New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Monday 13 July 2015

Jupiter Transit (Guru Peyarchi) 14.07.2015 Thiruganitha - குரு பெயர்ச்சி 14.07.2015 திருகணித பஞ்சாங்கம்

Deva Guru Brihaspathi (Planet in Horoscope)

Thatchinamoorthy, Lord Mahadev Himself

Jupiter Transit held on 05.07.2014 Sunday above 11 p.m. according to Vakya Panchanga followed especially in South India. Lots of people flooded at Alangudi, Apatsahayesvarar Temple.  which is dedicated to Guru/Jupiter planet located in Tamilnadu, India.

I have seen many people worshipping Thatchinamoorthy who is Guru of all Gurus, Lord Mahadev Himself. But actual Jupiter is Brihaspati who is the Deva Guru, Preceptor in the court of Indra. So people first worship Him as he is the one who transits each year. Thatchinamoorthy is Great Guru.
No wrong in worshipping Him too.

Tomorrow Morning 14.07.2017 at 05.34 a.m. according to Thiruganitha Panchagam, Jupiter will exactly move from Cancer to Leo, Kataka to Simha. So dear readers of Horoscience please visit the nearby Shiva temple tomorrow offer yellow flowers to Deva Guru Brihaspati in Navagraha Sannidhana and also worship Thatchinamoorthy. This is correct and accurate day of transit based according to the real movement in the Sky.

It is said that Jupiter transiting from 5th, 7th, and 9th houses from natal moon brings prosperity  and all other places are not favourable. Mesha, Kumbha, and Dhanus rasi people will enjoy comforts. But it is not true, we in Horoscience strictly believe in Kocchara Vedhai as discussed in previous topics.

Kocchara Vedhai Places for Jupiter:
\

Open up your charts in Jagannatha Hora and check for Vedhai/Obstacle in giving results. Visit nearest temple without fail those who have malefic Jupiter.



குரு பெயர்ச்சி 11.07.2015 அன்று இரவு 11 மணி அளவில் நடந்ததை நாம் அறிந்த ஒன்றே. ஆனால் அது வாக்கிய பஞ்சாங்க கணக்கு ஆகும்.


வானவியல் ரீதியாக நாளை காலை 05.34 14.07.2015 தான் தேவ குரு பிரகஸ்பதியானவர் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது திருகணித பஞ்சாங்க கணக்கு ஆகும். இதுவே துல்லிய கணக்காகும். 


நீங்கள் வானவியல் ஆராய்ச்சியாளராக இருந்தால் உங்களுக்கு புரியும். எனவே நாளை முடிந்த மட்டும் கோயிலுக்கு சென்று முதலில் நவக்கிரக பீடத்தில் அமர்ந்திருக்கும் தேவ குரு பிரகஸ்பதியை வணங்கி விட்டு பின்பு தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். ஏனேனில், தேவ குரு நம் ஜாதகத்தில் உள்ள குரு பகவான், தட்சிணாமூர்த்தியோ குருவிற்கெல்லாம் குரு ஆவார், மகாதேவர் சிவன் அல்லவா.


ஜோதிட விதிப்படி கோச்சார குரு சந்திரனிலிருந்து 5,7,9 ஆம் இடத்தில் நின்றால் சுப பலன்கள் நடக்கும் என்றும் ஏனைய மற்ற இடங்கள் அசுப பலன்கள் மற்றும் நற்பலன் தர இயலாத நிலமையாகும். எனவே மேஷம், கும்பம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் நல பலன்களை அடுத்த ஒர் ஆண்டுக்கு அனுபவிக்கலாம் மற்ற ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே என்று கூறலாம். ஆனால் இது உண்மையல்ல, நாம் இங்கு நல்ல பலனோ, தீய பலனோ அவரவர் சுய ஜாதகத்தில் உள்ள மற்ற கிரக நிலைகளை வைத்து தான் மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கு கோசார வேதையை பின்பற்றுவது அவசியமாகிறது. கோசார குரு நல பலன் அல்லது தீய பலன் கொடுக்குமா என்பதற்கு கோசார வேதை விதியை பின்பற்றவும். இதை மற்ற முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தோம். அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


கோசார குரு வேதை ஸ்தானங்கள்:


எனவே ஹோரோசயின்ஸ் வாசகர்கள் உங்கள் ஜாதகங்களை ஜகநாத ஹோராவில் திறந்து வேதை அதாவது பலன்கள் கொடுப்பதில் தடை உள்ளதா என்று பார்க்கவும். மறக்காமல் நாளை அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்யவும்.

- Karthik. R



No comments:

Post a Comment