New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Wednesday 25 November 2015

Build your Immunity 2015 - எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள் 2015


horoscience, neem tree
Sri Karuvurar Siddhar(Mystic/Hermit) - painting from Tanjore, Tamilnadu


               In order to achieve things in this world we should be alive. To be alive we should be healthy.  To be healthy our IMMUNE SYSTEM, the defending mechanism in our body should be built up strong. How is that possible ?

               It is possible in an easy way. In the books written by Siddhars, the great Tamil Mystics. They have a solution for turning their bodies into super immunity, so that they can be free from diseases and do their research from alchemy to astronomy without bodily suffering. They achieved this some 2000 years back. 

               So it possible for people like us. Yes, in their medicinal research books they have mentioned. Usually Siddhars or Tamil Mystics used to write their findings with the grace of Lord Muruga in Tamil Langauage and also as poems. One such poem deal with this topic.

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
   தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
   வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
   இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
   அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.(Karuvurar)

            
As it is given in Tamil Language, I will write up here the instructions given in the poem on what to do to get immunity.

Medicine: Indian Neem Tree Leaf. (not the grown green leaf but the brown tender leaf usually seen in the tip of the bark).

Day: On Nov 27 or Nov 30, 2015 one should pluck 5 to 6 fresh brown leaves from the neem tree, which has more juice in it and eat it raw anytime between 6.00 a.m to 10.00 a.m before taking any breakfast or hot drinks.

How many days to continue: For a total of 27 days one should eat it like said above.
If you start on Nov 27, 2015 you can continue till Dec 23, 2015
or
If you start on Nov 30, 2015 you can continue till Dec 26, 2015

This is the only simple solution. Many of you might ask why on Nov 27 and 30, 2015. It is because on the day of Nov 27, 2015, Mrigasirisha nakshatra/asterism shows up and on Nov 30, 2015 Pushya nakshatra/asterism shows up. If you can check in Indian calendar you will find it. 

It is only said that on the tamil lunar month of Karthiga in mrigasirisha nakshatra or on pushya nakshatra one should start eating the tender neem leaves continuing up to 27 days.  Nov 27 and 30, 2015 are those days according to solar calendar. For each year it might be different in solar calendar.

The Siddhars call this as Vembu karpam. Vembu means neem, karpam means medicine. Karuvurar siddhar explained this in his medicinal treatise.

Try it and don’t miss the day because you will have to wait for one more year to do this.

************************************************
For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.(Or)

Send a facebook message to 
horoscience, neem tree
I believe that the readers of the blog around the world could find this tree in their country


உலகத்தில் நாம் நமது கடமைகளை செய்ய நாம் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருக்க நாம் உடல் வலிமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வேண்டும். 


எப்படி அதை செய்வது, அது சாத்தியமா ? சாத்தியம் தான்.
நமது தமிழ் சித்தர்கள் அதற்கு பாடல்களாக தங்கள் கண்டுபிடிப்புகளை இயற்றியுள்ளனர்.

 

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
      தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
      வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
      இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
      அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.


கருவூரார் சித்தர் கூறுவது போல், கார்திகை மாதத்தில் வரும் மிருகசிரிசம் அல்லது பூசம் நட்சத்திர நாளில் வேப்ப மர இலை கொகழுந்தை கிள்ளி தொடர்ந்து 27 நாட்களுக்கு மென்று சாப்பிட்டு வர, உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

வரும் நவம்பர் 27 ஆம் தேதி மிருகசிரிசம் நட்சத்திரம் வருகிறது, 30 ஆம் தேதி பூச நட்சத்திரம் வருகிறது.

ஆகவே , நவம்பர் 27 அல்லது 30 ஆம் தேதி ஆரம்பித்து 27 நாட்கள் தொடர்ந்து காலையில் உணவுக்கு முன் 6.00 - 10.00 மணிக்குள் நல்ல நீர் பதம் உள்ள வேப்பங் கொழுந்த்தை மென்று உண்டு வரவும்.நவம்பர் 27, 2015 ஆரம்பித்தால் டிசம்பர் 23, 2015 வரை சாப்பிடலாம்
நவம்பர் 30, 2015 ஆரம்பித்தால் டிசம்பர் 26, 2015 வரை சாப்பிடலாம்


இது வேம்பு கற்பகம் என்று சித்தர்களால் சொல்லப்படும். முயற்சி செய்யுங்கள், இல்லை என்றால் அடுத்த வருடம் கார்த்திகை மாதம் வரை காத்திருக்க வேண்டும்.


********************************************************************

உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4


(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]


- Karthik. R

Saturday 14 November 2015

Uccha and Neecha Grahas - உச்சம் மற்றும் நீச்ச கிரகங்கள்


Goddess Durga Devi


Uccha means Exalted. The planet is said to have full strength or can give better results.
Neecha means Debilitated. The planet is said to have no strength or cannot give any good result.

If in a horoscope if any planet is exalted, then it means that particular horoscope has blessings of Lord Vishnu. For ex., if moon is exalted, it means blessing of Lord Krishna is present.

Exalted or Uccha graha also means that the planet is in Hyperactive state. Sometimes it may also give worst results based on its position and relationship with other planets. Hence worshipping the corresponding avatar of Vishnu will give good results. In Kali yuga, just chanting the name of the god itself is a great worship only.


In the below, two tables are given.

- The first table shows the exalted planets and corresponding avatars of Lord Vishu.


- The second table shows the debilitated planets and corresponding Dasa Mahavidhyas to be worshipped to get favourable results of planets.

dasa avatars, horoscience
(Click to Enlarge)


Lagna is represented as life force and hence represents new beginning by Kalki Avatar, similarly Goddess Bhairavi.

Maatangi  or Shyamala are the powerful forms of Goddess Saraswati. Maatangi, this name came so because She is praised as the daughter of Matanga Rishi/Munivar.

So, if any planet is neecha or debilitated in a chart, worshipping the corresponding Devi forms will give better results.

Many of us still do not know about these Dasa Mahavidhya or 10 Devi forms of Durga or Parasakthi. They are the 10 great Cosmic powers required for procreation.  These 10 powers are eternal and exist forever. Even Parvati Devi born as human to Parvata Raja, had to undergo various penances with the help of Lord Shiva to attain these great 10 cosmic powers and become the Mother Goddess of all and spouse of Lord Shiva.

Click here the below links to download the books on 10 Mahavidhyas. List of 3 books.

Ten Cosmic Powers - Download
Ten Mahavidhyas - Download
Tantric Visions of Divine Feminine - Download

These books will explain all about the worship and the 10 forms of Mahavidhyas(Cosmic Powers) briefly. Very rare books. Please download and keep it safe.

Still if you are not able to follow the rituals or mantra chanting for the neecha planets in your horoscope. You can still wear Planetary Kavach for benefic results.

For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link/button.(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscienceLord MahaVishnu


உச்சம் என்றால், கிரகம் முழு பலத்துடன் இருக்கிறது அல்லது சுப பலன்களை கொடுக்கும் என்று பொருள்.


நீச்சம் என்றால், கிரகத்திற்கு பலம் இல்லாமல் இருப்பது, அல்லது எந்த ஒரு சுப பலன்களையும் கொடுக்க இயலாத நிலை என்று பொருள்.ஒரு ஜாதகத்தில் ஏதேனும் கிரகம் உச்சம் பெற்றால், அந்த ஜாதகம் மகாவிஷ்ணுவின் ஆசியை பெற்றது என்று பொருள். உதாரணத்திற்கு, சந்திரன் உச்சம் என்றால், கிருஷ்ணரின் அருள் உண்டு.உச்ச கிரகம் என்றால் அக்கிரகம் மிகவும் சுறுசுறுப்பாக உயர்ந்த இயக்கத்தில் இருக்கிறது, அதனால் சில சமயம் அக்கிரகம் அமர்ந்த இடம் மற்றும் வேறு சில கிரகங்களின் தொடர்பால் கெடுதல் பலன்களையும் கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே அக்கிரகத்திற்கு எற்ற விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவரை நாம் வழிபட்டு வந்தால் நல்லது. கலியுகத்தில் வெறும் கடவுளின் நாமத்தை கூறினாலே பெரும் வழிபாடுதான்.கீழே இரண்டு அட்டவனைகள் கொடுக்கப்பட்டுள்ளது,


- முதல் அட்டவனையில் உச்ச கிரகங்களும் அதற்கு ஏற்ப‌ விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் நாமங்களும் கொடுக்கபட்டுள்ளது.- இரண்டாவது அட்டவனையில் நீச்ச கிரகங்களும் அதற்கு ஏற்ப தசமகாவித்யா அதாவது பராசக்தியின் பத்து அவதாரங்களை வழிபடுவதன் மூலம், நீச்ச கிரகங்களின் சுப பலன்களை பெற இயலும்.
dasa avatars, horoscience
(Click to Enlarge)லக்னம் என்பது உயிர் அதனால், கல்கி அவதாரம் லக்னத்தை குறிக்கிறது, அதேபோது பைரவி தேவியும் லக்னத்தை குறிக்கிறார்.


மாதங்கி அல்லது ஷியாமளா, சரஸ்வதி தேவியின் உயர் நிலை சக்தி. மாதங்கி என்ற பெயர் வர காரணம், அவர் மதங்க முனிவரின் பெண் ஆதலால்.


எனவே, எதாவது கிரகம் ஜாதகத்தில் நீச்சம் பெற்றிருந்தால், பராசக்தியின் 10 அவதாரங்களை அதாவது கிரகத்திற்கேற்ப 10 தேவி அம்சங்களுள் ஒருவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.


நம்மில் நிறைய பேருக்கு, தசமகாவிதயா அதாவது தேவியின் பத்து அம்சங்களை பற்றி தெரியாது. இந்த அம்சங்கள் பிரபஞ்சத்தில் 10 ஆதார சக்திகள். என்றும் எங்கும் நிறைந்து இருப்பவை. பார்வதி தேவி மானுட பெண்ணாக பர்வத ராஜனுக்கு பிறந்த போது, நிறைய தவங்கள் சிவனின் ஆசியுடன் செய்து இந்த பத்து ஆதார சக்திகளை தனக்குள் பெற்று பின்பு பராசக்தியானாள். சிவனின் சரிபாதியாகி, நமக்கெல்லாம் தாய் ஆனாள்.


கீழே உள்ள லிங்கில் 10 தசமகாவித்யாகளை பற்றிய புத்தகங்கள் உள்ளன. மொத்தம் 3 புத்தகங்கள். தமிழில் இல்லை, ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.


பத்து பிரபஞ்ச சக்திகள்பதிவிறக்கவும்


பத்து மகாவித்யா - பதிவிறக்கவும்


தெய்வீக பெண்மையின் தந்திர தரிசனங்கள் - பதிவிறக்கவும்

இந்த புத்தகங்களில், தசமகாவித்யாகளின் மந்திரங்கள், எந்திரங்கள், அவர்களின் சக்தியின் விளக்கங்கள் மிக தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிதான புத்தகங்கள். பதிவிறக்கி பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்.

நீச்ச கிரகங்களுக்கு வழிபாடு செய்ய இயலவில்லை என்றால், நீச்ச கிரகத்திற்குரிய‌ கிரக கவசங்களை அணிந்து கொள்ளலாம். நற்பலன்கள் கிடைக்கும்.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும்.
https://www.facebook.com/horoscience அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
[email protected]
- Karthik. R