New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Wednesday 8 October 2014

Yogas in Horoscope 8 - Kemadruma Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 8 - கேமத்துர்மம் யோகம்

Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
Goddess Lakshmi with Kubera and his consort. (Pray for prosperity of wealth. If possible buy a Lakshmi Kuber Yantra and keep in the altar. Note: Kindly avoid consuming diary products including milk and especially curd during night as it would irritate the Goddess and she will leave your house. It is said that even a rich man becomes poor if he consumes curd during night time) ல‌க்ஷ்மி தேவி, குபேரன் மற்றும் அவரது மனைவியுடன். (செல்வம் செழிக்க பிரார்தனை செய்யுங்கள். முடிந்தால் லக்ஷ்மி குபேர யந்தரம் ஒன்றை வீட்டின் பூஜை அறையில் வையுங்கள். தயவு செய்து இரவில் பால் சார்ந்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம். முக்கியமாக தயிர் சாப்பிட்டால் அரசனும் ஆண்டியாவான். எத்தனை பெரிய பணக்காரர் ஆக இருந்தாலும் இரவில் தயிர் உட்கொண்டால் எழை ஆவார்)We have seen subha/good yogas, mostly wealth giving yogas in the previous posts. Now we will see about an asuba yoga which is Kemadruma Yoga. This a bad yoga regarding wealth. It makes a person poor even if he/she is born in a rich family as described in ancient texts. Moreover it is said person with this yoga will not be intelligent and be unlucky.

Kemadruma yoga is one of the Daridra yoga/Poverty yoga. There is a saying in Jataka Parijatam that all the Rajayogas will disappear from horoscope like elephants on seeing a lion due to Kemadruma yoga.

This yoga is formed when there are no planets “With Moon, Behind Moon and Ahead of Moon”. In other words when there is no moon no planet in 1st, 2nd, 12th place from Moon. Here only 5 planets other than Sun, Rahu and Ketu are considered.

But most of the times this yoga gets cancelled when,

1. Any planet (excluding Sun, Rahu and Ketu) are in a quadrant/kendra from Lagna and
2. Jupiter and Venus present in quadrant/Kendra from moon, especially planet like Jupiter form Gaja-kesari yoga when it is present in a Kendra position from Moon.
3. Even if the Moon is powerful and strong Kemadruma yoga gets cancelled. And sometimes if a powerful planet aspects the Moon this yoga gets cancelled.

Note: Too many rules are there for this yoga. So, one should not conclude that the person is poor and unlucky, just by looking the presence of this yoga in Jagannatha Hora software.

Below is a example chart of my friend who is not from a wealthy background. But he struggled and completed his bachelor’s degree and got into a software company thereby completing his master degree program provide by the company itself and also onsite work in Singapore made him grow financially steady and now he is working for a bank abroad offshore from Singapore. He has built his own house in his home town in India.

Look at the presence of Kemadruma yoga in his chart. But at the same time look at the presence of Jupiter in 10th Kendra/Quadrant from Moon which gives rise to Gaja-Kesari yoga and also Moon is in its exalted state in Rishaba/Taurus sign. Hence kemadruma yoga got cancelled and Gaja-Kesari yoga’s presence uplifted the person.


Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
(Click to Enlarge)


Some astrology works consider that this yoga should be looked into seriously only in the charts of Kings and not for normal people.

According to my research Kemadruma yoga does not work properly as it should.

Look at he below chart of my friend who studied with me during college days. He has this Kemadruma yoga. Moon is alone. No planets are present in Kendras/Quadrants. As only Rahu and Ketu present they are not considered. Kemadruma yoga did not show any adverse effects on him. He is intelligent and has completed his masters in computer engineering and also employed in a good company and financially steady.


Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
(Click to Enlarge)


So, I request students of astrology to research and check on this yoga by taking the examples from their friends, relative charts and give their inputs in the FB or blogger comment box below.


இதுவரை நாம் சுப யோகங்களை பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதுவும் தனம் தரும் யோகங்களை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நாம் கேமத்துர்மம் என்னும் ஒரு அசுப யோகத்தை பற்றி பார்ப்போம். இந்த யோகமானது, ஒருவர் வசதியான உயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரை எழ்மை நிலைக்கு தள்ளிவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று பழங்கால ஜோதிட நூல்கள் கூறுகின்றது. மேலும் இந்த யோகம் ஒருவருக்கு இருந்தால் அவர் அறிவற்றவராகவும், அதிர்ஷ்டம் இல்லாதவராகவும் இருப்பார்.
 

 

கேமத்துர்மம் தரித்திர யோகங்களுள் ஒன்றாகும். ஜாதக பாரிஜாதத்தில் இந்த யோகமானது ஜாதகத்தில் உள்ள எல்லா ராஜ யோகங்களும் சிங்கத்தை கண்ட யானைகளைப் போல் மறைந்துபோகும் என்று கூறப்பட்டுள்ளது.
 

 

சந்திரனுடன் கிரகங்கள் ஏதும் இல்லாமல், மற்றும் சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் ஏதும் இல்லாமல் இருந்தால் அதுவே கேமத்துர்மம யோகம் எனப்படும். இங்கே வெறும் ஐந்து கிரகங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளபடும் சூரியன், ராகு மற்றும் கேது விதிவிலக்காகும். அதாவது இந்த மூன்று கிரகங்கள் சந்திரனுடம், மற்றும் அதற்கு முன்னும் பின்னும் இருந்தாலும் கேமத்துர்மம் யோகம் உருவாகும்.
 

 

ஆனால் சில சமயங்களில் இந்த யோகம் பரிகாரமாகும். அதாவது யோகம் பங்கமாகும். எப்போதெல்லாம் என்றால்,
 

 

1. சூரியன், ராகு கேதுவை தவிர மற்ற ஐந்து கிரகங்கள் லக்ன கேந்திரங்களில் அமைந்திருந்தால்.

2. குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சந்திரனுக்கு கேந்திரத்தில் அமைந்திருந்தால். முக்கியமாக குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் அது கஜகேசரி யோகத்தை கொடுக்கும்.

3. சந்திரன் பலமாக இருந்தால் கேமத்துர்மம் யோக பங்கமாகும் மற்றும் சில சமயங்களில் சந்திரனை வேறு ஒரு பலமிகுந்த கிரகம் பார்த்தால் யோகம் பங்கமாகும்.
 

 

குறிப்பு: இந்த யோகத்திற்கு நிறைய விதிகள் உள்ளன. எனவே ஒருவர் Jagannatha Hora'வில் மட்டும் பார்த்து இந்த யோகம் இருந்தால் அவர் எழை மற்றும் புத்திசாலியாக இருக்க மாட்டார் என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது.
 

 

கீழே உள்ளது எனது நன்பர் ஒருவரது ஜாதகம். அவர் வசதியான குடும்பச்சூழலில் இருந்து வரவில்லை. ஆனால் அவர் மிகவும் கடினமாக உழைத்து பட்டதாரி ஆனார். பின்பு மென்பொருள் நிருவணம் ஒன்றில் வேலை பார்த்து அங்கே கொடுக்கப்பட்ட‌ தனது மேற்படிப்பையும் முடித்து சிங்கப்பூரில் அந்த நிருவணம் மூலம் வேலை பார்த்தார். இப்போது சிங்கபூரில் வேறு ஒரு நிருவணத்தில் வேலை பெற்று அயல் நாட்டு வங்கி ஒன்றிற்கு அங்கிருந்த படியே பணி செய்கிறார். பொருதார வசதி நன்றாகவே உள்ளது. நல்ல ஒரு வீட்டுமனை ஒன்றை தனது சொந்த ஊரிலே கட்டி முடித்தார்.
 

 

அவரது ஜாதகத்தில் கேமத்துர்மம் உள்ளதை பாருங்கள். அதே சமயம் குரு சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதையும்
கவணியுங்கள். மேலும் சந்திரன் தனது உச்ச வீடான ரிஷபத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே கேமத்துர்மம் யோகம் பங்கமாகி நற்பலன்களை கொடுத்துள்ளது. கஜகேசரியும் அவருக்கு துணையாக நின்றுள்ளது.
 

Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
(Click to Enlarge)

சில ஜோதிட நூல்கள் இந்த கேமத்துரமம் யோகத்தை அரசாலும் மன்னர்கள் ஜாதகங்களில் தான் பார்த்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சாதரன மக்களின் ஜாதகத்தில் இதை வெகுவாக பார்க்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.
 

 

என்னுடைய ஆராய்ச்சியின் படி இந்த கேமத்துரமம் யோகம் அதற்குரிய பலன்கள் படி சரியாக வேலை செய்வதாக தோன்றவில்லை.
 

 

கீழே உள்ள ஜாதகம் என்னுடன் கல்லூரி பயின்றவரின் ஜாதகமாகும். அவருக்கு கேமத்துர்மம் நன்றாக உள்ளது. சந்திரன் தனித்து உள்ளார். வேரு எந்த கிரகமும் கேந்திரங்களில் கிடையாது. ராகு கேதுக்கள் இருந்தாலும் அவை கணக்கில் வராது. கேமத்துரமம் யோகம் அவருக்கு எந்த ஒரு கெடுதல் பலன்களையும் கொடுக்கவில்லை. அவர் நன்றாக படித்து கணினி துறையில் மேற்படிப்பையும் முடித்து நல்ல நிருவணம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பொருளாதார ரீதியில் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. அவர் புத்திசாலியும் கூட.
 

Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
(Click to Enlarge)

எனவே, நான் ஜோதிடம் பயிலும் மாணக்கர்களை கேட்டுக் கொள்வது என்வென்றால் உங்களுக்கு தெரிந்த நபர்களின் உதாரண ஜாதகங்களைக் கொண்டு இந்த கேமத்துர்மம் யோகத்தின் பலன்களை ஆராய்ச்சி செய்து கீழே உள்ள முகநூல் அல்லது ப்ளாக்கரில் பின்னூட்டம் இடுங்கள்.

-Karthik. RNo comments:

Post a Comment