New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 4 August 2015

Success in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி

Lord Muruga (Gives Superior Knowledge and Material Comforts who worships Him)


Pushkara Navamsa or Pushkaramsa is a concept in astrology to determine the status and worthiness of an individual.

There are two ways to determine this,

- If a person has Ascendent/Lagna is in Pushkaramsa then he/she will be outstanding in their careers.
            (or)
- Placement of two or more planets in Pushkaramsa also will make the individual worthy and stunning in their career.

Note: If Lagna/Asc is not in pushkaramsa but if it is in Vargottama(Same sign in Rasi and Navamsa), then also the person might rise to a higher position in their career.

Pushkaramsa is a very rare research concept written only in a few books by legendary authors like R. Santhanam and Pandit Chandulal S. Patel.

How to find whether lagna or any planet is placed in Pushkaramsa ?

Pushkaramsa is a particular degree in each of the twelve zodiac signs in Rasi Chart, which in turn is a particular navamsa of a sign. I am not going to explain the details about degrees of each sign as it would be confusing for young learners and beginners in astrology.

I will tell you an easy way to find out the planets placed in Pushkara-Navamsa using Jagannatha Hora software.

Look at the example chart.

(Click to Enlarge)


Open your chart in Jagannatha Hora. Right click in the right pane where planetary positions are given. and select “Pushkaramsas and Pushakara Baghas” option like below.

(Click to Enlarge)


You can now see the planets and lagna in the left and if is placed in pushkaramsa or not. There is a “YES” if a planet or lagna is in Pushkaramsa. And a hypen “-“ if it is not in Pushkaramsa.

  
In the above example chart,  Mars, Rahu and Lagna are placed in Pushkaramsa chart. This chart belongs to one of my close friend. He was born in a village but later through his hard work rose to a higher leadership position in a leading global company. This is because of Lagna in Pushkaramsa. Also note that lagna/asc is in Vargottama, which gave maximum strength to the horoscope of the native. This kind of pushkaramsa+vargottama is a special case.

Research Subject:

Pushkaramsa is also known as Pushkara Bagha. But in Jagannatha hora they have differentiated the two. I think it has been included in such a way for its future research purpose. Houses 1 to 12 have also been taken into account of Pushkaramsa which is also to be researched further for the results.

Famous personalities with Lagna/Asc  and few planets placed in Pushkaramsa in their horoscope are N.T. Rama Rao, Amithab Bachchan and Astrologer Pandit Chandulal S. Patel.

So if you see someone shining in their career, just input their chart in Jagannatha Hora and find out about Pushkara-Navamsa or Pushkaramsa.


Click Below button to View our Online Store (Your money is safe with PayUmoney)

horoscience store



முருகன், ஞானத்தையும், சுகபோகங்களையும் தனது பக்தர்களுக்கு கொடுப்பவர்

புஷ்கர நவாம்சம் அல்லது புஷ்கராம்சம் என்று ஒரு விதி ஜோதிடத்தில் உள்ளது. இதனை வைத்து நாம் ஒருவரது அந்தஸ்து, பதவி நிலையை அறியலாம்.
அதற்கு இரண்டு வழி உள்ளது,


- ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் புஷ்கராம்சத்தில் நின்றால் அது அந்த ஜாதகருக்கு உத்தியோகத்தில் உயரிய பதவியை படிபடியாக தரும்.


                 (அல்லது)


- ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் புஷ்கராம்சத்தில் நின்றால் அந்த ஜாதகர் மதிக்கதக்கவராகவும், உத்தியோகத்தில் திறமைசாலியாகவும் இருப்பார்.


குறிப்பு: லக்னம் புஷ்கராம்சத்தில் இல்லாவிடினும், வர்கோமத்தில் இருந்தால், (அதாவது ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே வீட்டில் நின்றாலும்) ஜாதகர் தனது தொழில்/உத்தியோகத்தில் முன்னேறுவார்.
புஷ்கராம்சம் என்பது மிகவும் அரிதான ஆராய்ச்சிக்குட்பட்ட ஜோதிட விதியாகும். ஆர். சந்தானம் மற்றும் பன்டித சாந்துலால எஸ். பட்டேல் போன்ற ஜாம்பவான்கள் எழுதிய புத்தகங்களில் புஷ்கராம்சத்தை கையாண்டுள்ளனர்.


எப்படி லக்னம் அல்லது ஏனைய கிரகங்கள் புஷ்கராம்சத்தில் இருகிறதா என்பதை அறிவது ?

புஷ்கராம்சம் என்பது பன்னிரெண்டு ராசிகளில், ஒவ்வொரு ராசியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட பாகை ஆகும். அது ஒரு குறிப்பிட்ட நவாம்சத்தை குறிக்கும். நாம் அந்த பாகையை பற்றி இங்கே குறிப்பிட போவதில்லை. ஏனேனில் புதிதாக ஜோதிடம் கற்பவர்களுக்கு அது கடினமாக இருக்கும். எனவே நான் புஷ்கராம்சத்தில் கிரகங்கள் உள்ளதா என்று அறிய ஒரு எளிய முறையை ஜகன்நாத ஹோரா மென்பொருள் மூலம் காட்டுகிறேன்.


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்,



(Click to Enlarge)


உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோரா மென்பொருளில் திறவுங்கள். வலது பக்கத்தில் கிரகங்களின் பாகைகள் கொடுக்கப்பட்டிருகிறது. அங்கே வலது கிளிக் செய்யவும். பிறகு “Pushkaramsas and Pushakara Baghas” என்பதை கிளிக் செய்யவும். 


(Click to Enlarge)



இப்போது கிரகங்களும் அதற்கு அடுத்த உள்ள வரிசையில் புஷ்கராம்சத்தையும் பார்க்க இயலும். கிரகங்கள் அல்லது லக்னம் புஷ்கராம்சத்தில் இருந்தால் “YES” என்று கொடுக்கப்பட்டிருக்கும். இல்லை என்றால் வெறும் ஒரு கோடு “-“ இருக்கும்.


மேலே உள்ள உதாரண ஜாதகத்தில், செவ்வாய், ராகு மற்றும் லக்னம் புஷ்கராம்சத்தில் உள்ளதை கவணிக்கவும். இந்த ஜாதகம் எனது நெருங்கிய நண்பருடையது. அவர் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தாலும், தனது கடும் முயற்சியினால் பெரிய பன்னாட்டு அலுவலகத்தில் உயர்ந்த தலைமை பொருப்பில் உள்ளார். இதற்கு காரணம் லக்னம் புஷ்கராம்சத்தில் உள்ள நிலை மற்றும் லக்னமானது வர்கோத்தமும் பெற்று மேலும் பலம் சேர்த்துள்ளது. இது ஒரு விஷேசமான அமைப்பாகும்.


ஆராய்ச்சிக்குறியது:


புஷ்கராம்சம் என்பது புஷ்கர பாகம் என்றும் அழைக்கபடும். ஆனால் ஜகநாத ஹோரா மென்பொருளில் இவை இரண்டும் பிறித்து தனிதனியே காட்டப்பட்டுள்ளது. அனேகமாக இவை ஆராய்ச்சிக்காக இவ்வாரு கொடுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். மேலும் 12 வீடுகளுக்கும் புஷ்கராம்ச நிலையை கொடுத்திருக்கிறார்கள், இதற்கான பலன்கள் என்னவென்று இனிமேல் தான் ஜோதிடர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


பிரபலமானவர்களின் பட்டியலில் என்.டி. ராமா ராவ், அமிதாப் பச்சன், ஜோதிட மேதை பன்டித சாந்துலால எஸ். பட்டேல் போன்றவர்களின் ஜாதகங்களில் லக்னம் மற்றும் சில கிரகங்கள் புஷ்கராம்சத்தில் உள்ளது.


எனவே, நீங்கள் உங்கள் அலுவலகங்களில் யாராவது தனது வேலையில் ஜோலித்து கொண்டிருப்பதை பார்த்தால், அவர்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோராவில் போட்டு புஷ்கராம்சத்தில் லக்னம் அல்லது கிரகங்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.


எங்கள் ஆன்லைன் ஸ்டோரை பார்வையிட கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.

horoscience store
- Karthik. R


No comments:

Post a Comment