New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 16 December 2014

Saturn Transit (Sani Peyarchi), How to know the effect ? -- சனி பெயர்ச்சி பலன்களின் பலம் 16.12.2014

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014
Lord Bairavar (Guru of Lord Saturn/Sani)

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014
Lord Saturn, Saneeswaran, Shani Dev

Lord Saturn, as HE transits form Thulam/Libra to Virichika/Scorpio, people are ready to worship him on today 16/12/2014. Each and every temple where Navagraha’s(9 Planetary Gods)are  installed will be flooded with people all over Tamilnadu, India and also in all other states of India.

People are afraid of the Mighty Saturn as HE gives serious karmic retribution or obstacle in all daily functions when he transits in 12th,1st,2nd ,8th position from Moon in a horoscope chart.

When HE transits is 3rd,6th, 9th and 11th position from Moon’s Lagna HE bestows fortunes.
Rest of the other houses will show neutral effects.

I have seen many advertisement notices published everywhere to attend the rituals/puja to pacify the effects of planet Saturn. These make people very much frightened. Those who do not believe in astrology also participate in these rituals blindly due to his/her  fear of losing his business, family, income, children, health etc…

Below is the table for Saturn Transit’s General Good and Bad Effect for people born in different Moon Rasis/Signs.


Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014


Today in temples we can find the people who are born in signs or rasis for which Saturn gives bad effect. Here most of the people follow blindly without consulting an astrologer. Look how many signs are bad out of 12 rasis 4 rasis are worst. This happens every 2 ½ years for different Rasis. Roughly if you calculate for the State of Tamilnadu alone. The population is 7 Crore, divided by 12 gives  So doing on rough calculation atleast 2 Crore people if are born in these bad result giving Rasis. Think if 2 Crore people are facing problems due to Saturn what will happen. If it is for one state think about whole country and world. If Lord Saturn starts to punish all what will happen, all the activities will be shutdown.

This is what people think and are following blindly due to lack of knowledge in astrology.
There is a concept in Astrology called “Kocchara Vedhai or Koal chara vedhai” or Kocchara Vedh. In Tamil language Koal means Planet, Chara means Transit or movement. Vedhai means obstacle. So it means obstacle for transit planet. What kind of obstacle ? Obstacle in showing its effects or strength on particular houses.
Saturn’s Transit Obstacle places are given below. This should be seen from the house where Moon is placed.


Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014


For Ex.,
For a person born in Mesha/Areis Moon Rasi. The Saturn Transit on tomorrow will be in 8th house from Moon which is Ashtama Sani which will show bad effects. But, you should look at the table above for predicting the results of transit. For 8th house 7th house is Vedhai/Obstacle. So if any planet is present in 7th house it Saturn’s Transit cannot give Bad effects for the person.


Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014


Look at the above chart. Saturn’s Transit in 8th house from Moon would give bad and worse effects for a person till the Saturn moves to next house which will be after 2 ½ years approx. As Jupiter is placed in 7th house Saturn cannot give or show its bad effects to the person. Hence instead of blindly following the general rule one should look at his own chart whether he/she will affected by Lord Saturn.

Similarly with the help of the table you can check your own charts. Either Good or Bad effect, if the place indicated in the table has any planet, both the effects will not happen. It is said 3rd,6th, 9th and 11th places of Saturn’s transit will give good results but in practical one should look at the table and check whether any planet is present in the corresponding house for knowing the results. If any planet is present even the good effects will not take place.

There are also Obstacle/Kocchara Vedhai places for Jupiter, Rahu and Ketu and other planet transits also. As Saturn is transiting today and to enlighten people I am giving only the Saturn’s places. In next post I will post the complete table containing all planets.

Note: Astrologers please follow Kocchara Vedhai as it can be seen working practically in many horoscopes. I have checked it.


Lord Saturn, Saneeswaran, Shani Dev








இன்று சனி பெயர்ச்சி என்பதால், இந்த பதிவை அனைவரின் நன்மைக்காக பதிவிடுகிறேன்.


இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சனிஸ்வர பகவானை தரிசிக்க ஏராளமானோர் கலந்துக்கொள்வர். இதில் பலர் சனி பகவான் மீது கொண்ட அச்சத்தில் தான் கோயில்களுக்கு செல்கின்றனர்.


பொதுவாக சனி பகவான் சந்திர லக்னத்திற்கு 3,6,9 மற்றும் 11 ஆம் ஸ்தானங்களில் பெயர்ச்சியானால் மிக நற்பலன் என்றும், 1,2,8,12 ஆம் ஸ்தானங்களில் மிகவும் தீய பலன் என்றும், மீதமுள்ள ஸ்தானங்களில் சுமாரான பலன்களை கொடுப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதை மட்டும் நமது மக்கள் அறிந்து கொண்டு பயத்துடன் கோயில்களுக்கு செல்கின்றனர். 


தமிழ்நாடின் மக்கள் தொகை எழு கோடி என்றால், 7 கோடி மக்கள் பன்னிரெண்டு ராசிகள் என்றால், தோராயமாக ஒரு ராசிக்கு 58 லட்சம் வீதம் நான்கு ராசிக்காரர்களுக்கு கெடுதல் பலன்களை கொடுத்தால்
சுமார் 2 கோடி மக்களுக்கு தீய, கொடிய பலன் நடக்க வேண்டும், அவ்வாறு நடந்தால் நாடு என்னவாகும். யோசித்து பாருங்கள்.


கீழே அட்டவனையில் எந்த ராசிகளுக்கு எவ்வாறு பலன்கள் என் கொடுக்கபட்டுள்ளது. இதில் நான்கு ராசிகளுக்கு கெடுதல் பலன் என கொடுக்கப்பட்டுள்ளது.

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014



ஆனால் ஒருவர் தனது சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை வைத்துதான் கெடுதல் பலன்களை சனி பகவான் கொடுப்பாரா மாட்டாரா என்ற முடிவுக்கு வர வேண்டும். 


ஜாதக சாஸ்த்திரத்தில், "கோச்சார வேதை" என்ற ஒரு கோட்பாடு உள்ளது.
இதில் வேதை என்றால் தடை என்று பொருள். ஆக கோச்சார கிரங்களுக்கு எப்போது பலன்கள் கொடுக்க தடை என்பது பற்றி சொல்லிருக்கிறார்கள். அது நல்ல பலனாக இருந்தாலும் சரி தீய பலனாக
இருந்தாலும் சரி, தடை இருக்கிறது. அதை ஜாதகத்தில் எவ்வாறு பார்ப்பது.


கீழே உள்ள அட்டவனையை பாருங்கள்.

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014



உதாரண ஜாதகம்.

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014



இதில் சந்திரன் மேஷ ராசியில் இருக்கிறார். சனி பகவான் நாளை விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகி சுமார் 2 1/2 ஆண்டக‌ள் அங்கே வாசம் செய்வார். மேஷ ராசிக்கு எட்டாம் இடத்தில் வருவதால்
அஷ்டம சனி என்று கூறுவர். இந்த சனி பெறும் துன்பங்களை தரும். ஆனால் இந்த ஜாதகத்திற்கு சனி பகவானால் கெடுதல் செய்ய இயலாது.


ஏன் என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள கோச்சார தடை அட்டவனையை பாருங்கள். அங்கே சந்திரன் லக்னத்திற்கு எட்டாம் பாவத்தில் சனி பெயர்ச்சியானல், அதற்கு 7 ஆம் பாவம் தடை வீடு. ஆகும்.
எவ்வாறு தடை என்றால் 7 ஆம் வீட்டில் எதாவது ஒரு கிரகம் இருந்தால் சனி அவருடைய பலன்களை கொடுக்க இயலாது. இதற்கு பெயர் தான் கோச்சார வேதை அல்லது தடை.


மேலே உள்ள உதாரண ஜாதகத்தில், 7 ஆம் வீட்டில் குரு இருப்பதால் சனி பகவான் தனது அஷ்டமத்து சனியில் இன்னல்களை ஜாதகருக்கு கொடுக்க இயலாது.


இப்படித்தான் அவரவர் சுய ஜாதகத்தை கொண்டு கோச்சார வேதை ஸ்தானங்களை பார்த்து கோச்சார பலன் கூற வேண்டும்.
வீணாக பொது பலன்களை தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிக்கைகளிலோ பார்த்து படித்து விட்டு பீதியடைந்து பயத்தோடு சனிஸ்வரர்ரிடம் சென்று நிற்காதீர்கள். மாறாக பக்தியுடன் சென்று வழிபடுங்கள். பைரவர் தான் சனிஸ்வரர்ரின் குரு, ஆக பைரவர் வழிபட்ட பின் அவர் அருகில் இருக்கும் சனிஸ்வரர்ரை வழிபடுங்கள். பொதுவாக சிவன் கோயில்களில் அவ்வாறான அமைப்பு இருக்கும்.
சகல செல்வங்களையும் அருள்வார்.


கோச்சார வேதை மற்ற கிரகங்களுக்கும் உண்டு. அதை அடுத்த பதிவில் முழுமையாக தருகிறேன். இன்று சனி பெயர்ச்சி என்பதால் இதை முதலில் பதிவிடுகிறேன்.


குறிப்பு: ஜோதிடர்கள் இந்த வேதை ஸ்தானங்கள கணக்கில் கொண்டு பலன் கூறலாம். நான் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் பலன்களை பல ஜாதகங்களுக்கு பொருந்துகின்றன.

நான் இதை குடும்ப ஜோதிட நூல் இருந்து படித்து கற்றேன். புத்தகம் வாங்க நினைப்போர் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பிலிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கலாம்.


-Karthik. R