New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 5 November 2021

Research on planets in between Rahu Ketu Axis(vice versa) - ராகு கேது அச்சில்(மாறாகவும்) கோள்களின் நிலை பற்றிய ஆய்வு

 

planets inside rahu ketu

                    There are several interpretations made by astrologers of the world on these two nodes viz., Rahu Ketu aka North and South nodes of moon. Because ancient classical texts haven't dealt with shadow planets they only included 7 planets for prediction. Some scholarly articles say these two shadow planets serve purpose on human affairs in this present Kali Yuga only. Kali Yuga as most of us know is intense in terms of adharmic activities and also at the same time many people seek salvation from past sin. May be it is the design that several old souls be born in kali yuga and experience their karmic retribution and balance fully in this yuga through these agents called rahu and ketu and attain moksha so that we can pass in clear record for next satya yuga(kreta yuga) where people are devoted to dharmic activities only. No doubt these two planets are responsible for all the known technology development which the earth has not seen in its recorded history and we are living in motorized modernized and luckily transcendental Aquarian age of civilization with exploding population.

In general many researchers might have noticed these three types of classification of Rahu-Ketu Axis in any astrological chart.

1. Planets posited within Rahu to Ketu(Head to tail).

2. Planets posited within Ketu to Rahu(Tail to head).

3. Planets posited on both side of axis.

Of these three types people with 2nd type Tail to Head ie., planets in between Ketu to Rahu are more successful in their material life and at the same time lose everything quickly like fame, wealth, wife, family etc…

The first type Head to Tail ie., planets in between Rahu to Ketu are generally successful in second and third part of life(usually above 36 or 42 years of age). But people in the early stages of life will experience most abnormal environment without healthy family situations and conditions that are so worst and after they have come up in life, when someone hears their story of life one would easily feel sympathy at the same time inspirational too. Most kala-sarpa dosha charts fit in this category.

The 3rd type where planets are equally or unequally distributed on both sides of nodal axis can be taken as the general population. People with the 3rd type live a normal life conditions with ups and downs cycles and balanced lifestyle.

Generally, I have noticed in charts where Venus placed inside ketu to rahu will create disharmony in marriage life, may lead to divorce or bitter marital partnership. Venus posited immediately next to ketu will create unsuccessful love affair, unexpected break up and divorce. Usually people with this planetary scenario even if they marry late in life above 33 might also end in troubled married life. Even if they re-marry based on other planetary combinations with ketu and venus, one might lead happy life or it may also not end in harmonious marital life.

If Mars is placed inside ketu to rahu, one might acquire more lands and may excel in real-estate business if indulged but they would lose everything at some point of life. The wealth earned also will not available with them.

If Saturn is present inside ketu to rahu, change of profession or business will take place periodically. In case of luminaries sun and moon disharmony with father and mother or one might have puritanical parents which may cause distress to some people with this situation of planets.

Mercury would cause interrupted education or academic education might not be useful for career. Jupiter will not exhibit any malefic effect. One may excel in yoga or spiritual sciences and would also get Divine help if one lives with strict moralistic disciplined life.

Above said effects for planets venus, mars, saturn, mercury will not take place if these are retrograde. Jupiter is exception and as we may know sun and moon doesn’t retrograde.

For consultation of planetary kavach to wear as per horoscope or if interested in buying any planetary kavach to wear and test it one may place order through below link.

Visit Store Page for other purpose Kavachs/Talismans, click here...ராகு கேதுகளை பற்றி பல ஜோதிடர்கள் பல விதமாக கணித்து வைத்திருக்கிறார்கள். பண்டைய காலத்து நூல்களில் இந்த சாய கிரகங்களை பற்றி குறிப்பிடப்படவில்லை வெரும் 7 கிரகங்களை வைத்து தான் பலன் சொல்லிருக்கிறார்கள். சில குறிப்புகள் இந்த இரு கிரகங்கள் நடக்கும் கலியுகத்தில் வாழும் மக்களுக்காக உபயோகபடுகிறது என்கிறார்கள். ஏன்னென்றால் கலியுகத்தில் தான் அதர்மம் அதிமாவதுடன் அதே சமயம் பெரும்பாலன மக்கள் பாவ மணிப்பு மற்றும் பாவத்திற்கான பரிகார உபாயங்களை மேற்கொள்கிறார்கள். பழைய ஆன்மாக்களை இந்த கலியில் பிறக்கவைத்து இது ஏற்கனவே எங்கோ தீர்மானித்து வைத்த கர்ம பதிவுகளை சமம் செய்வதற்காகவும் கர்மவினை தண்டனைகளை அனுபவித்து தீர்ப்பதற்காவுன் இந்த ராகு கேது ஏஜென்டுகளாக செயல்பட்டு நம்மை மோட்சத்திற்கு வழிவகுத்து அடுத்த புது யுகமான தர்மம் மட்டுமே செயலாக உள்ள‌ சத்திய(க்ரேதா) யுகத்திற்கு அனுப்பி வைப்பது போல் உள்ளது. சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இந்த இரு கிரகங்கள் தான் நாம் நம் எழுதப்பட்ட பூமி வரலாற்றில் காணாத அளவிற்கு இப்போது அனுபவித்து வரும் ஜனதொகை கூடுதலான இயந்திரதுவ நாகரீக‌ விஞ்ஞான, மெய்ஞான அக்குவேரியன் ஏஜ் என்று மேலை நாட்டவர்கள் சொல்வது போல் உலகத்தினை தந்துள்ளது.


ராகு கேது அச்சில் கிரகங்கள் நிற்கும் நிலையை மூன்று விதமாக ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் பார்த்திருக்கலாம்.


1. எல்லா கிரகங்களும் ராகுவிலிருந்து கேது விற்குள்(தலையிருந்து வால்வரை).
2. எல்லா கிரகங்களும் கேதுவிலிருந்து ராகுவிற்குள்(வாலிருந்து தலைவரை).
3. கிரகங்கள் அச்சின் இரு பாகத்திலும்.


இந்த மூன்று நிலைகளில், 2'ஆவது நிலை வாலிருந்து தலைவரை அதாவது கேதுவிலிருந்து ராகுவிற்குள் கிரக‌ங்கள் எல்லாம் நிற்கும் நிலையுடை ஜாதகர்கள் லொவ்கீக வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். அதே சமயம் அவர்கள் எல்லாவற்றையும் வெகு சீக்கிரம் இழந்து விடும் நிலையும் ஏற்படும் புகழ், செல்வம், மனைவி, குடும்பம் போன்றவை...


முதல் வகை தலையிலிருந்து வால்வரை அதாவது ராகுவிலிருந்து கேதுவிற்குள் எல்லா கிரகங்கள் நிற்கும் நிலை பெற்ற ஜாதகர்கள் பொதுவாக வாழ்கையில் இரண்டு மற்றும் மூன்றாம் பகுதியில் நல்ல நிலையில் வாழ்வார்கள்(சுமார் 36 வயது அல்லது 42 வயதுக்கு மேல்). ஆனால் வாழ்க்கையில் ஆராம்ப நிலைகளில் மிகவும் கஷ்டமான குடும்பம் மற்றும் மோசமான வாழ்வியல் சுழலில் இவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் முன்னேறிய பிறகு அவர்கள் வாழ்கை கதையை கேட்டால் சிலர் அனுதாபபடுவதோடு பலருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்க கூடும். பெரும்பாலன் கால சர்ப்ப ஜாதகங்கள் இந்த வகையை சார்ந்ததாகும்.


3'வது வகை கிரகங்கள் சரிசமமாகவோ அல்லது சமமாக இல்லாமலோ ராகு கேதுவின் அச்சின் இரு பாகத்திலும் இருக்க பெற்றவர்கள். பொதுவான ஜனதொகை மக்கள் இந்த நிலை ஜாதகர்களாக இருப்பார்கள். வாழ்க்கை சக்ர வண்டி மேடு பள்ளங்களுடம் மிகவும் சமமாக ஓடக்கூடும், ஒரு வித சமமான சகஜ வாழ்கைதர‌ நிலையில் வாழ்வார்கள்.


பொதுவாக நான் பார்த்த ஜாதகங்களில் சுக்கிரன் கேதுவிலிருந்து ராகுவிற்குள் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு திருமண வாழ்க்கை கசப்பானதாக‌ இருக்ககூடும் அல்லது விவாகரத்தும் கூட நேரிடும். சுக்கிரன் கேதுவிற்கு உடனே பக்கத்தில் இருந்தால் எதிர்பார்க்காத வகையில் காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படக்கூடும். பொதுவாக இந்த நிலையில் ஜாதகம் உள்ளவர்கள் காலம் கடந்து அதாவது 33'க்கு மேல் திருமணம் செய்தாலும் பிரச்சினைக்குரிய திருமண வாழ்க்கை உள்ளவர்களாக இருப்பார்கள். மறுமணம் செய்தாலும், கேது சுக்கிரன் உடன் இருக்கும் மற்ற கிரக நிலைகளை பொருத்து வாழ்க்கை சந்தோஷமாகவோ அல்லது மிகவும் கசப்பானதாகவோ இருக்ககூடும்.


செவ்வாய் கேது ராகு அச்சில் இருந்தால், நிறைய நில புலன் சம்பாதிப்பார், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டால் முன்னோடியாக திகழ்வார் ஆனால் எல்லாமே வாழ்க்கையில் எதோ ஒரு கட்டத்தில் விட்டு போய்விடும். சேர்த்த செல்வமும் மிஞ்சாது.


சனி கேது ராகு அச்சில் இருந்தால், உத்தியோகத்தையோ அல்லது தொழிலையோ சதா மாற்றி கொண்டிருக்கும் நிலை ஏற்படும். சூரிய சந்திரன் போன்ற ஒளி கிரகங்கள் இருந்தால் தாய் தந்தையுடன் சுமகமான நிலை காண‌ப்படாது அல்லது மிகவும் கண்டிப்பான பெற்றோர்களாக இருந்து அதனால் பல கவலைகளும் துன்பங்களும் ஒரு சிலருக்கு வரக்கூடும்.


புதன் இருந்தால் கல்வி படிப்பில் தடை ஏற்படுத்தகூடும் அல்லது ஏட்டு கல்வி வருமானம் ஈட்டுவதற்கு வழி வகுக்காத நிலை எற்படும். குரு எந்த ஒரு கெடுதல் பலனையும் காண்பிக்காது. ஒருவர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வாராயின் யோகம் மற்றும் ஆன்மீகத்தில் உயர்வு நிலை பெறும் வாய்ப்பு கிட்டும் மற்றும் தெய்வ அனுகூலம் பெரும் வாய்ப்பு உள்ளது.


மேலே சொல்லப்பட்ட பலன்கள் எப்போது பொருந்தாது என்றால் சுக்கிரன், செவ்வாய், சனி, புதன் ஆகிய கிரகங்கள் வக்கிர கதி பெற்றிருந்தால். குரு விதிவிலக்கு மற்றும் சூரிய சந்த்ரன் வக்கிரகதி அடைவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே.


ஜாதகப்படி எந்த கிரக கவசம் அணிந்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ள அல்லது வாங்க‌ விருப்பம் இருப்பின் எதாவது கிரக கவசத்தை அணிந்து சோதனை செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆர்டர் செய்யவும்...


https://www.payumoney.com/paybypayumoney/#/8DC315A5CF3DC0517926F51C1F49327C

வேறு விதமான உபயோகத்திற்கு கவசைங்களை வாங்க கவசங்கள் பற்றின‌ பக்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...


- Karthik. R

No comments:

Post a Comment