New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 6 September 2022

Planets that bring wealth as per Navamsha Chart - நவாம்ச கட்டத்தில் செல்வம் தரும் கிரகங்கள்


which planets will give wealth
Lord Swarna Akarshana Bhairavar(Form of Supreme Godhead Shiva) showering wealth to Wealth Goddess Maha Lakshmi and Wealth Treasure keeper Kubera Yaksha. Coincidence or fact, Bull(Rishaba Nandi Deva) being Vehicle for Lord Siva is also the symbol denoting Bullish market in economy.Often even without job or with job people are supposed to get several sources of income. Let us examine that from Navamsha chart. D9 chart will show which planets will bring wealth to the native of the chart.

Rule:

Trikona/Trine houses from 10th house in Navamsha Chart.

10th house trines are 2,6,10. If any planets are situated in any of these houses then the first preference goes to those planets and the native may acquire source of income as per the respective planetary signification.

Let us see the below example of one of my friend's chart.


planets that bring wealth


Navamsha D9 Lagna is Pisces/Meena
10th house is Dhanus
Trine houses to 10th are.,
2nd house Aries/Mesha - 1 planet Jupiter is posited
6th house Leo/Simha - 1 planet Venus is posited
10th house Dhanus/Sagittarius - No planets from Navagraha group. Maandi is posited.

Hence, wealth bringing planets for this chart are Jupiter/Guru and Venus/Sukra.

Jupiter being Guru, money or income source is through teaching, guiding, consulting etc... 
This friend of mine is currently in Teaching profession at a private school.

Venus denoting wife of the native, income source will come from wife. Venus also denotes textiles, yarn, silk, clothing, boutique, jewelry, fancy, parlour, tailoring, luxurious and precious products, so the native's wife may involve in one such said business and add a source of income to native chart.

Maandhi being in 10th have delayed his income source for a very long time during his 20s-30s and now everything is smooth sailing.

In D9 ashtakavarga, Jupiter being in leading 5 bindus, so we can conclude that his income is primary source whereas Venus earning 3 bindus and his wife's income source will be of secondary source.

Note that Jupiter is Vargottama, being in Mesha Rasi in both D1 Rasi chart and D9 Navamsha Chart.
And also Venus being in Parivartana Yoga, exchange of house lords 1st and 2nd with Mercury denoting the native Lagna is also a source of income and his family 2nd house will also bring wealth to the native.

This is one of the simplest method to judge the income source of any chart. If there are no planets then the lords of those 2,6,10 house should be taken. And in rare case the planets aspecting those 3 house will also give extra income. Usually, the charts of persons with several varied sources of income will have these kind of horoscope in which Planets in Trikona houses from 10th, Lords being beneficially placed and more planets aspecting these 3 houses.

For consultation of planetary kavach to wear as per horoscope or if interested in buying any planetary kavach to wear and test it one may place order through below link.


Visit Store Page for other purpose Kavachs/Talismans, click here...


predicting stock market bullish and bearish in astrology
Pic Courtesy: Reuters Graphics


ஒருவருக்கு வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், பல வழிகளில் வருமானம் வர நேரிடும். நவாம்ச கட்டத்திலிருந்து எந்தெந்த கிரகங்களின் மூலம் செல்வங்கள் வரும் என்பதை பற்றி அலசுவோம்.


விதி:


நவாமச கட்டத்தில் 10 ஆம் வீட்டு திரிகோன வீடுகள்.


அதாவது நவாமச கட்டத்தில் லக்னத்திலிருந்து 10 வீட்டின் திரிகோண வீடுகளான 2,6,10 ஆகிய வீடுகளில் எதேனும் கிரகங்கள் இருப்பின் அந்த கிரகங்கள் சுட்டும் காரகத்துவங்கள் மூலம் வருவாய் ஜாதகருக்கு கிடைக்கும்.


உதாரணத்திற்கு எனது நண்பர் ஒருவரின் ஜாதகத்தை கீழே கொடுத்துள்ளேன்.
ஜோதிடம் மூலம் பங்கு சந்தையில் லாபம் ஈட்டுவது எப்படிநவாம்ச லக்னம் மீனம்
10 ஆம் வீடு தனுசு ராசி
10 ஆம் வீட்டின் திரிகோண வீடுகள்,
2 ஆம் வீடு மேஷம்  குரு, ஒரு கிரகம் அமர்ந்திருக்கிறார்.
6 ஆம் வீடு சிம்மம் சுக்கிரன் ஒரு கிரகம் அமர்ந்திருக்கிறார்.
10 ஆம் வீடு தனுசில் நவ‌கிரகம் இல்லை மாந்தி அமர்ந்திருக்கிறார்.ஆகவே, வருமானம் தர கூடிய கிரகங்கள் இந்த ஜாதகத்தை பொருத்த வரை குரு மற்றும் சுக்கிரன்.


குரு பகவான் ஆசிரியர், ஆலோசனை வழங்குதல், கன்ஸல்டிங் போன்ற வகைகளில் வருமானம் தருவர். இந்த நண்பர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.


சுக்கிரன் ஜாதகரின் மனைவியை குறிப்பதால், மனைவி மூலமாக வருமானங்க வரும் என்பதை காட்டுகிறது. மேலும் சுக்கிரன் ஜவுளி, பருத்தி நூல், பட்டு, துணிக்கடை, நகைகடை, பெஃன்சி பொருட்கள், அழகு நிலையம், டெய்லரிங், ஆடம்பரம் மற்றும் விலைமதிப்பிற்குறிய பொருட்கள் அனைத்தையும் காட்டுவதால், ஜாதகரின் மனைவி எதாவது ஒரு காரகத்துவம் காட்டும் தொழிலிருந்து வருமானங்களை ஜாதகருக்கு ஈட்டுத்தருவார்.


மாந்தி 10 ஆம் வீட்டில் இருப்பதால் வருமான வரும் வழிகள் அனைத்தும் தனது 20-30 வயது வரை முடங்கியிருந்து தற்சமயம் நல்ல படியாக உள்ளது.


நவாம்ச கட்ட அஷ்டவர்க்க பரல்களில், குருவிற்கு 5 பரல்கள் அதனால் ஜாதகரின் வருமானம் பிரதான‌ முதன்மையானதாகவும், சுக்கிரன் 3 பரல்கள் கொடுத்துள்ளதால் மனைவியின் வருமானம் இரண்டாம் பட்சமாக எடுத்து கொள்ளலாம்.


குறிப்பு: குரு ராசி மற்றும் நவாம்சத்தில் மேடத்தில் இருந்து வர்கோத்தமம் அடைந்துள்ளார். அதேபோல் சுக்கிரன் புதனுடன் 1 மற்றும் 2ஆம் வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனையாகி ஜாதகருக்கு குடும்ப உறுபினர்கள் மூலமாகவும் வருமானம் வரும்படியாக அமைந்துள்ளது.


ஒரு ஜாதக்த்தில் எந்த முறையில் வருமானம் வரும் என்பதை கணிப்பதற்கு இது ஒரு சிறந்த சுலபமான வழிமுறையாகும். கிரகங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், 2,6,10 ஆம் வீட்டின் அதிபதிகளின் காரகத்துவத்தை கொண்டு அறியலாம். சில சமயங்களின் அம்மூன்று வீட்டின் மேல் வேறு கிரக பார்வைகளின் பலன்களை கொண்டும் திரவிய லாபம் வரும் வழிகளை அறியலாம். 


பொதுவாக பல்வேறு வழிமுறைகளில் வருமானம் வரும் ஜாதகங்கள் அனைத்தும் இந்த மூன்று விதமான அமைப்புகளில் இருக்கும், நவாம்ச 10ஆம் திரிகோண வீடுகளில் அமர்ந்த கிரகங்கள், அவ்வீட்டின் அதிபதிகள் சுபர் வீடுகளில் இருத்தல் மற்றும் 3 வீடுகளின் மேல் விழும் மற்றய கிரக ‍பார்வைகளின் மூலமாகவும்.


ஜாதகப்படி எந்த கிரக கவசம் அணிந்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ள அல்லது வாங்க‌ விருப்பம் இருப்பின் எதாவது கிரக கவசத்தை அணிந்து சோதனை செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யவும்...


https://www.payumoney.com/paybypayumoney/#/8DC315A5CF3DC0517926F51C1F49327C


வேறு விதமான உபயோகத்திற்கு கவசைங்களை வாங்க கவசங்கள் பற்றின‌ பக்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...- Karthik. R

No comments:

Post a Comment