New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Friday 14 February 2014

Planetary Aspects or Graha Dristi - கிரக பார்வைகள் / கிரக திருக்ஷ்டி



Each planet has aspects on certain houses. All planets have 7th aspect from where it is situated. In other words it sees the 7th house from its location.

But Jupiter, Mars and Saturn have two extra special aspects.
Jupiter aspects 5th and 9th place from its location
Mars aspects 4th and 8th place from its location
Saturn aspects 3rd and 10th place from its location Some say Rahu and Ketu aspects 5th and 9th place from its location (Some astrologers deny it). I personally do not consider this particular aspect of Rahu and Ketu.
 

What do aspect really mean ?

Aspect of the planet means vibrations of the planet. For example, if Saturn aspects 10th house from where it is located then the vibrations of Saturn have been transmitted in the 10th house. Each planet through its aspect creates an effect in the house according to its nature. The aspect of planets is considered to be an important part in matter of prediction.

Aspect of a planet is always powerful. For example, if Sun in Thula aspects Saturn in Mesha through its 7th aspect. Then Sun weakens the effect of Saturn in mesha as Sun is transmitting its vibrations.. Similarly, Saturn weakens the effect of Sun in Thula as Saturn is also transmitting its vibrations through its 7th aspect.

To explain in a simple way:

You are going to temple to see the God/Goddess idol in turn they see you. Hence the vibrations are felt by you when you worship them, so that you may get peaceful mind and good thoughts arise. It is the same when you go and sit in front of a powerful yogi or saint. When they just see you, you feel their vibrations.

To understand better the common statement used by people “Don’t cast evil eyes on me”, “They had cast evil eyes on us”. This it to just show the power of aspect in real life situation. 


Now look into your own horoscopes where does each planets have its aspects on.




ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து வேறு ஒரு இடத்தை பார்க்கும். எல்லா கிரகங்களிக்கும் 7 ஆம் பார்வை உண்டு. அதாவது தான் அம‌ர்ந்த்திருக்கும் வீட்டிலிருந்து 7 ஆம் இடத்தை பார்க்கும்.


ஆனால் குரு, செவ்வாய் மற்றும் சனி ஆகியோருக்கு 2 பார்வைகள் அதிகம் உள்ளது.


குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5 மற்றும் 9 ஆம் இடத்தை பார்ப்பார்.
செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4 மற்றும் 8 ஆம் இடத்தை பார்ப்பார்.
சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3 மற்றும் 10 ஆம் இடத்தை பார்ப்பார்.
சிலர் ராகு கேதுவிற்கு 5 மற்றும் 9 ஆம் பார்வை உண்டு என்று கூறுகின்றனர். (சில ஜோதிடரகள் இதனை மறுகின்றனர்). நானும் எனது ஆராய்ச்சியின் மூலம் இதனை மறுக்கின்றேன்.
 

கிரக பார்வை என்பது உன்மையில் என்ன ?
 

கிரக பார்வை என்றால் கிரக அதிர்வுகள். உதாரணத்திற்கு, சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 10 ஆம் இடத்தை பார்க்கிறார் என்றால் 10 ஆம் இடத்திற்கு தனது அதிர்வுகளை அனுப்புகிறார்.
ஒவ்வொரு கிரகமும் தனது சுய இயல்புக்கு ஏற்றவாரு தனது பார்வையினால் சில தாக்கத்தை அந்தந்த வீட்டின் மீது ஏற்படுத்தும்.
கிரக பார்வைகள் பலன்களை சரிவரக் கூறுவதற்கு முக்கிய பங்கு அளிக்கிறது.
 

கிரகங்களின் பார்வைகள் எப்போதுமே சக்தி வாய்ந்தவை.
உதாரணந்திற்கு, சூரியன் துலா ராசியில் இருந்து சனியை மேக்ஷ ராசியில் தனது ஏழாம் பார்வையினால் பார்க்கிறார் என்றால், சூரியன், மேக்ஷ ராசியில் இருக்கும் சனியினுடைய ஆதிக்கத்தை அதாவது பலத்தை குறைத்து, தனது அதிர்வுகளை அனுப்பி தாக்கதை ஏற்படுத்துவார்.
 

இதேபோல், சனி தனது ஏழாம் பார்வையினால், துலா ராசியில் இருக்கும் சூரியனுடைய ஆதிக்கத்தை குறைத்து தனது அதிர்வுகளை அனுப்பி தாக்கத்தை ஏற்படுத்துவார்.
 

எளிமையான வழியில் விளக்க வேண்டுமானால்,
நீங்கள் கோவிலுக்கு கடவுளை பார்க்க செல்கிறீர்கள், மாறாக கடவுள் முன் நிற்கும் உஙகளை கடவுளும் பார்க்கிறார், ஆக உங்கள் மீது மந்திர அதிர்வுகள் பட்டு சில தாக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கிறது. நல்ல‌ சிந்தனைகள் எழுகிறது. இதேபோல், ஒரு சிறந்த யோகி அல்லது ரிக்ஷி முன் சென்று நீங்கள் அமர்ந்தால், அவர் பார்வை உங்கள் மீது படுவதால் சில அதிவுகளால் உங்களுக்கு தாக்கத்தை எற்படுத்துகிறது.
 

இன்னும் எளிமையாக புரிந்துகொள்ள‌, நாம் தினசரி பேசும் வாக்கியங்களான‌ "கண்ணு படபோகுது", "டே கண்ணு வைக்காதட", "கண்ணு வைச்சுடாங்க",  இதிலிருந்து பார்வைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

இப்போது உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் எங்கே தனது பார்வைகளை செலுத்துகிறார்கள் என்று பாருங்கள்.

- Karthik. R



No comments:

Post a Comment