New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Wednesday, 17 May 2023

Nava Taras - How to know which Nakshatra is Good ~ நவ தாரா - ஜாதகத்தில் நல்ல நட்சத்திரங்கள் எவை என்று அறிய‌


nava taras horoscienc.com


               Those who do not know astrology, have no idea of what is birth nakshatra or janma nakshatra or how it is calculated and fixed. The day when a person is born, the moon/chandra will be transiting or situated in a particular nakshatra, that nakshatra is termed to be birth nakshatra or janma nakshatra. Chandra transits one nakshatra/star/asterism per day approximately.

                    Nava Tara are calculated by observing the consecutive 9 taras/nakshatras counted from one's own birth Nakshatra. For ex., if someone is born in Ashwini Nakshtra as birth nakashatra, then the next eight nakshatra's consecutively namely bharani, krittika, rohini, mrigashirsha, thiruvathirai, punarpoosam, poosam, ayilyam total 9 nakshatras termed to Nava Tara.

Each nakshatra has a special purpose and meaning.
1st- Ashwini - Janma Tara - Birth
2nd- Bharani - Sampath Tara - Wealth
3rd- Krittika - Vipat Tara - Danger
4th- Rohini - Kshema Tara - Well being
5th- Mrigashirisha - Pratyak Tara - Obstacles
6th- Thiruvathirai/Ardra - Saadhana Tara - Achievement
7th- Purarpoosam - Naidhana Tara - Death
8th- Poosam - Mitra Tara - Friend
9th- Ayilyam - Parama Mitra - Good Friend

Now, let us check an example of how to view Nava Tara from moon/chandra in Jagannatha Hora software

Open your chart and right click in the Longitude & Basic info pane and look for option Nava Taras (from moon) as shown in below image




Click on the option to view Nava Tara counted from your Janma Nakshatra






In the example chart, Janma Nakshatra is Punarpoosam, /Guru's/Jupiter's Nakshatra, hence the next consecutive 8 nakshatra in total constitute Nava Taras.

The 3rd, 5th and 7th nakshatra namely 
3rd Vipat which is Dangerous Nakshatra, and 
5th Pratyak which is Obstacles or Hindrance giving Nakshatra and finally, 
7th Naidhana the Death, causing death or death alike effect or illness or diseases of some kind.

Note that the above nakshatras are ruled by Mercury, Venus and Moon. So whenever, any Kochara/Transit planet like Guru or Shani transits over these unfriendly nakshatras, it is to be noted that the bad effects are active in your horoscope. The other 2 sets of nakshatra for each lord also cause the same malefic effects.
 
Bhudha's 3 nakshatra's Ayilyam, Jyesta/kettai, Revati
Sukra's 3 nakshatra's Bharani, Pooram, Pooradam
Chandra's 3 nakshatra's Rohini, Hasta, Thriruvonam/Sravanam

All the above 9 nakshatra's out of total 27 nakshatras will be unwelcome and unfriendly to a person if the lords are well placed strongly in his/her horoscope. If they are not strong then the bad effects will not affect the person.

Similarly, the 2nd nakshatra which is wealth giver sampath nakshatra, in the above example is pushya which is Saturn's nakshatra gives wealth or source of income to the native during its dasha or when a planet transits over it, the fruits of that planet will be given to the person. Not only that particular nakshatra, Saturn's being also the lord of other 2 nakshatra's namely Anusham/Anuradha and Uthratadhi/Utharabhadrapada also give the same effect of sampath.

If the 2nd nakshatra's Lord wealth or 4th nakshatra's lord well-being is in situated in malefic position in a horoscope, then there will be struggles getting the good effects. 

Propitiating Adi-devata of those nakshatra or visiting respective temple or providing charity on that nakshatra day would give benefic and fruitful effects on a native of the horoscope.

To know which nakshatra's are friendly and unfriendly in your horoscope click here to get a consultation or Whats app
Also to know about planetary kavach and get one for a weak or malefic planet in your horoscope click here



ஜோதிடம் அடிப்படை அறியாத வெகு ஜன மக்களுக்கு எவ்வாறு ஒரு நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாக தனக்கு வருகிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவர் பிறக்கும் போது அந்த நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறாரோ அல்லது அமர்ந்திருக்கிறாரோ அந்த நட்சத்திரமே ஒருவருடை பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நச்சத்திரம் ஆகும். சந்திர பகவான் தோராயமாக தினமும் ஒரு நட்சத்திரத்தை கடப்பார்.

நவ தாரா என்பது ஒன்பது தாரை. அதாவது ஒருவர் பிறந்த ஜென்ம நட்சத்திலிருந்து அடுத்தடுத்து வரும் 8 நட்சத்திரங்களாக ஒன்பது நட்சத்திரங்களை நவ தாராஸ் என்று வழங்கபடுகிறது. உதாரணமாக, ஒருவர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அது ஜென்ம நச்சத்திரம் ஆகும், அடுத்து வரும் நட்சத்திரங்களான பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசிரீஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், அயில்யம் சேர்த்து 9 நட்சத்திரங்களை நவ தாரா என்பது.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அர்த்தம் மற்றும் பயன் உள்ளது.
1`வது - அஸ்வினி  - ஜென்ம  தாரா  - பிறப்பு
2'வது - பரணி - சம்பத்து தாரா  - செல்வம்/பொருளாதாரம்
3`வது  - கார்த்திகை - விபத்து தாரா அபாயம்
4`வது  - ரோகினி  - ஷேம தாரா நன்றாக வாழ்வது
5`வது - மிருகசிரீஷம்  - பிரத்யக் தாரா தடைகள்
6`வது  - திருவாதிரை  - சாதனா தாரா சாதித்தல் வெற்றியடைதல்
7`வது  - பூனர்பூசம்  - நைதானா மரணம்
8`வது  - பூசம் மித்ரதாரா  -  நண்பன்
9`வது - ஆயில்யம்  - பரம மித்ர தார நல்ல நன்பன்

இப்போது, சந்திரனிலிருந்து நவ தாரைகளை எவ்வாறு ஜகன்நாத ஹோரா சாப்ட்வேரின் மூலம் அறிந்து கொள்வதை பற்றி பார்ப்போம்.

தங்கள் ஜாதகத்தை திற்வுங்கள். வலது பக்கம் உள்ள Longitude & Basic info என்ற இடத்தில் மவுஸை வைத்து இடது கிளிக் செய்து நவ தாராஸ்(சந்திரனிலிருந்து) என்ற ஆப்ஷனை கீழே உள்ள படத்தில் உள்ளபடி போல் காணாலம்.


நவ தாரா



வலது கிளிக் செய்து Nava Taras(from moon) ஆப்ஷனை தேர்ந்தெடுத்து நவ தாரைகளை பார்க்கவும்.


நவ தாரா



உதாரண ஜாதக்த்தில் ஜென்ம நட்சத்திரம் பூனர்பூசம் குரு பகவானுடைய நட்சத்திரம். ஆக அதற்கு அடுத்தடுத்து வரும் 8 நட்சத்திரங்கள் பிறப்பு நட்சத்திரகளுடன் சேர்ந்து நவ தாரை என்று அழைக்க படுகிறது.

இதில் 3, 5 மற்றும் 7`வது நச்சத்திரங்களான,
3`வது விபத்து தாரை மிகவும் அபாயகமான நட்சத்திரம்.
5`வது பிரத்தயக் தாரை அதாவது தடைகள் அல்லது தொந்திரவுகள்.
7`வது நைதன தாரை, மரணததை சம்பவிப்பது அல்லது மரணம் போல் ஒரு சூழ்நிலை / உடல் ரீதியான மோசமான நோய் பினி அல்லது வியாதி போன்ற‌ நிலைமையை உருவாக்கி விடும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிருக்கும் புதன், சுக்ரன் மற்றும் சந்திரன் அதிபதிகளாக ஆவார்கள். ஆக எப்போதெல்லாம் சனி மற்றும் குரு கோச்சாரம் இந்த நச்சதிரங்களை கடக்கிறதோ அப்போதெல்லாம் பிரச்சினைகள் வரும், கெட்ட நேரம் ஆரம்பிக்கும் காலம்.

இதுபோல் மேலே உள்ள‌ நட்சத்திர அதிபதிகளுக்கு இன்னும் 2 செட் நட்சத்திரங்களும் இவ்வாறே கெடுதல் பலன்களை செய்யும்.

புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி
சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம்
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

ஆக மேலே உள்ள ஒன்பது நட்சத்திரங்களும் நல்ல நிலமையில் செயல்படமாட்டாது. 27 நட்சத்திரங்களுள் இந்த 9 நட்சத்திரங்களின் அதிபதிகள் பலம் பொருந்தி அமர்ந்திருந்தால் கெடுதல பலன்கள் வந்து சேரும். பலம் இல்லை எனில் கெடுதல் பலன்கள் வர வாய்ப்பில்லை.

இதே போல், 2`வது நட்சத்திரமான செல்வத்தை கொடுக்கும் சம்பத்து நட்சத்திரம் மேலே உள்ள உதாரண ஜாதகத்தில் பூசம் நட்சத்திரமான சனி பகவான் நட்சத்திரம். பொருளாதார‌ மேன்மையை மற்றும் பண வரவை, சனி பகவான் இந்த ஜாதகத்திற்கு குறிப்பார். மேலும் பூசம் நச்சத்திரம் மற்றும் அல்லாமல் சனி பகவான் அதிபதியாகிய மேலும் இரண்டு நச்சதிரமான அனுஷம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரங்களில் கோச்சார கிரங்கள், அல்லது சனி பகவான தச புத்தி அந்தர் காலங்களில் பொருளதாரம் சார்ந்த உயர்வை தரும்.

2`வது நட்சத்திரமான சம்பத்து தாரையின் அதிபதி மற்றும் 4`வது நட்சத்திரமான ஷேம தாரையின் அதிபதிகள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமராதிருப்பின் நல்ல பலன்கள் நடக்காமல் போகும்.

அக்கிரகத்தின் அதிதேவதையை வணங்குவதன் மூலமும், பிரசித்தி பெற்ற‌ கோவில்களுக்கு சென்று வருவதும், அந்த நட்சத்திர நாட்களில் அன்னதானம் செய்வதும் நற்பயன்களை தரும்.

உங்கள் ஜாதகத்தில் எந்தெந்த நட்சத்திரங்கள் நல்ல தட்சத்திரங்கள் பற்றி அறிய ஜோதிட ஆலோசனை பெற விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும் அல்லது வாட்ஸ் ஆப் செய்யவும்.

மேலும் தங்கள் ஜாதத்திற்கு ஏற்ப எந்த கிரக கவசத்தை அணிவது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.


- Karthik. R

No comments:

Post a Comment