As today is Saraswathi Pooja Saraswathi Pooja day. I wish all the readers and supporters of this blog let the Goddess of Education Sarawathi Mata bestow her blessings on all of us.
Whether a person gets proper educational qualification/usual academic learning or not, if Saraswathi Yoga is present in the horoscope then he/she is a born intelligent.
Classical authors have described this yoga as, “Saraswathi yoga can make one intelligent, clever in dramatics, writing, mathematics or rhetoric make one an artist, a scholar. a poet, famous, rich and scholarly, renowned, fortunate, honoured and an expert.”
This yoga is formed by three planets viz., Mercury, Jupiter and Venus. These planets should be in their exaltation/own sign/friend’s house which should be a quadrant/kendra’s or trines/trikona’s or in the 2nd house from lagna.
You can use Jagannatha Hora to find the whether the yoga is present or not.
Below is a chart of a leader of a political party in India. Look at the chart you can find the Saraswathi Yoga well formed and adds brilliancy, cleverness to the intellect of the person. It was possible for this person to speak fluently several languages even though academic education was less. The yoga is formed in Rasi Chart(D-1).
(Click to Enlarge) |
According to my research, it is rare to find the yoga in the charts of your friends, relatives or even in your charts. But sometimes the yoga is formed in Navamsa(D-9) chart. It gives the same effect as in Rasi chart. You can find the yogas formed in navamsa using below procedure.
1. Right Click anywhere in the list of yogas displayed.
2. Click on “Select a varga (dividional chart)”
(Click to Enlarge) |
3. Select “Navamsa (D-9)” and click OK.
(Click to Enlarge) |
(Click to Enlarge) |
4. A list of yogas formed in navamsa chart will be displayed.
(Click to Enlarge) |
Below is a chart of my close friend of mine who is very intelligent from his childhood. He has excelled in his studies and currently working in the States after completing his post-graduation in one of the prestigious university in the States. Look at his Navamsa Chart and the Yoga formed in Navamsa(D-9). Saraswathi Yoga is present which has sharpened his brain.
(Click to Enlarge) |
Now open up your charts in Jagannatha Hora and look whether Saraswathi Yoga is present in your Rasi or Navamsa.
இன்று சரஸ்வதி பூஜை ஆகையால், இத்தளத்திற்கு வரும் அனைவருக்கும் கலைமகளின் அருள் கிடைக்கட்டும்.
ஒருவருக்கு எல்லோரையும் போல் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிடினும் சரி அவர்களது ஜாதகத்தில் சரஸ்வதி யோகமானது இருந்தால் போதும் அவர்கள் பிறந்த போதே புத்திமான் ஆவார்.
பழங்கால ஜோதிட நூல் ஆசிரியர்கள், இந்த யோகத்தை பற்றி கூறுகயில், சரஸ்வதி யோகமானது ஒருவரை புத்திசாலியாகவும், கலை, எழுத்து, கணிதம் போன்றவற்றில் சாமர்த்தியசாலியாகவும், மேலும், ஒருவரை பண்டிதர், கவிஞர், புகழ்மிக்கவராகவும், எந்த துறையிலும், வல்லமை படைத்தவராகவும் உருவாக்கும் எனக் கூறியுள்ளனர்.
இந்த யோகமானது, புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களால் உருவாகிறது. இம்மூன்று கிரகங்களும், தன உச்ச வீட்டிலோ அல்லது சொந்த வீட்டிலோ அல்லது நட்பு வீட்டிலோ அமர்ந்து, லக்னத்திலிருந்து இரண்டாம் வீட்டில், அல்லது கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் அமயப்பெற்றால் சரஸ்வதி யோகம் உருவாகும்.
Jagannatha Hora'வில் இந்த யோகம் இருக்கிறதா இல்லயா என்பதை அறிந்து கொள்ள இயலும்.
கீழே உள்ள ஜாதகம், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் தலைவரது ஜாதகம். ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் ராசிக்கட்டத்தில்(D-1) உள்ளதை பாருங்கள். நன்றாக உருவாகியுள்ள இந்த யோகமானது இவர்களுக்கு பல திறமைகளையும், புத்திகூர்மையையும் தந்திருக்கிறது. குறவான கல்வியை பெற்றிருந்த போதிலும் இவர் பல மொழிகளில் நன்றாக உரையாடக்கூடிய திறம் பெற்றவர்.
(Click to Enlarge) |
எனது ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்தது என்னவென்றால் இந்த சரஸ்வதி யோகம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், ஏன் உங்களுடைய சுய ஜாதகத்தில் பார்ப்பதே மிக அபூர்வமாகும். ஆனால் சில சமயங்களில் இந்த யோகமானது நவாம்ச கட்டத்தில்(D-9) தோன்றியிருக்கும். அதுவும் ராசி கட்டத்தில் உள்ளது போன்ற பலன்களையே கொடுக்கும். நவாம்சத்தில் உள்ள யோகங்களை பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பின்பற்றவும்.
1. யோகங்கள் காண்பிக்கபடும் இடத்தில் வலது கிளிக் செய்யவும்.
2. பின்பு “Select a varga (dividional chart)” மீது கிளிக் செய்யவும்.
(Click to Enlarge) |
3. பிறகு “Navamsa (D-9)” என்பதை தேர்ந்தெடுத்து பொத்தானை அழுத்தவும்.
(Click to Enlarge) |
(Click to Enlarge) |
4. நவாம்ச சக்கரத்தில் உள்ள யோகங்களின் அட்டவனை காண்பிக்கபடும்.
(Click to Enlarge) |
கீழே கொடுத்துள்ள ஜாதகம் எனது நெருங்கிய நண்பர் ஒருவருடையது. இவர் சிறு வயதிலிருந்தே புத்திசாலியாக திகழ்ந்தவர். படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். இவர் தனது மேற்படிப்பை ஸ்டேட்சில் ஒரு புகழ் மிக்க பல்கலைகழகத்தில் வெற்றிகரமாக முடித்த பிறகு அங்குள்ள நிறுவனத்தில் நல்ல படியாக வேலை செய்கிறார். அவரது நவாம்ச கட்டத்தில்(D-9) இந்த சரஸ்வதி யோகம் உள்ளதால் புத்தி கூர்மைமையை பெற்றார்.
(Click to Enlarge) |
No comments:
Post a Comment