Lord Mahadeva who gave the authority to each Planet to govern all living entities |
When people are born during this Retrograde planetary motion is going on, they have different type of tendencies that cannot be understood under normal astrological principles. It affects the whole chart especially when any of the planets such as Mars, Jupiter and Saturn becomes retrograde. Because they aspect more than one house. Some authors and books say that their aspects also become retrograde aspect.
For ex.,
Click to Enlarge |
Click to Enlarge |
In the above horoscope Jupiter, Mars and Mercury are Retrograde planets.
Lagna/Asc is Scorpio/Vrichika.
Normally Mars aspects 4th, 7th and 8th position from where it is placed.
If Mars is in direct Motion, it,
Aspects 8th house Gemini/Mithuna with its 4th aspect.
Aspects 11th house Sun in Virgo/Kanya with its 7th aspect.
Aspects 12th house Mercury in Libra/Thula with its 8th aspect.
And here Mars is placed in Pisces/Meena 5th house from Lagna and also Ascendant lord/Lagnadhipathi.
Predictions by astrologers will be given according to the above.
But in Reality,
In the above horoscope as Mars is in Retrograde Motion., its aspect will also be in reverse direction.
Retrograde Mars will,
Aspects 2th house Saggitarius/Dhanus with its 4th aspect.
Aspects 11th house Sun in Virgo/Kanya with its 7th aspect.
Aspects 10th house Venus & Ketu in Leo/Simha with its 8th aspect.
Click to Enlarge |
Mars is in the 5th house from Lagna, but prediction should be given for 4th house from lagna as it is retrograde Mars should be taken as it is placed in 4th house with Rahu.
Predictions should be given as stated above. This is one of the kind. Still there are many rules.
For ex.,
Benefic/Good planet when retrograde becomes Malefic/Bad,
Malefic/Bad planet when retrograde becomes Benefic/Good,
Exalted/Uccha planet when retrograde becomes Debilitated/Neecha,
Debilitated/Neecha planet when retrograde becomes Exalted/Uccha.
Etc... and still more complicated rules.
Let us come back to the point, now here comes the confusion and complex part. Which aspects should be taken into consideration. At all the times the Retrograde aspects doesn’t give way for proper prediction. So it is always best to skip these kinds of horoscopes by beginners and learners in Astrology.
Even experts some of them who are famous astrologers who regularly show up in television also have given wrong predictions. I have seen 3 such astrologers whose predictions went wrong. They are talented, but if there are no retrograde planets surely their predictions are stunning, as retrograde planets are present in the horoscopes they go wrong.
Several astrologers fail because they do not actually give importance to Retrograde planets in their whole career because no proper authoritative research books are available in the area of the subject.
So dear readers of HoroScience, open up your charts in Jagannatha Hora, and check the number of retrograde planets. Retrograde planets are displayed marked with (open brackets). If there is more than 2 such planets present please do not waste your time for prediction to happen. Simple worship of retrograde planets is enough and do believe in God. If your horoscope is in the hands of retrograde planets and if you need help, do not hesitate, visit our HoroScience Store and purchase particular planet’s Kavach which is retrograde in your horoscope. This will lessen the effect of Retrograde ie., Vakra effect. These KAVACH’s has been used and tested for 7 years. Now after deep research we are making and selling it for benefit of the people. These can also be worn if any planet is trouble in your horoscope or if even if it strong and good as it will protect the wearer.
மகாதேவர், கிரகங்களுக்கு கிரக பதவியையும், உயிரனங்களை ஆள தகுதியையும் தந்தவர் |
இத்தலைப்பின் பகுதி 1'ஐ வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
பொதுவாக கிரகங்கள் வக்கிரம் ஆகும் காலத்தில் பிறந்த ஜாதகர்கள், மிகவும் வித்தியசமான சிந்தனைகளும், நடவடிக்கைகளும் உடையவர்களாக இருப்பர். நம்மிடம் உள்ள ஜோதிட விதிகளின் படி நாம் இவ்வாறான ஜாதகளை ஆராய்ந்தால் நமக்கு புரியாத புதிராகவே தோன்றும். அதிலும் 5 கிரகங்களில் செவ்வாய், குரு மற்றும் சனி எதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ வக்கிரம் அடைந்தால் பலன் கூறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும். அக்கிரகங்கள் மொத்த ஜாதகத்தின் தன்மையை சிதைத்துவிடும். ஏன்னேன்று ஒரு உதாரண ஜாதகத்தை கொண்டு பார்ப்போம்.
சில ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட நூல்கள் வக்கிர கிரகங்கள் பின்னோக்கி செல்லும் தன்மை மட்டும் கொண்டில்லாமல் அவர்களது பார்வைகளும் பின்னோக்கி அமைந்திருக்கிறது என்கிறார்கள்.
கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.,
Click to Enlarge |
Click to Enlarge |
இதில் குரு, செவ்வாய் மற்றும் புதன் வக்கிர கதியில் உள்ளன.
விருச்சிக லக்ன ஜாதகம்.
பொதுவாக செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7 மற்றும் 8 ஆம் இடத்தை பார்வை செய்யும்.
செய்வ்வாய் நேராக நகர்ந்து கொண்டிருந்தார் என்றால், அவர் தனது,
- 4 ஆம் பார்வையால் 8 ஆம் வீடான மிதுனத்தையும்,
- 7 ஆம் பார்வையால் 11 ஆம் வீடான கன்னியையும், அங்கு அமர்ந்திருக்கும் சூரியனையும்,
- 8 ஆம் பார்வையால் 12 ஆம் வீடான துலாம் ராசியையும் அங்கு அமர்ந்திருக்கும் புதனையும் பார்வை செய்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.
இங்கு செவ்வாய் லக்னத்திலிருந்து 5 ஆம் வீடான மீனத்தில் அமர்ந்திருக்கிறார். அவரே லக்னாதிபதியும் ஆகிறார்.
ஜோதிடர்கள் மேற்கூறிய அமைபிற்கு தகுந்தவாறு தங்களது பலன்களை சொல்லிவிடுவர்.
ஆனால் உண்மை நிலை என்னவென்றால்,
Click to Enlarge |
மேலே உள்ள ஜாதகத்தில் செவ்வாய் வக்கிர கதியில் உள்ளார், அவரது பார்வைகளும் பின்னோக்கியவாரு அமைந்திருக்கும்.
ஆகவே செவ்வாய் தனது,
- 4 ஆம் பார்வையால் 2 ஆம் வீடான தனுசையும்,
- 7 ஆம் பார்வையால் 11 ஆம் வீடான கன்னியையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரியனையும்,
- 8 ஆம் பார்வையால் 10 ஆம் வீடான சிம்ம ராசியையும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரன் மற்றும் கேதுவையும் பார்வை செய்து தனது ஆதிக்கத்தை செலுத்துவார்.
Click to Enlarge |
மேலும் பலன் கூறும் போது செவ்வாய் லக்னத்திலிருந்து 5 ஆம் இடத்தில் இருப்பதால் அதற்கேற்ப பலனை கூறாமல் அவர் 4 ஆம் வீட்டில் அமர்ந்திருந்தால் என்ன பலனோ அதை கூற வேண்டும். ஏனேனில் வக்கிர கிரகங்களுக்கு பலன் கூறும் போது அவை இருக்கும் இடத்திலிருந்து அதற்கு முந்தை வீட்டிம் இருப்பது போல் நினைத்து பலன் கூற வேண்டும்.
ஆக மேலே உள்ள ஜாதகத்தில் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்திருந்தால் என்ன பலனோ அதை கூற வேண்டும்.
இவ்வாறாக மேற்கூறியவாறு பலன்களைச் சொல்லவேண்டும். இது ஒரு வகை தான்.
இன்னும் நிறைய விதிகள் உள்ளன,உதாரணத்திற்கு,
- சுப கிரகம் வக்கிரம் ஆனால் அது அசுப கிரகமாகிவிடும்,
- அசுப கிரகம் வக்கிரம் ஆனால் அது சுப கிரகமாகிவிடும்,
- உச்ச கிரகம் வக்கிரம் ஆனால் அது நீச்ச கிரகமாகிவிடும்,
- நீச்ச கிரகம் வக்கிரம் ஆனால் அது உச்ச கிரகமாகிவிடும்,
இன்னும் பல குழப்பிவிடும் விதிகள் உள்ளன.
நாம் விஷயத்திற்கு வருவோம், மிக கடினமான குழப்பமான விஷயம் என்வென்றால், எந்த பார்வைகளை நாம் எடுத்துக்கொள்வது. எல்லா சமயங்களிலும் வக்கிர கிரகங்களிண் பின்னோக்கிய பார்வைகள் பலன்களை சரிவரக் கூற இயலாத நிலையில் அமைந்திருக்கிறது. எனவே இவ்வாறான ஜாதகங்களை புதிதாக ஜோதிடம் கற்பவர்கள் பார்க்காமல் இருப்பதே சிறந்தது.
மிகவும் பிரபலமான ஜோதிடர்கள், அதாவது தொலைக்காட்சியில் நாம் தினமும் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் சிலர் தவறாக பலன்களை கணித்துள்ளனர். மூன்று பேர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஜோதிட சாஸ்த்திரத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் கணித்ததில் எந்த பிழையும் இல்லை. கிரகங்கள் வக்கிரம் இல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் கூறிய பலன்கள் அனைத்தும் 100 சதவிகிதம் நடந்திருக்கும். ஆனால் வக்கிரமானதால் அவர்கள் கூறிய பலாபலன்கள் நடக்கவில்லை.
மேலும் நிறையை ஜோதிடர்கள் வக்கிர கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் அவர்கள் கூறிய பலன்கள் எல்லாம் பொய்யாகி விட்டது. இதற்கு வக்கிர கிரகம் சம்பந்தப்பட்ட சரியான மூல நூல்களும், ஜோதிட ஆராய்ச்சிகளும் இல்லாமல் போனது தான் காரணம் எனலாம்.
எனவே அன்பான ஹோரோசயின்ஸ் வாசகர்களே, உஙகள் ஜாதகங்களை ஜகன்நாத ஹோரா மென்பொருளில் திறவுங்கள், எத்தனை வக்கிர கிரகங்கள் உள்ள என்று பாருங்கள். வக்கிர கிரகங்கள் (ஓபன் பிராக்கெட்) போட்டு காட்டப்பட்டிருக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அவ்வாறாக இருந்தால், தயவு செய்து உங்கள் பொன்னான நேரத்தை பலன்களை எதிர்பார்த்து வீணாக்காமல், அவ்வக்கிர கிரங்களை தினமும் ஆராதனை செய்து,
கடவுளின் மேல் நம்பிக்கை வைத்து காலத்தை ஓட்டுங்கள். இல்லை, எனது ஜாதகம் வக்கிர கிரகங்களின் பிடியில் சிக்கியுள்ளது, எனக்கு உதவி தேவை என்பவர்கள், எங்களது 'ஐ பார்வ்வையிட்டு, எந்த கிரகம் உஙகள் ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கிறதோ அந்த கிரகத்தின் கவசத்தை வாங்கி அணிந்து கொள்ளுங்கள். இது வக்கிர கிரகத்தின் கெடுதல் தன்மையை குறைத்து நன்மையைத் தரும். இந்த கவசங்கள் ஏழு வருட ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு பிறகு நாங்கள் மக்களின் நலன் கருதி விற்பனை செய்கிறோம். இவைகளை நீங்கள் ஏதேனும் கிரகம் உங்கள் ஜாதகத்தில் பாதிப்பு ஏற்படுத்தினாலும் அணியலாம் அல்லது சுப கிரகமாக இருந்தாலும் அணியலாம் ஏனேண்றால் அவை அணிகின்றவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.
- Karthik. R