon is weak,

For Moon, Milk Abisheka is to be done to Lord Shiva, as he is born is Sun’s hora. At least once a week the person can donate milk to Abisheka for Shiva in temple.

Suppose, if the person is born in Moon’s hora, he should offer milk to Goddess Shakti.

Even if you do not know in which Hora you were born, It is always better to go to nearest Shiva Temple and offer the items and worship the Shiva Linga. Shiva Linga itself represents both Shiva and Shakti, Father and Mother.




Similarly, for each planet the offering should be made are given below,

Sun = Honey
Moon = Milk
Mercury = Green Leaves (Vilva, Shiva’s favourite)
Venus = Food or Fruits (Datura fruit, Shiva’s favourite)
Jupiter = Flowers (Datura or Crown flower,  Shiva’s favourite)
Saturn = Incense Sticks or Fragrance product(Sandal or Jasmine sticks, Sambarani)
Mars = Lamps

These are the only simple remedies available. Follow it once in a week in Shiva Temple. You will see the changes.

Find out the wealth giving planets in your horoscope using the excel file given previous post. Read it, understand it and use it. If any doubt email to [email protected]

Besides these remedies you can also wear gemstones for the respective planet. I personally don’t recommend gemstones. You can wear Kavach for respective planets according to your horoscope.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.


(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email [email protected]






சென்றயை பதிவில் நாம் எந்த கிரகங்கள் செல்வம், பணத்தை பெற்று தரும் என்பதை பற்றி பார்ப்போம். இந்த முறையை பற்றி பன்டித சஞ்ஐ ரத் அவர்கள் தமது sohamsa.comஇணையதளத்தில் விவரித்துள்ளார். சென்றைய பதிவை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.


இந்த பதிவில் செல்வம் தரக்கூடிய கிரகங்கள் பலமற்று இருந்தால் அதற்குன்டான சில எளிய வேண்டுதல் முறைகளை பார்ப்போம்.


வேண்டுதல் முறைகளை அறிவதற்கு முன் நாம் யாரிடம் வேண்டுவது என்று அறிவது அவசியம். அதாவது சிவனிடமா அல்லது அம்பாளிடமா.
சிவன் சூரியனை குறிப்பவர் = தந்தை
அம்பாள் சந்திரனை குறிப்பவர் = தாய்


எனவே நாம் தந்தையிடம் வேண்டுவதா அல்லது தாயிடம் வேண்டுவதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.


அதற்கு நாம் எந்த ஹோராவில் பிறந்தோம் என்பதை அறிய வேண்டும். இரண்டு ஹோராக்கள் உண்டு. அவை சூரியன் மற்றும் சந்திரன். நாம் அனைவரும் இந்த இரண்டில் எதேனும் ஒன்றில் தான் ஜெனித்திருக்க வேண்டும்.


இங்கே ஒரு உதாரண ஜாதகம் கொண்டு ஜகன்நாத ஹோரா மென்பொருள் மூலம் எவ்வாறு ஒருவர் பிறந்த ஹோராவை கண்டுபிடிப்பது என்பதை பார்ப்போம்.


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.


நாம் நவாம்ச அட்டவனைக்கு பதிலாக ஹோரா அட்டவனையை மாற்ற வேண்டும்.


நவாம்ச கட்டத்தின் மேல் "வலது கிளிக்" செய்யவும், பின்பு "Hora(D-2)" என்பதை கிளிக் செய்யவும்.


கீழே உள்ள படத்தை பாருங்கள்.




பின்பு மறுபடியும் ஹோரா அட்டவனை மீது "வலது கிளிக்" செய்யவும், பின்பு "Choose Hora(D-2)" மீது மெளஸை வைத்து "Traditional Parasara hora(only Cn & Le)" என்பதை கிளிக் செய்யவும்.




கீழே உள்ளது போல் ஹோரா அட்டவனை காண்பிக்கபடும். 




இரண்டு ஹோரைகள் தான் உள்ளதால் எல்லா கிரகங்களும் சூரியன் அல்லது சந்திரனின் வீட்டில் அதாவது கடகத்தில்
அல்லது சிம்மத்தில் அமர்ந்திருக்கும்.


இங்கே நாம் லக்னம் எங்கே உள்ளது என்பதை பார்க்க வேண்டும். சூரியன் வீட்டிலா அல்லது சந்திரன் வீட்டிலா என்று. உதாரண ஜாதகத்தில் லக்னம் சூரியன் வீட்டில் அமர்ந்திருக்கிறது. எனவே இந்த ஜாதகர் சூரியனின் ஹோராவில் பிறந்துள்ளார்.


சூரியன் சிவன். எனவே சிவனிடம் வேண்டுதல்களை செய்ய வேண்டும். ஏனேனில் சிவன் தானே நம் எல்லோருக்கும் தந்தையாகிறார். எனவே, உதாரண ஜாதகத்தில் சென்றய பதிவின்(வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்) அடிபடையில் பார்க்கும் போது பணம் தரும் கிரகங்கள் செவ்வாய் மற்றும் சந்திரன். சந்திரன் தான் பணத்தை சேகரிப்பவர், ஏன்னென்றால் செவ்வாய் சந்திரன் வீடான கடகத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே பணம், செல்வத்தை கொடுக்க சந்திரன் வலுவாக இருக்க வேண்டும். ஆகவே சந்திரனுக்கான வேண்டுதல்களை சிவனிடத்தில் செய்ய வேண்டும். இந்த உதாரண ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் பரிவர்தனையாகி யோகம் பெற்றுள்ளனர் ஆக வலுவாகத்தான் உள்ளனர். 

உதாரணதிற்கு சந்திரன் வலுவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆம் சந்திரனுக்குரியது பால், எனவே சிவனுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். என்னென்றான் ஜாதகர் சூரியன் ஹோராவில் பிறந்ததால், தந்தைக்கு அதாவது சிவனுக்கு செய்து வணங்கிவர வேண்டும். வாரம் ஒரு முறையாவது இவ்வாறு செய்ய வேண்டும்.

ஒருவேளை, ஜாதகர் சந்திரனின் ஹோராவில் பிறந்திருந்தால், அம்பாக்ளுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.


உங்களுக்கு எந்த ஹோராவில் நீங்கள் பிறந்தீர்கள் என்று தெரியவில்லை என்றால், நீங்கள் சிவன் கோவில் சென்று சிவலிங்கத்திற்கு வேண்டுதல்களை செய்தாலே போதுமானது. ஏன் என்றால் சிவலிங்கமே, சிவனும் அம்பாளும் தான், தாயும் தந்தையும்.




சிவலிங்கத்திற்கு படைக்க வேண்டிய ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய பொருட்கள்.


சூரியன் = தேன்
சந்திரன் = பால்
புதன் = பச்சை இலைகள் எதுவாக இருந்தாலும் சரி(வில்வம் சிவனின் விருப்பமான இலை)
சுக்கிரன் = அன்னம் அல்லது பழங்கள் எதுவாக இருந்தாலும் சரி(ஊமத்தை, சிவனின் விருப்பமான பழம்)
குரு = பூக்கள் எதுவாக இருந்தாலும் சரி (ஊமத்தை செடி பூ, எருக்கன் செடி பூ, சிவனின் விருப்பமான பூக்கள்)
சனி = ஊதுபத்தி அல்லது சாம்பிரானி(சந்தனம் அல்லது மல்லிகை மனம்)
செவ்வாய் = அகல் விளக்கு


இவை தான் எளிய முறை வழிபாடுகள் மற்றும் வேண்டுதல்கள். சிவன் கோவிலில் வாரம் ஒரு முறையாவது இதனை கடைபிடியுங்கள். நீங்கள் மாற்றம் காண்பீர்கள்.


உங்கள் ஜாதகப்படி பணம், செல்வம் தரும் கிரகம் எது என்பதை சென்றைய பதிவில் உள்ள எக்ஸல் கோப்பை கொண்டு அறிந்து கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.


இந்த வேண்டுதல் முறைகள் தவிர, கிரகத்திற்கேற்ப ரத்தின கற்கள் அணியலாம், ஆனால் நான் பெரும்பாலாக கற்களை அணிய யாரையும் ஊக்குவிப்பதில்லை, வேண்டுமென்றால்
கிரகத்திற்கேற்ப கவசங்களை அணியலாம்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected] 


- Karthik. R



No comments:

Post a Comment