New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 24 July 2015

Retrograde Planets - வக்கிர கிரகங்கள்

Navagraha Peedam/Planetary Sanctum Sanctorum in a Temple


What is meant by Retrograde Planets ?

Retrograde is called as Vakra in vedic astrology. In Tamil Vakkira grahangal. The synonym for Vakra in both Tamil and Sanskrit is Crooked mind. Hence it explains that planet in Vakra or Retrogression becomes crooked and does not yield good results for the concerned chart.  But there are many rules we will see those later.

Reverse or Backward Motion is called Retrogression or Retrograde motion of planets. To explain it further,

- Planets Sun and Moon always move only in Clockwise/Direct Motion. They never retrograde.
- Planets Rahu and Ketu always move only in Anti-Clockwise/Reverse motion(Retrograde Motion).
- Planets Mercury, Venus, Mars, Jupiter and Saturn move in both direct and backward motion.

Note: Planets do not move in reverse direction astronomically in Space. From the Earth’s point of view those planets seem to move in opposite direction i.e., in direction opposite to earth sometimes due to the speed. It is actually an illusion to the viewer in Earth. But it is a major element in Astrology.

You can also check in your horoscope whether any of the above 5 planets are retrograde i.e., whether you are born when any planet is retrograde motion. Open your chart in Jagannatha Hora.

Look at the example chart below. In Jagannatha Hora Retrograde Planets are highlighted within OPEN BRACKETS ( ).


Click to Enlarge


In the above example chart Mars, Jupiter and Mercury are Retrograde. That is they are moving in anti-clockwise/reverse direction.

The effects of Retrograde planet vary from chart to chart. If there are more than 2 Retrograde planets in a horoscope chart excluding Rahu and Ketu, then that particular chart is very difficult to predict. Even if an astrologer predicts, the predictions may surely go wrong. This is not due to the inability of astrologers to predict, but it is due to the effects of Retrograde planets. We will see in detail about Retrograde planets in the upcoming posts.




வக்கிர கிரகங்கள் என்றால் என்ன?


பொதுவாக கிரகங்கள் நேராக அதாவது கடிகார சுற்றில் சுற்றும். ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கிச் சுற்றும். சில சமயங்களில் நேராக 

சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள் சிறிது காலம் பின்னோக்கிச் சுற்றுவது போல் தோன்றும் அத்தகயை நிகழ்வையே ஜோதிடத்தில் வக்கிரகதி என்கிறார்கள். இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால்,


- சூரியன் மற்றும் சந்திரன் எப்போதுமே நேராகத் தான் சுற்றுவார்கள். இவர்களுக்கு வக்கிரகதி எப்போதுமே கிடையாது.


- ராகு மற்றும் கேது எப்போதுமே பின்னோக்கிச் தான் சுற்றுவார்கள்.

- புதன், சுக்கிரன், செவ்வாய், குரு மற்றும் சனி நேராகவும் சிறிது காலம் பின்னோக்கியும் சுற்றும் தன்மை உண்டு.


குறிப்பு: கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இயற்கையாக அதாவது விஞ்ஞான ரீதியாக‌ பின்னோக்கிச் சுற்றும் தன்மை கிடையாது. அனால் நமது பூமியானது சூரியனின் சுற்று வட்ட பாதையில் சுற்றி கொண்டிருக்கும் போது மற்ற கிரகங்கள் சிறிது பின்னோக்கிச் சுற்றுவது போல் தெரியும். இதை தான் ஆங்கிலத்தில் ஓப்டிகல் இல்லுஷன் "Optical Illusion" என்பார்கள். எனவே இவ்வாறான நிகழ்வு ஒரு மாயை தான். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் வக்கிர கிரகங்களின் பங்கு மிகவும் முதன்மையானது.


நீங்கள் உஙகள் பிறப்பு ஜாதகத்தில் மேலே கூறப்பட்டுள்ள ஐந்து கிரக‌ங்களில் எவை வக்கிரம் அடைந்துள்ளன‌ என்பதை பார்க்கவும். Jagannatha Hora'வில் உங்கள் ஜாதகத்தை திறவுங்கள்.


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள், இந்த ஜகன்நாத ஹோர‌ கணினி மென்பொருளில் வக்கிரமான‌ கிரகங்கள் ஒபன் பிராக்கட்( ) மூலம் 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Click to Enlarge


மேலே உள்ள உதாரண ஜாதகத்தில் செவ்வாய், குரு மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் வக்கிரகதியில் உள்ளன. அதாவது அவை கடிகாரச்சுற்றுக்கு எதிர்மறையாக சுற்றும் நேரத்தில் ஜாதகர் பிறந்துள்ளார். 


வக்கிரமான கிரகங்களின் பலன்கள் ஒவ்வொரு ஜாதகத்திற்கு ஏற்றவாறு வித்தியாசப்படும். பொதுவாக ராகு கேதுவை தவிர்த்து மற்ற ஐந்து கிரகங்களில் இரண்டுக்கும் மேற்பட்டவை வக்கிர கிரகங்களாக இருந்தால் அந்த ஜாதகத்திற்கு பலன்கள் சொல்வது மிகவும் கடினமாகும். அப்படியே ஒரு ஜோதிடர் கூறினாலும், அப்பலன்கள் நடைபெறாமல் பொய்யாகிவிடும். இது ஜோதிடர்களின் பலன் கூறும் திறமையில் தவறில்லை, வக்கிர கிரகங்களின் செயல் மிகவும் சக்தி வாய்ந்தது. நேர் எதிர்மறை சிந்தனை தான். நாம் அடுத்து வரும் பகுதிகளில் வக்கிர கிரகங்கள் பற்றி மேலும் உள்ளார்ந்து பார்ப்போம்.

-Karthik. R


No comments:

Post a Comment