New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 15 September 2023

Ashtakavarga Method - How to find possible Marriage Age ~ அஷ்டகவர்க்க முறையில் திருமண வயதை கண்டுபிடிப்பது எப்படி


when will I get married horoscience.com

                The most asked question to astrologers is when will one get married. The possible age of marriage can be checked from one’s horoscope easily by Ashtakavarga method which provides snapshot clue. Anyone with their horoscope booklet in hand can check using the ashatakvarga table provided in it or free software like jagannatha hora can be used.

Keep SAV Sarvashtakavarga table before. Note down the bindus acquired in the below given positions.

Lagna, Lagna Lord, Jupiter, Venus, Merucry.

Generally, the bindus represented from the above position may be the possible age of marriage.

For example, below is the horoscope of girl born in April 1993.

how to predict marriage age

Look at the 5 positions and bindus represented.
Dhanur Lagna – 37
Lagna Lord Jupiter – 30
Jupiter – 30
Venus – 24
Mercury – 25

So, it can be found that the possible age when the marriage event would take place are 24, 25, 30 and 37. She got married this year June 2023 at 30 years and 2 months of age as represented by Jupiter, in her case it is also the Lagna Lord.


Let’s see another example, below horoscope of boy born in Oct 1987.

how to find marriage age using astrology


The five positions and their bindus are
Kanya Lagna – 30
Lagna Lord Mercury – 23
Jupiter – 22
Venus – 30
Mercury – 23

So, the clue to find the marriage age represented by bindus are 22, 23 and 30. He got marriage at 31 years and 4 weeks of age in Nov 2018.

In example of girl, the marriage age was close the one represented by Lagna Lord as well as Jupiter with difference of 2 months.

In the example of boy, it is different and the age difference is 1 year and 4 weeks. Sometimes the numbers shown by ashtakavarga should be increased to 1 point, in rare cases the calculation of certain software differ by one point less or more. So, in that case marriage happened 4 weeks are ahead as per boy’s chart with respect to bindus represented by venus and lagna.

To cross check and verify the above age’s represented by sarvashtakavarga bindus an able astrologer will use Dasa Bukti and Antar analysis of 7th house in horoscope.

Though the ashtakavarga method is only snapshot method which provides clue. A learnt astrologer will not use it as their own traditional and experienced methods will be used to predict the possible marriage age.


To get a consultation of your horoscope regarding which possible marriage age and which kavach to wear to pacify malefic hindrance causing planets Click here to Whats App or email to [email protected]

Disclaimer: The Ashtakavarga method given above is just snapshot method and can be relied 100% accurate as it not verified by applying to large quantity of charts say for ex., 10000 known live charts at a time.



Neelangol Megathin



                  பெருவாரியாக ஜோதிடர்களிடம் கேட்கப்படும் கேள்வி ஒருவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதே. திருமணம் எந்தந்த வயதுகளில் அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கண்டரிய அஷ்டகவர்க்க முறை ஒரு நொடி தீர்வாக அமைகிறது. தங்களுடைய‌ ஜாதக புத்தகத்தை  கையில் வைத்திருக்கும் யாராகினும் அஷ்டவர்க்க அட்டவனையை பார்த்து அல்லது ஜகந்நாதா ஹோரா கணினி மென்பொருளை உபயோகித்து அறிந்து கொள்ளலாம்.


சர்வஷ்டகவர்க்க அட்டவனையில், கீழ்கண்ட இடங்களில் உள்ள பரல்களை கவணிக்கவும்.


லக்னம், லக்னாதிபதி, குரு, சுக்கிரன், புதன். 

பொதுவாக, மேலே கொடுக்கபட்ட இடங்களில் உள்ள பரல்களின் எண்ணிக்கை திருமண வயதை குறிக்கும்.


உதாரணமாக, கீழே கொடுக்கபட்டுள்ள ஜாதகத்தை கவணியுங்கள், பெண் ஜாதகர் 1993 ஏப்ரல் மாதம் பிறந்தவர்.

find marriage age using ashtakavarga


இதில் அந்த ஐந்து இடங்களிலும் உள்ள பிந்துக்களை பாருங்கள்.

தனுர் லக்கினம் - 37

லக்னாதிபதி குரு - 30

குரு - 30

சுக்கிரன் - 24

புதன் - 25


ஆக, திருமணம் 24, 25, 30 மற்றும் 37 ஆகிய வயதுகளில் ஏதேனும் நடக்க வாய்ப்புள்ளது. இந்த ஜாதகிக்கு திருமணம் ஜுன் 2023'ல் நட்ந்தது 30 வயது 2 மாதம், குருவின் பரல்கள் காண்பிக்கும் வயதில், குரு லக்கினாதிபதியும் ஆவார்.


மற்றொரு உதாரண ஜாதகத்தையும் பார்ப்போம். ஆண் ஜாதகர் அக்டோபர் 1987'ல் பிறந்தவர்.

find marriage age using ashtakavarga


இதில் அந்த ஐந்து இடங்களிலும் உள்ள பிந்துக்களை பாருங்கள்.

கன்யா லக்கினம் - 30

லக்னாதிபதி புதன் - 23

குரு - 22

சுக்கிரன் - 30

புதன் - 23


ஆக, இவரது திருமணம் 22, 23 அல்லது 30 வயது காலகட்டத்தில் நடக்க வாய்ப்புள்ளது. இந்த ஜாதகர் தனது 31 வயது 4 வாரங்கள் ஆன போது நவம்பர் 2018 திருமணம் செய்தார்.


ஆண் ஜாதகர் உதாரணத்தில், சற்று வித்தியாசமாக, 1 வருடம் 4 வாரங்கள் சென்று திருமணம் நடந்திருக்கிறது. சில நேரங்களில் அஷ்டவர்க்க பரல்கள் கணிக்கீட்டு முறையில் மென்பொருள் மற்றும் கனித முறையில் சிரிது முரன்பாடு வரலாம், ஆக ஒரு பரல் கூட்டவோ குறைக்கவோ நேரிடலாம். அவ்வாறு பார்த்தோமானல் வெறும் 4 வாரங்கள் வித்தியாசம் உள்ளது சுக்கிரன் மற்றும் கன்யா லக்ன பரல்கள். 


இதனை குறுக்காக சரி பார்க்க, சரியான பயிற்ச்சி பெற்ற ஜோதிடர் 7 ஆம் வீட்டின் தசா, புத்தி, அந்தர் நிலகளை கொண்டு தீர்மானிப்பார்.


இந்த அஷ்டகவர்க்க முறையானது ஒரு நொடி பொழுதில் யூகிக்க உதவுமே தவிர, இதை கற்றறிந்த ஜோதிட வல்லுனர்கள் உபயோகிக்கமாட்டார்கள். அவர்கள் ஒரு ஜாதக ஜாதகியின் திருமண வயதை கண்டரிய‌ தாங்கள் படித்து அனுபவத்தில் வந்த பாரம்பரிய முறைகளையே பயன்படுத்துவார்கள்.


ஜாதகப்படி எப்போது திருமணம் நடக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ள மற்றும் எந்த கிரக கவசம் அணிவது என்பது பற்றி ஆலோசனை பெற இங்கு கிளிக் செய்து வாட்ஸ் ஆப் செய்யவும்.


பொருப்பு துறப்பு: அஷ்டக்கவர்க்க முறையானது ஒரு சிறிய அளவே பயன்படுத்த கூடியது, ஒரு ஸ்னாப்ஷாட் குறுக்கு வழி முறை, இதை 100% சதவிகிதம் நம்பலாகாது. ஏனெனில், இதை பெருவாரியான ஜாதகங்களுக்கு உதாரணமாக சுமார் 10000 வாழும் உணமையான ஜாதகங்களை கொண்டு சரிபார்க்க படவில்லை.

 


- Karthik. R

Thursday 25 May 2023

Samhara Nakshatras ~ சம்ஹார நட்சத்திரங்கள்

 
Samhara Nakshatras

            Out of 27 Nakshatras, those ruled by Sun, Rahu and Mercury come under Samhara nakshatras classification.

Sun - Krittika, Uthara, Uttarashada
Rahu - Ardra, Swati, Shatabisha
Mercury - Ashlesha, Jyestha, Revathi

The above nakshatras are also called as Laya Nakshatras.
The first and second padas of the above nakshatras are favorable and the 3rd and 4th padas are unfavorable and known as durithamsa, suffering in one's life may arise in various directions.

The Adidevata of each planet is to be propitiated for those born in these nakshatra padas.

Surya Nakshatras ~ Lord MahaVishnu
Krittika 3, 4 -  Agni Deva
Uthara 3, 4 - Surya Deva
Utharadam 3, 4 - Lord Ganesha

Rahu Nakshatras ~ Goddess Saraswati
Ardra 3,4 - Lord Shiva
Swati 3,4 -  Vayu Deva
Satabisha 3,4 - Lord Yama

Bhuddha Nakshatras ~ Goddess Durga
Aslesha 3,4 - Lord Adisehsa
Jyestha 3,4 - Indra Deva
Revati 3,4 - Sani Deva

The respective deities of the planets can also be worshiped life long at temples in one's own locality to be free from negative impact caused by the  samhara nakshatras.

Graha Kavachs for Sun, Rahu and Mercury can also be worn to alleviate malefic effects. (click to know about kavach)

To get a consultation of your horoscope regarding which kavach to wear Click here to Whats App or email to [email protected]


Goddess Nut

            27 நட்சத்திரங்களுள் சூரியன், ராகு மற்றும் புதனினுடைய நட்சத்திரங்கள் சம்ஹார நட்சத்திரங்கள் பிரிவை சார்ந்த்து.


சூரியன் - கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
ராகு - திருவாதிரை, சுவாதி, சதயம்
புதன் - ஆயில்யம், கேட்டை, ரேவதி


மேலே உள்ள நட்சத்திரங்கள் லய நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப்படும்.

1 மற்றும் 2 ஆம் பாதங்கள் சூமூகமானைவ.
3 மற்றும் 4 ஆம் பாதங்கள் துரிதாம்சம் என்று அழைக்கபடும்.

 ஒருவரது வாழ்வில் துன்பங்கள் பல கோனங்களில் இருந்து வர வாய்ப்பு உள்ளது.


இந்த 3,4 நட்சத்திர பாதசாரையில் பிறந்தவர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதைய வழிபடவேண்டும்.


சூரிய நட்சத்திரங்கள் ~ மகாவிஷ்ணு
கிருத்திகை - 3,4 அக்னி தேவர்
உத்திரம் - 3,4 சூரிய தேவர்
உத்திராடம் 3,4 விநாயகர்


ராகு நட்சத்திரங்கள் ~ சரஸ்வதி தேவி
திருவாதிரை - 3,4 சிவபெருமான்
சுவாதி - 3,4 வாயு தேவர்
சதயம் - 3,4 யமதர்மராஜா


புதன் நட்சத்திரங்கள் ~ துர்கை அம்மன்
ஆயில்யம் - 3,4 ஆதிசேஷன்
கேட்டை - 3,4 இந்திர தேவர்
ரேவதி - 3,4 சனிஸ்வர பகவான்


சம்ஹார நட்சத்திரங்களினால் எற்படும் கெடுதல் பலன்களில் இருந்து விடுபட ஒருவர் உள்ளூர் கோயில்களில் குடிகொண்டிருக்கும் அந்தந்த‌ கிரங்கத்திற்குரிய தெய்வங்களை வாழ்நாள் முழுக்க வழிபடுவது நன்மையை தரும்.


மேலும் தீமை பலன்களை குறைக்க‌ சூர்யன், ராகு மற்றும் புதனின் கிரக கவசங்கள் அணிந்து கொள்ளலாம். (கவசங்கள் பற்றி அரிய இங்கே கிளிக் செய்யவும்


ஜாதகப்படி எந்த கிரக கவசம் அணிவது என்பது பற்றி ஆலோசனை பெற வாட்ஸ் ஆப் செய்யவும்


- Karthik. R

Wednesday 17 May 2023

Nava Taras - How to know which Nakshatra is Good ~ நவ தாரா - ஜாதகத்தில் நல்ல நட்சத்திரங்கள் எவை என்று அறிய‌


nava taras horoscienc.com


               Those who do not know astrology, have no idea of what is birth nakshatra or janma nakshatra or how it is calculated and fixed. The day when a person is born, the moon/chandra will be transiting or situated in a particular nakshatra, that nakshatra is termed to be birth nakshatra or janma nakshatra. Chandra transits one nakshatra/star/asterism per day approximately.

                    Nava Tara are calculated by observing the consecutive 9 taras/nakshatras counted from one's own birth Nakshatra. For ex., if someone is born in Ashwini Nakshtra as birth nakashatra, then the next eight nakshatra's consecutively namely bharani, krittika, rohini, mrigashirsha, thiruvathirai, punarpoosam, poosam, ayilyam total 9 nakshatras termed to Nava Tara.

Each nakshatra has a special purpose and meaning.
1st- Ashwini - Janma Tara - Birth
2nd- Bharani - Sampath Tara - Wealth
3rd- Krittika - Vipat Tara - Danger
4th- Rohini - Kshema Tara - Well being
5th- Mrigashirisha - Pratyak Tara - Obstacles
6th- Thiruvathirai/Ardra - Saadhana Tara - Achievement
7th- Purarpoosam - Naidhana Tara - Death
8th- Poosam - Mitra Tara - Friend
9th- Ayilyam - Parama Mitra - Good Friend

Now, let us check an example of how to view Nava Tara from moon/chandra in Jagannatha Hora software

Open your chart and right click in the Longitude & Basic info pane and look for option Nava Taras (from moon) as shown in below image




Click on the option to view Nava Tara counted from your Janma Nakshatra






In the example chart, Janma Nakshatra is Punarpoosam, /Guru's/Jupiter's Nakshatra, hence the next consecutive 8 nakshatra in total constitute Nava Taras.

The 3rd, 5th and 7th nakshatra namely 
3rd Vipat which is Dangerous Nakshatra, and 
5th Pratyak which is Obstacles or Hindrance giving Nakshatra and finally, 
7th Naidhana the Death, causing death or death alike effect or illness or diseases of some kind.

Note that the above nakshatras are ruled by Mercury, Venus and Moon. So whenever, any Kochara/Transit planet like Guru or Shani transits over these unfriendly nakshatras, it is to be noted that the bad effects are active in your horoscope. The other 2 sets of nakshatra for each lord also cause the same malefic effects.
 
Bhudha's 3 nakshatra's Ayilyam, Jyesta/kettai, Revati
Sukra's 3 nakshatra's Bharani, Pooram, Pooradam
Chandra's 3 nakshatra's Rohini, Hasta, Thriruvonam/Sravanam

All the above 9 nakshatra's out of total 27 nakshatras will be unwelcome and unfriendly to a person if the lords are well placed strongly in his/her horoscope. If they are not strong then the bad effects will not affect the person.

Similarly, the 2nd nakshatra which is wealth giver sampath nakshatra, in the above example is pushya which is Saturn's nakshatra gives wealth or source of income to the native during its dasha or when a planet transits over it, the fruits of that planet will be given to the person. Not only that particular nakshatra, Saturn's being also the lord of other 2 nakshatra's namely Anusham/Anuradha and Uthratadhi/Utharabhadrapada also give the same effect of sampath.

If the 2nd nakshatra's Lord wealth or 4th nakshatra's lord well-being is in situated in malefic position in a horoscope, then there will be struggles getting the good effects. 

Propitiating Adi-devata of those nakshatra or visiting respective temple or providing charity on that nakshatra day would give benefic and fruitful effects on a native of the horoscope.

To know which nakshatra's are friendly and unfriendly in your horoscope click here to get a consultation or Whats app
Also to know about planetary kavach and get one for a weak or malefic planet in your horoscope click here



ஜோதிடம் அடிப்படை அறியாத வெகு ஜன மக்களுக்கு எவ்வாறு ஒரு நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாக தனக்கு வருகிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவர் பிறக்கும் போது அந்த நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அல்லது அமர்ந்திருக்கிறாரோ அந்த நட்சத்திரமே ஒருவருடை பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நச்சத்திரம் ஆகும். சந்திர பகவான் தோராயமாக தினமும் ஒரு நட்சத்திரத்தை கடப்பார்.

நவ தாரா என்பது ஒன்பது தாரை. அதாவது ஒருவர் பிறந்த ஜென்ம நட்சத்திலிருந்து அடுத்தடுத்து வரும் 8 நட்சத்திரங்களாக ஒன்பது நட்சத்திரங்களை நவ தாராஸ் என்று வழங்கபடுகிறது. உதாரணமாக, ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அது ஜென்ம நச்சத்திரம் ஆகும், அடுத்து வரும் நட்சத்திரங்களான பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசிரீஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், அயில்யம் சேர்த்து 9 நட்சத்திரங்களை நவ தாரா என்பது.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அர்த்தம் மற்றும் பயன் உள்ளது.
1`வது - அஸ்வினி  - ஜென்ம  தாரா  - பிறப்பு
2'வது - பரணி - சம்பத்து தாரா  - செல்வம்/பொருளாதாரம்
3`வது  - கார்த்திகை - விபத்து தாரா அபாயம்
4`வது  - ரோகினி  - ஷேம தாரா நன்றாக வாழ்வது
5`வது - மிருகசிரீஷம்  - பிரத்யக் தாரா தடைகள்
6`வது  - திருவாதிரை  - சாதனா தாரா சாதித்தல் வெற்றியடைதல்
7`வது  - பூனர்பூசம்  - நைதானா மரணம்
8`வது  - பூசம் மித்ரதாரா  -  நண்பன்
9`வது - ஆயில்யம்  - பரம மித்ர தார நல்ல நன்பன்

இப்போது, சந்திரனிலிருந்து நவ தாரைகளை எவ்வாறு ஜகன்நாத ஹோரா சாப்ட்வேரின் மூலம் அறிந்து கொள்வதை பற்றி பார்ப்போம்.

தங்கள் ஜாதகத்தை திற்வுங்கள். வலது பக்கம் உள்ள Longitude & Basic info என்ற இடத்தில் மவுஸை வைத்து இடது கிளிக் செய்து நவ தாராஸ்(சந்திரனிலிருந்து) என்ற ஆப்ஷனை கீழே உள்ள படத்தில் உள்ளபடி போல் காணாலம்.


நவ தாரா



வலது கிளிக் செய்து Nava Taras(from moon) ஆப்ஷனை தேர்ந்தெடுத்து நவ தாரைகளை பார்க்கவும்.


நவ தாரா



உதாரண ஜாதக்த்தில் ஜென்ம நட்சத்திரம் பூனர்பூசம் குரு பகவானுடைய நட்சத்திரம். ஆக அதற்கு அடுத்தடுத்து வரும் 8 நட்சத்திரங்கள் பிறப்பு நட்சத்திரகளுடன் சேர்ந்து நவ தாரை என்று அழைக்க படுகிறது.

இதில் 3, 5 மற்றும் 7`வது நச்சத்திரங்களான,
3`வது விபத்து தாரை மிகவும் அபாயகமான நட்சத்திரம்.
5`வது பிரத்தயக் தாரை அதாவது தடைகள் அல்லது தொந்திரவுகள்.
7`வது நைதன தாரை, மரணததை சம்பவிப்பது அல்லது மரணம் போல் ஒரு சூழ்நிலை / உடல் ரீதியான மோசமான நோய் பினி அல்லது வியாதி போன்ற‌ நிலைமையை உருவாக்கி விடும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிருக்கும் புதன், சுக்ரன் மற்றும் சந்திரன் அதிபதிகளாக ஆவார்கள். ஆக எப்போதெல்லாம் சனி மற்றும் குரு கோச்சாரம் இந்த நச்சதிரங்களை கடக்கிறதோ அப்போதெல்லாம் பிரச்சினைகள் வரும், கெட்ட நேரம் ஆரம்பிக்கும் காலம்.

இதுபோல் மேலே உள்ள‌ நட்சத்திர அதிபதிகளுக்கு இன்னும் 2 செட் நட்சத்திரங்களும் இவ்வாறே கெடுதல் பலன்களை செய்யும்.

புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி
சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம்
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

ஆக மேலே உள்ள ஒன்பது நட்சத்திரங்களும் நல்ல நிலமையில் செயல்படமாட்டாது. 27 நட்சத்திரங்களுள் இந்த 9 நட்சத்திரங்களின் அதிபதிகள் பலம் பொருந்தி அமர்ந்திருந்தால் கெடுதல பலன்கள் வந்து சேரும். பலம் இல்லை எனில் கெடுதல் பலன்கள் வர வாய்ப்பில்லை.

இதே போல், 2`வது நட்சத்திரமான செல்வத்தை கொடுக்கும் சம்பத்து நட்சத்திரம் மேலே உள்ள உதாரண ஜாதகத்தில் பூசம் நட்சத்திரமான சனி பகவான் நட்சத்திரம். பொருளாதார‌ மேன்மையை மற்றும் பண வரவை, சனி பகவான் இந்த ஜாதகத்திற்கு குறிப்பார். மேலும் பூசம் நச்சத்திரம் மற்றும் அல்லாமல் சனி பகவான் அதிபதியாகிய மேலும் இரண்டு நச்சதிரமான அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரங்களில் கோச்சார கிரங்கள், அல்லது சனி பகவான தச புத்தி அந்தர் காலங்களில் பொருளதாரம் சார்ந்த உயர்வை தரும்.

2`வது நட்சத்திரமான சம்பத்து தாரையின் அதிபதி மற்றும் 4`வது நட்சத்திரமான ஷேம தாரையின் அதிபதிகள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமராதிருப்பின் நல்ல பலன்கள் நடக்காமல் போகும்.

அக்கிரகத்தின் அதிதேவதையை வணங்குவதன் மூலமும், பிரசித்தி பெற்ற‌ கோவில்களுக்கு சென்று வருவதும், அந்த நட்சத்திர நாட்களில் அன்னதானம் செய்வதும் நற்பயன்களை தரும்.

உங்கள் ஜாதகத்தில் எந்தெந்த நட்சத்திரங்கள் நல்ல தட்சத்திரங்கள் பற்றி அறிய ஜோதிட ஆலோசனை பெற விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும் அல்லது வாட்ஸ் ஆப் செய்யவும்.

மேலும் தங்கள் ஜாதத்திற்கு ஏற்ப எந்த கிரக கவசத்தை அணிவது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.


- Karthik. R