New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Wednesday 7 October 2015

Improvement in Life - வாழ்க்கையில் முன்னேற்றம்

horoscience


Many has a question, “Will I improve in Life ?”. Life can mean many things work/career, family, comforts etc...

To answer this question, Yogi, Sahayogi and Avayogi planets play a main role. In the previous post we have seen what these planets are. In this post we will see two living examples with illustration.

As this post is continuation of previous post, Read it first and come back again.

First Chart : Horoscope of my friend and classmate from childhood. Aged 27+, Current Dasa: Jupiter Started on Feb 2008.

Yogi = Jupiter, helps for growth and improvement
Sahayogi = Mercury, Supports the Yogi planet
Avayogi = Sun, Creates obstacle for improvement

Look at the below picture.


horoscience
(Click to Enlarge)

Current Status: Good Job, married and well settled abroad.

Jupiter being the Yogi planet is the lord of 9th house and 12th house for Aries/Mesha Lagna. And it is in Lagna itself. And Mercury is Sahayogi, which is in its own house with venus. He is clever and intelligent and class topper during his academic education at all levels. Sun which is Avayogi is locked between these two planets Jupiter and Mercury. Hence the improvement in his life is exponential. Born in a small town finished his schooling and in 2009 after his completion of Bachelor’s degree locally, then got into reputed University in U.S. for his Master’s degree, graduated there. He is now married and settled in USA. Everything happened in Jupiter Dasa. Jupiter is the Yogi, Mercury, Sahayogi, his memory is astonishing. Luckily Sun, avayogi is in enemy house of Sukra, couldn’t make or create any obstacles in improvement in the path of his life. Note, Jupiter is in its own house, moolatrikona in Navamsa chart.

Second Chart : Horoscope of my friend and classmate from childhood. Aged 28+, Current Dasa: Rahu Started on Nov 2006. Mercury Bhukti  started on Oct 2014 until May 2017.

Yogi = Moon, helps for growth and improvement
Sahayogi = Mercury, Supports the Yogi planet
Avayogi = Mercury, Creates obstacle for improvement

Note: Here same planet is both Sahayogi and Avayogi.

Look at the below picture.


horoscience
(Click to Enlarge)

Current Status: No Job. Still yet to get married and settled.

Moon being the Yogi planet is the lord of 11th house of gains seated in 5th house and aspecting its own house. Current dasa Rahu, whcih is enemy to Moon, hence the improvement of his status is a question. Current Bhukti is Mercury, which is both Sahayogi and Avayogi planet. Note that mercury is also an enemy to moon. Hence the support for Yogi Planet moon is uncertain. The native is trying for banking jobs continuously for the past 3 years but in vain.

Even though Mercury and Venus exchanged in this chart and gives rise to Raja-DharmaKarmathipathi Yoga, It couldn’t show its yoga effect until now. Exactly one year is passed now for Mercury Bhukti. No improvement. It shows how the effect of mercury as both sahayogi and avayogi affected the native of the chart. Mercury being lord of lagna and 10th house of profession confuses the native making him not to choose right decision and stubborn nature. He should have got into a job right now, but due to the mercury’s both supportive and obstacle nature he couldn’t move on. Yet there is still 2 years ahead until mercury completes its bhukti period. So the improvement in status of this native’s life is still a unknown issue. Note mercury is with exalted enemy Mars in Navamsa chart.

Hence from the above two example charts one could understand the role of Yogi, Sahayogi and Avayogi planets.

Now open your charts in Jagannatha Hora and find out role of these three planets in your chart and check whether the improvement in your life is assured or not.

For consultation of your horoscope chart and to know which kavach to wear for balancing the planets evil or good, but hyperactive effect.
Pay using the below link/button.

(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email [email protected]



horoscience

நிறைய மக்களிடம் ஒரு கேள்வி உள்ளது, "நான் வாழ்க்கையில் முன்னேறுவேனா ?"  என்பது தான் அந்த கேள்வி. வாழ்க்கை என்பது வேலை, தொழில், குடும்பம், சுகபோகங்கள் போன்ற என்னற்ற விடயங்களை கொண்டது.

இந்த கேள்விக்கு பதில் கூற யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்கள் பெரும் பங்களிக்கும். சென்றய பதிவில் நாம் இந்த கிரகங்களை என்னவென்று என்பதை பற்றி 
பார்த்தோம். இந்த பதிவில் நாம் இரண்டு உதாரண ஜாதகங்களுடன் பார்ப்போம்.


இது சென்றைய பதிவின் தொடர்ச்சி ஆதலால் அதை படித்துவிட்டு வரவும். அதை வாசிக்க, இங்கே கிளிக் செய்யவும். 



முதல் ஜாதகம்: ஜாதகர் என்னுடைய சிறு வயதிலிருந்தே வகுப்பறை நன்பர், இன்றும் நல்ல‌ நன்பராக உள்ளார். வயது 27, தற்போது குரு மகா தசா நடப்பில் உள்ளது. குரு தசா ஆரம்பம் 
தை 2008.


யோகி = குரு, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை தருபவர்.சகயோகி = புதன், யோகி கிரகத்திற்கு துணை புரிபவர்.அவயோகி = சூரியன், முன்னேற்றத்தில் தடைகளைத் தருபவர்.


கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.


horoscience
(Click to Enlarge)


தற்போதைய நிலவரம்: நல்ல உத்தியோகம், திருமணமாகி நல்லபடியாக வெளிநாட்டில் உள்ளார்.


9 மற்றும் 12 ஆம் வீட்டிற்கு அதியான குரு யோகி கிரகமாகி மேஷ லக்னத்தில் உள்ளார். புதன் சகயோகியாகி, தனது சொந்த வீட்டில் சுக்கிரனுடன் உள்ளார். இந்த ஜாதகர் சாமர்த்தியசாலியாகவும், வகுப்பில் மற்றும் எல்லா கல்வி நிலைகளிலும் முதல் மாணவனாக திகழ்ந்தார். சூரியன் அவயோகி ஆகி குரு மற்றும் புதன் அமர்ந்திருக்கும் வீட்டிற்கு மத்தியில் அகப்பட்டுள்ளார். எனவே இவரது வாழ்வில் அதிவேகமான முன்னேற்றம் என்பது இன்றியமையாத ஒன்று. இவர் ஒரு சிறு நகரில் பிறந்து பள்ளி படிப்பை முடித்து பிறகு 2009 ஆம் ஆண்டு தனது இளங்கலை பட்டப்படிப்பை முத்துவிட்டு அமேரிக்காவில் உள்ள ஒரு சிறந்த பல்கலைகழகத்தில் தனது முதுகலை பட்டத்தை பெற்றார். தற்போது திருமணமாகி அந்நாட்டிலேயே நல்லபடியாக குடிகொண்டுள்ளார். இவை அணைத்தும் குரு தசாவில் 
நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. குரு யோகி, புதன் சகயோகி, அவரது ஞாபக சக்தி ஆச்சரியகரமான ஒன்று. அதிர்ஷ்டவசமாக சூரியன் அவயோகி, தனது எதிரி சுக்கிரனது 
வீட்டில் அமர்ந்து எந்த ஒரு தடங்கள்களையும் வாழ்க்கை பாதையில் எற்படுத்த முடியா வண்ணம் உள்ளார். குறிப்பு, குரு நவாம்சத்தில் தனது சொந்த வீட்டில் மூலதிரிகோணத்தில் 
உள்ளார்.


இரண்டாவது ஜாதகம்: ஜாதகர் என்னுடைய சிறு வயதிலிருந்தே வகுப்பறை நன்பர், இன்றும் நல்ல நன்பராக உள்ளார். வயது 29, தற்போது ராகு மகா தசா நடப்பில் உள்ளது. ராகு தசா ஆரம்பம் நவம்பர் 2006. புதன் புக்தி அக்டோபர் 2014'ல் ஆரம்பித்தது, மே 2017 வரை உள்ளது.


யோகி = சந்திரன், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை தருபவர்.சகயோகி = புதன், யோகி கிரகத்திற்கு துணை புரிபவர்.அவயோகி = புதன், முன்னேற்றத்தில் தடைகளைத் தருபவர்.

குறிப்பு: இங்கே சகயோகியும், அவயோகியும் ஒரே கிரகமாக இருக்கிறார்.

கீழே உள்ள உதாரண ஜாதகத்தை பாருங்கள்.


horoscience
(Click to Enlarge)

தற்போதைய நிலவரம்: உத்தியோகம் மற்றும் திருமணம் இல்லை. 

11 ஆம் வீட்டு லாபஸ்தானதிபதி சந்திரன் யோகி கிரகமாகி 5 ஆம் விட்டில் அமர்ந்து தனது வீட்டையே பார்க்கிறார். தற்போது ராகு தசா, சந்திரனுக்கு ராகு பகை, எனவே முன்னேற்றம் என்பது கேள்விக்குறியான ஒன்று. நடப்பு புத்தி புதன் புத்தி, அவரே சகயோகி மற்றும் 
அவயோகி கிரகமாக செயல்படுகிறார். புதன் சந்திரனுக்கு பகை ஆகிறார். எனவே அவர் யோகி கிரகமான சந்திரனுக்கு அவரது துணையானது கிடைக்க வாய்ப்பில்லை. இந்த ஜாதகர் 

வங்கி உத்தியோகத்திற்காக கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனால் இதுவரை பலன் ஏதும் இல்லை.


என்னதான் புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாகி ராஜ தர்மகர்மாதிபதி யோகத்தை தந்தாலும், இதுவரை யோகத்தின் பலனை தரவில்லை. புதன் புத்தி ஆரம்பமாகி சரியாக ஒருவருடம் ஆயிற்று, எந்த முன்னேற்றமும் இல்லை. புதன் சகயோகி மற்றும் அவயோகியாக எவ்வாறு செயல்பட்டு இந்த ஜாதகரை பாதிக்கிறது என்பதை நம்மால் பார்கக இயலுகிறது. புதன் லக்னாதிபதி மற்றும் 10 ஆம் இடமான தொழில் ஸ்தானதிபதியாகி இருப்பதால் ஜாதகருக்கு எந்த ஒரு சரியான முடிவு எடுக்க இயலாமல் குழப்பத்தை தந்து, பிடிவாதமாக்கி உள்ளது. தற்போது இவர் நல்ல ஒரு உத்தியோகத்தில் அமர்ந்திருக்க வேண்டும், ஆனால் புதனின் துணை மற்றும் தடை செயல்களினால் ஜாதகர் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. எனினும் இன்னும் இரண்டு ஆண்டு காலம் புதன் புத்தி உள்ளது. அதனால் இந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது பற்றி இன்னும் புரியாத புதிராக தான் உள்ளது. குறிப்புபுதன் நவாம்சத்தில் தனது பகையான உச்ச செவ்வாயுடன் உள்ளார்.


எனவே மேலே உள்ள இரண்டு உதாரண ஜாதககங்களை கொண்டு யோகி, சகயோகி மற்றும் அவயோகி கிரகங்களின் செயல்பாடுகளை நாம் அறியலாம்.


இப்போது உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோராவில் திறந்து இந்த மூன்று கிரகங்கள் யார், அவர்கள் வாழ்க்யில் முன்னேற்றத்தை தருவார்களா என்பதை ஆராயுங்கள்.

உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4


(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். https://www.facebook.com/horoscience அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். [email protected]

- Karthik. R


No comments:

Post a Comment