New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Saturday 21 March 2020

Eradicate any type of fever - சுரம் காய்ச்சல் பரிபூரணமாக தீர‌ by Grace of Goddess Parvati


coronavirus mantra

coronavirus mantra


ஆதிசங்கரர் அருளிய சௌந்தரிய லஹரி
----------------------------
Source:


காஞ்சி மகா பெரியவர் கூறியது.
"தெய்வத்தின் குரல்" இரண்டாம் பாகத்தில் குறிப்பிடபட்டுள்ளது. அனைத்து விதமான ஜுரம் காய்ச்சலை விரட்ட சவுந்தர்ய லஹரியில் 20 ஆம் பாடல்.


20. சுரம் காய்ச்சல் பரிபூரணமாக தீர‌, விஷ பயம் நீங்க, பாம்பு ஜந்துக்கள் வசியமாக
த்ருஷ்டி முதலான பொறாமைத்தனம் இல்லாமல் இருக்க - பீஜம் ஓம் க்ஷிப ஸ்வாஹா


====================================================
கிரந்தீ-மங்கேப்ப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர-ஸிலா-மூர்த்திமிவ ய:
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா
============================================================


தேவியின் தோற்றம்-விஷமும், சுரமும் தீர்த்து அருள் பெற (தமிழ்)


====================================================================
ஆடல் அம்பிகை, இமகர சிலை வடிவு ஆளும் நெஞ்சினுள் வழிவுறு கிரணம் மேல் ஓடி,
எங்கணும் உடல் பெருகு அமிழ்தென ஊடெழும் ப்ரபை தமது இடம் உணர்குவோர்
நாடவும் கொடும் விடம் ஒரு கலுழனை நாடும் வெங்கொலை அரவெனமுறியும் மேல்
மூடு அருஞ்சிரம் விழிபொழி அமுதினின் மூழ்க என்பொடு அழல் உடல் குளிருகே.
====================================================================

பொருள்: தாயே! உன் திருமேனியிலிருந்து கிரண வடிவில் அமிருத ரஸம்
வெளிப்படுகிறது. இத்தகைய உன் திருக்கோலத்தை எவன் உள்ளத்தில் நிலைநிறுத்தி
தியானம் செய்கிறானோ அவன், பறவைகளின் அரசனான கருடனைப் போல், பாம்புகளின்
கர்வத்தை அடக்குவான். அமிர்த நாடியோடு கூடியுள்ள தன் பார்வையாலேயே ஜுரத்தால்
வருந்துபவர்களைக் குணப்படுத்துவான். இம்மந்திரப் பாடல் சகலவிதமான
விஷங்களையும் போக்குவதால் இதைப் பதினாறு முறைக்குக் குறையாமல் சொல்லி
தீர்த்தத்தையோ, விபூதியையோ அளித்து நோயை நீக்கலாம்.




ஜபமுறையும் பலனும்


25 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட
ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தீராதென முடிவுசெய்த விஷ சுரம் நீங்கும்.
பூரான், செய்யான் முதலிய விஷ ஜந்துக்கள் தீண்டியதால் ஏற்பட்ட வியாதிகள் மற்றும்
திருஷ்டி தோஷத்தால் ஏற்படும் தீங்குகளும் நீங்கும்...




(20)
किरन्तीमङ्गेभ्यः किरणनिकुरुंबामृतरसं
हृदि त्वामाधत्ते हिमकरशिलामूर्तिमिव यः।
स सर्पाणां दर्पं शमयति शकुन्ताधिप इव
ज्वरप्लुष्टान् दृष्ट्या सुखयति सुधाधारसिरया ॥२०॥

Kirantim angebhyah kirana-nikurumba'mrta-rasam
Hrdi tvam adhatte hima-kara-sila murthimiva yah;
Sa sarpanam darpam samayati sakuntadhipa iva
Jvara-plustan drshtya sukhayati sudhadhara-siraya.


அன்னையே ! சந்திர காந்தக் கற்களினால் செய்யப்பட்டதுபோல் அழகிய உருவம் கொண்டவளே ! உன்னை வணங்கும் அடியார்க்கு , உன் அங்கங்களிலிருந்து பெருகும் அமிர்த மழையினை வாரி வழங்குபவளே ! அதனால் உன் அருள் பெற்றவன் ஆடும் பாம்பிற்கு சாடும் கருடனைப் போலவும் , ஜுரத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, உன்னால் கிடைக்கப் பெற்ற அமிர்த பார்வையினாலேயே , நிவர்த்தியைத் தருபவனாகவும் இருந்து, அவர்களின் நோயை குணப்படுத்துகிறான் .


Saundharya Lahiri(by Guru Adi Sankara) stanza 20 has the effects to cure and eradicate any type of fever by the grace of Goddess Paravati.
Source: Deivathin kural, volume 2 as said by Kanchi Maha Periyavar.


- Karthik. R