New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Sunday, 15 February 2015

Abhijit Nakshatra - அபிஜித் நச்சத்திரம்

Lord Krishna riding the Chariot of Arjuna in the Battle of Kurukshetra

Are Nakshatras/Asterisms mentioned in Vedic Astrology 27 or 28 in number ?

There are 28 nakshatras in vedic astrology. For some reasons Abhijit Nakshatra has been removed and astrologers started using only 27 nakshatras each contributing 4 padas or quarters.

Where is Abhijit Nakshatra actually present ?

It is said that Abhijit does not contribute 4 padas. The exact location of Abhijit Nakshatra starts from 6°40" degrees and ends at 10°53"20 degrees in Makara/Capricon raasi.

In other words, Abhijit Nakshatra starts from the last pada of Uttara Shadha/Uttaradam Nakshatra and it extends up to 1/15th part of Shravana/Thriruvonam Nakshatra. It starts from 276 degrees 40 minutes to 280 degrees 53 minutes 20 seconds in natural kalachakra. The major portion of Abhijit Nakshatra lies in Makara Rashi and Meena Navamsha.

What is the importance of Abhijit ?

Abhijit is one of the most auspicious nakshatras. The muhurta of Abhijit is very important to be noted. Any work done in Abhijit Muhurta/Timing will surely give victory, as the name Abhijit itself means “Victorious” or "the One who cannot be defeated".

In Bhagavad Geeta, “Krishna said that He was Shiva among Rudras; He was Arjuna among Pandavas and He was Abhijit among Nakshatras.”

When is Abhijit Muhurta or Timing ?

Abhijit Muhurta starts 28 minutes before 12:00 noon and ends 28 minutes after 12:00 noon. Between 11:38 a.m and 12:28 p.m.

Some texts also say that during midnight 28 minutes before 00:00 28 minutes after is also Abhijit Muhurta.

Any auspicious undertaking can be made during this time if you want to victorious. Even if the day is bad due to combination of inauspicious combination tithi and nakshatra, you will get victory if you do in thing during Abhijit nakshatra.

Note: Some texts deny travelling in South Direction during this time.

The most important event recorded in the history of Bharat was Lord Rama was born at 12 noon and Lord Krishna was born around 12 midnight, approximately 11:50 p.m. Both avatars of Lord Vishnu was at Abhijit Muhurta. Lord Rama got victory against the battle with mighty King Ravana, similarly, Pandavas with Lord Krishna in their side won the battle of Kurukshetra against Gauravas. This denotes the importance of Abhijit Nakshatra.

What happened to Abhijit Nakshatra in Space ?

Modern Astronomy says it is in the constellation Lyra. And gazing through power telescopes they have seen a Supernova in dead state. Only dust particles were seen. It is due to this reason our ancient seers might have skipped the addition of this nakshatra in regular astrology lately. It was present clearly in the sky some 5000 years ago i.e., during 3000 B.C. Click here to download the pdf of modern astronomical proof.

In marriage compatibility, while considering Yoni kuta/Porutham Abhijit is Male Mongoose while Uttara Shada/Uttaradam is Female Mongoose.

Hence there were 28 nakshatras in the beginning and now 27 nakshatras were taken into account in regular astrology. While Abhijit is used only in Muhurta/Electional Astrology. Myth says regular 27 nakshatras are females, daughters of Prajapati Dakshan and were married to Moon and 28th Abhijit was a male.

So readers are asked to test and use Abhijit Muhurta for victory. 28 minutes before and after 12 noon and also midnight 12.



For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link.

(Or)








ஜோதிடத்தில் நச்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தெழா(27) அல்லது இருபத்தெட்டா(28) ?

ஜோதிடத்தில் மொத்தம் 28 நச்சத்திரங்கள் ஆகும். சில காரணங்களினால் அபிஜித் என்ற நச்சத்திரத்தை மட்டும் விலக்கி வைத்துவிட்டு 27 நச்சத்திரங்களை நான்கு பாதங்களாக பிரித்து நமது ஜோதிடர்கள் பயன்படுத்தினார்கள்.

அபிஜித் நச்சத்திரம் எங்கே உள்ளது ?

அபிஜித் நச்சத்திரத்திற்கு மற்ற நச்சத்திரங்களை போல் நான்கு பாதங்கள் இல்லை. இந்த நச்சத்திரம் சரியாக மகர ராசியில் 6°40" பாகையில் ஆரம்பமாகி 10°53"20 பாகையில் முடிகிறது.ஆதாவது அபிஜித் நச்சத்திரம் உத்திராடம் கடைசி பாதத்தில் இருந்து திருவோனம் நச்சத்திரத்தில் 1/15 பங்கு வரை உள்ளதாகும். இன்னும் சரியாக சொன்னால் காலச்சக்கரத்தில் 276° 40" பாகையில் தொடங்கி 280°53"20 பாகை வரை உள்ளது. ஆகவே அபிஜித் நச்சத்திரம் மகர ராசியையும் மீன நவாம்சத்தையும் கொண்டது.

அபிஜித் நச்சத்திரத்தின் முக்கியத்துவம் என்ன ?

அபிஜித் நச்சத்திரமானது மிகவும் மங்களகரமான நச்சத்திரமாகும். அபிஜித் முகூர்த்தம் மிக மிக முக்கியமான ஒன்றாகும். எந்த ஒரு நற்ச்செயலையும் அபிஜித் முகூர்த்த நேரத்தில் செய்தால் அது வெற்றியில் முடியும். அபிஜித் என்றாலே "வெற்றிபெற்ற" என்பது பொருள். 

பகவத் கீதையில், "கிருஷ்ண பரமாத்மா, தான் ருத்திரர்களில் சிவம் என்றும், தான் பான்டவர்களில் அர்ஜுனன் என்றும், தான் நச்சத்திரங்களில் அபிஜித் என்று கூறியிருக்கிறார்".

அபிஜித் முகூர்த்த நேரம் எப்போது வரும் ?

அபிஜித் முகூர்த்தமானது ஒவ்வொரு நாளும் பகல் 12 மணிக்கு 28 நிமிடங்கள் முன்னும் பின்னும் வரும். அதாவது காலை 11:38 முதல் நன்பகல் 12:28 வரை.
சில நூல்கள் மேற்கூறியிருப்பது போல் நள்ளிரவு 12 மணிக்கும் அபிஜித் முகூர்த்த வேலைதான் என்று கூறுகின்றன.

நீங்கள் ஒரு முக்கியமான செயல்கள் செய்யவேண்டுமெனில், அதாவது புதிய ஒப்பந்தம், பயனம், அல்லது முக்கியமானவரை சந்திப்பது போன்றவைகள். அன்றைய நாள் அஷ்டமி, நவமி, அல்லது சந்தராஷ்டம் என்றால் அக்காரியங்கள் தள்ளி போட நேரிடும். ஆனால் அந்த நாளில் நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எற்பட்டால், நீங்கள் அபிஜித் முகூர்த்தத்தில் செய்யலாம். அப்படி அபிஜித் முகூர்த்தத்தில் செய்யும் காரியம் வெற்றியை பெற்று தரும்.

குறிப்பு: சில நூல்ககில் அபிஜித் முகூர்த்தத்தின் போது தெற்கு திசை நொக்கி பயனம் செய்வதை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

நமது பாரத வராலற்றில் முக்கியமான சம்பவங்கள் என்னவென்றால், பகவான் ராமர் பகல் 12.00 மணிக்கு ஜெனித்தார், பகவான் கிருஷ்ணர் நள்ளிரவு 12.00 மணிக்கு ஜெனித்தார், சுமார் 11:50. இரு அவதார புருஷர்களின் ஜெனனம் அபிஜித் முகூர்த்தத்தில் நடந்திருக்கிறது. ராமரும் யுத்ததில் வெற்றி பெற்றார், கிருஷ்ணரை உடன் கொண்ட பான்டவர்களும் யுத்தத்தில் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்வுகளே அபிஜித் நச்சத்திரத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகிறது.

அபிஜித் நச்சத்திரத்திற்கு வான்வெளியில் என்ன நிலை ?

நவீன வான்வெளி ஆய்வகங்கள் அபிஜித் நச்சத்திரத்தை பற்றி கூறுகையில், அது மிக பளிச்சிடும் வெளிச்சத்துடன் கூடிய சூப்பர் நோவா என்ற ஒருவகை நச்சத்திரமாகும். லைரா என்ற நச்சத்திர கூட்டத்தில் இருப்பதாக‌ கூறப்படுகிறது. ஆனால் தற்போது தொலை நோக்கு கருவியின் மூலம் பார்த்தல் வெறும் குப்பை மண்டலமே உள்ளது, அதாவது அந்த நச்சத்திரம் இறந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாகவோ என்னவோ நமது நாட்டின் ரிஷிகள் அபிஜித் நச்சத்திரத்தை ஜோதிடத்தில் பயன்படுத்துவதை நீக்கி விட்டார்கள்.சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.மு. 3000, இந்த நச்சதித்திரம் வானில் தெளிவுகாக தெரிந்திருக்கிறது. பின்பு மங்கி விட்டது. இதன் ஆராய்ச்சி கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

திருமண பொருத்தங்களில் யோநி பொருத்தம் என்று உள்ளது. அதில் அபிஜித் நச்சத்திரத்தின் யோநி ஆண் கீரி, உத்தராடம் நச்சத்திரத்திற்கு பெண் கீரி.

எனவே 28 நச்சத்திரங்கள் ஜோதிடத்தில் முன் காலத்தில் இருந்தது. பின்பு அபிஜிதை நீக்கிவிட்டு 27 நச்சத்திரங்களை கொண்டு ஜோதிடகலையை பயன்படுத்தினார்கள். இப்போது அபிஜித் முகூர்த்தத்திற்கு மட்டும் பயன்படுகிறது. புராணம் என்ன கூறுகிறதென்றால் சந்திரன் பிரஜாபதி தக்ஷ்னின் மகள்களான 27 நச்சத்திரங்களை திருமணம் செய்துகொண்டான், ஆனால் 28 ஆவதான‌ அபிஜித் நச்சத்திரமோ ஆண் நச்சத்திரம் ஆகும்.

எனவே வாசகர்கள் அபிஜித் முகூர்த்தத்தை பரிசோதித்து வெற்றி பெற பய‌ன்படுத்துங்கள். பகல் 12 மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு 28 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக இம்முகூர்த்தம் தினமும் உண்டு.


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் 

தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.

https://www.payumoney.com/store/product/861b5695122d5632de85cafccd59c689


(அல்லது)


கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். 
https://www.facebook.com/horoscience.karthik 
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 
[email protected]



-Karthik. R.


Friday, 16 January 2015

Kocchara Vedhai - கோசார வேதை

Wishing Everyone Happy Pongal (http://en.wikipedia.org/wiki/Thai_Pongal)
Wishing Everyone Happy Mattu Pongal (http://en.wikipedia.org/wiki/Mattu_Pongal)


The concept "Kocchara Vedhai" has been discussed in previous post. Through applying "Kocchara Vedhai" to a horoscope we can find whether the transiting planet can give effect during its time. Kocchara Vedhai means obstacle for a planet to give its effect both good and bad.

Please read the previous post which is explained with an example about how to use the Kocchara Vedhai Table and Read this post.  Click here to Read.

Below is the table for all planets.

(Click to Enlarge)

கோசார வேதை பற்றி இதற்கு முந்திய பதிவில் நாம் பார்த்தோம்.கோசார வேதை அட்டனையை கொண்டு நாம் கோசார கிரகங்கள் ஒரு ஜாதகத்திற்கு பலன் கொடுக்க இயலுமா அல்லது இயலாத  என்பதை அறிந்து கொள்ளலாம். கோசார வேதை என்றால் தடை, கோசார கிரகங்களின் நற்பலன் மற்றும் தீய பலன்களை கொடுப்பதில் தடை என்பது பொருள்.


இதற்கு முந்திய பதிவை படித்து விட்டு வாருங்கள். அதில் கோசார வேதை பற்றி உதாரண ஜாதகத்துடன் விளக்கபட்டிருக்கிறது. 


எல்லா கிரகங்களுக்கும் கோசார வேதை அட்டவனை மேலே கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த அட்டவனையை pdf கோப்பாக பதிவிறக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.




To dowload the table in pdf format click the download button above.


-Karthik. R.


Tuesday, 16 December 2014

Saturn Transit (Sani Peyarchi), How to know the effect ? -- சனி பெயர்ச்சி பலன்களின் பலம் 16.12.2014

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014
Lord Bairavar (Guru of Lord Saturn/Sani)

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014
Lord Saturn, Saneeswaran, Shani Dev

Lord Saturn, as HE transits form Thulam/Libra to Virichika/Scorpio, people are ready to worship him on today 16/12/2014. Each and every temple where Navagraha’s(9 Planetary Gods)are  installed will be flooded with people all over Tamilnadu, India and also in all other states of India.

People are afraid of the Mighty Saturn as HE gives serious karmic retribution or obstacle in all daily functions when he transits in 12th,1st,2nd ,8th position from Moon in a horoscope chart.

When HE transits is 3rd,6th, 9th and 11th position from Moon’s Lagna HE bestows fortunes.
Rest of the other houses will show neutral effects.

I have seen many advertisement notices published everywhere to attend the rituals/puja to pacify the effects of planet Saturn. These make people very much frightened. Those who do not believe in astrology also participate in these rituals blindly due to his/her  fear of losing his business, family, income, children, health etc…

Below is the table for Saturn Transit’s General Good and Bad Effect for people born in different Moon Rasis/Signs.


Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014


Today in temples we can find the people who are born in signs or rasis for which Saturn gives bad effect. Here most of the people follow blindly without consulting an astrologer. Look how many signs are bad out of 12 rasis 4 rasis are worst. This happens every 2 ½ years for different Rasis. Roughly if you calculate for the State of Tamilnadu alone. The population is 7 Crore, divided by 12 gives  So doing on rough calculation atleast 2 Crore people if are born in these bad result giving Rasis. Think if 2 Crore people are facing problems due to Saturn what will happen. If it is for one state think about whole country and world. If Lord Saturn starts to punish all what will happen, all the activities will be shutdown.

This is what people think and are following blindly due to lack of knowledge in astrology.
There is a concept in Astrology called “Kocchara Vedhai or Koal chara vedhai” or Kocchara Vedh. In Tamil language Koal means Planet, Chara means Transit or movement. Vedhai means obstacle. So it means obstacle for transit planet. What kind of obstacle ? Obstacle in showing its effects or strength on particular houses.
Saturn’s Transit Obstacle places are given below. This should be seen from the house where Moon is placed.


Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014


For Ex.,
For a person born in Mesha/Areis Moon Rasi. The Saturn Transit on tomorrow will be in 8th house from Moon which is Ashtama Sani which will show bad effects. But, you should look at the table above for predicting the results of transit. For 8th house 7th house is Vedhai/Obstacle. So if any planet is present in 7th house it Saturn’s Transit cannot give Bad effects for the person.


Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014


Look at the above chart. Saturn’s Transit in 8th house from Moon would give bad and worse effects for a person till the Saturn moves to next house which will be after 2 ½ years approx. As Jupiter is placed in 7th house Saturn cannot give or show its bad effects to the person. Hence instead of blindly following the general rule one should look at his own chart whether he/she will affected by Lord Saturn.

Similarly with the help of the table you can check your own charts. Either Good or Bad effect, if the place indicated in the table has any planet, both the effects will not happen. It is said 3rd,6th, 9th and 11th places of Saturn’s transit will give good results but in practical one should look at the table and check whether any planet is present in the corresponding house for knowing the results. If any planet is present even the good effects will not take place.

There are also Obstacle/Kocchara Vedhai places for Jupiter, Rahu and Ketu and other planet transits also. As Saturn is transiting today and to enlighten people I am giving only the Saturn’s places. In next post I will post the complete table containing all planets.

Note: Astrologers please follow Kocchara Vedhai as it can be seen working practically in many horoscopes. I have checked it.


Lord Saturn, Saneeswaran, Shani Dev








இன்று சனி பெயர்ச்சி என்பதால், இந்த பதிவை அனைவரின் நன்மைக்காக பதிவிடுகிறேன்.


இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சனிஸ்வர பகவானை தரிசிக்க ஏராளமானோர் கலந்துக்கொள்வர். இதில் பலர் சனி பகவான் மீது கொண்ட அச்சத்தில் தான் கோயில்களுக்கு செல்கின்றனர்.


பொதுவாக சனி பகவான் சந்திர லக்னத்திற்கு 3,6,9 மற்றும் 11 ஆம் ஸ்தானங்களில் பெயர்ச்சியானால் மிக நற்பலன் என்றும், 1,2,8,12 ஆம் ஸ்தானங்களில் மிகவும் தீய பலன் என்றும், மீதமுள்ள ஸ்தானங்களில் சுமாரான பலன்களை கொடுப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதை மட்டும் நமது மக்கள் அறிந்து கொண்டு பயத்துடன் கோயில்களுக்கு செல்கின்றனர். 


தமிழ்நாடின் மக்கள் தொகை எழு கோடி என்றால், 7 கோடி மக்கள் பன்னிரெண்டு ராசிகள் என்றால், தோராயமாக ஒரு ராசிக்கு 58 லட்சம் வீதம் நான்கு ராசிக்காரர்களுக்கு கெடுதல் பலன்களை கொடுத்தால்
சுமார் 2 கோடி மக்களுக்கு தீய, கொடிய பலன் நடக்க வேண்டும், அவ்வாறு நடந்தால் நாடு என்னவாகும். யோசித்து பாருங்கள்.


கீழே அட்டவனையில் எந்த ராசிகளுக்கு எவ்வாறு பலன்கள் என் கொடுக்கபட்டுள்ளது. இதில் நான்கு ராசிகளுக்கு கெடுதல் பலன் என கொடுக்கப்பட்டுள்ளது.

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014



ஆனால் ஒருவர் தனது சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை வைத்துதான் கெடுதல் பலன்களை சனி பகவான் கொடுப்பாரா மாட்டாரா என்ற முடிவுக்கு வர வேண்டும். 


ஜாதக சாஸ்த்திரத்தில், "கோச்சார வேதை" என்ற ஒரு கோட்பாடு உள்ளது.
இதில் வேதை என்றால் தடை என்று பொருள். ஆக கோச்சார கிரங்களுக்கு எப்போது பலன்கள் கொடுக்க தடை என்பது பற்றி சொல்லிருக்கிறார்கள். அது நல்ல பலனாக இருந்தாலும் சரி தீய பலனாக
இருந்தாலும் சரி, தடை இருக்கிறது. அதை ஜாதகத்தில் எவ்வாறு பார்ப்பது.


கீழே உள்ள அட்டவனையை பாருங்கள்.

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014



உதாரண ஜாதகம்.

Saturn Transit 16.12.2014, Sani Peyarchi 16.12.2014, சனி பெயர்ச்சி 16.12.2014



இதில் சந்திரன் மேஷ ராசியில் இருக்கிறார். சனி பகவான் நாளை விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகி சுமார் 2 1/2 ஆண்டக‌ள் அங்கே வாசம் செய்வார். மேஷ ராசிக்கு எட்டாம் இடத்தில் வருவதால்
அஷ்டம சனி என்று கூறுவர். இந்த சனி பெறும் துன்பங்களை தரும். ஆனால் இந்த ஜாதகத்திற்கு சனி பகவானால் கெடுதல் செய்ய இயலாது.


ஏன் என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள கோச்சார தடை அட்டவனையை பாருங்கள். அங்கே சந்திரன் லக்னத்திற்கு எட்டாம் பாவத்தில் சனி பெயர்ச்சியானல், அதற்கு 7 ஆம் பாவம் தடை வீடு. ஆகும்.
எவ்வாறு தடை என்றால் 7 ஆம் வீட்டில் எதாவது ஒரு கிரகம் இருந்தால் சனி அவருடைய பலன்களை கொடுக்க இயலாது. இதற்கு பெயர் தான் கோச்சார வேதை அல்லது தடை.


மேலே உள்ள உதாரண ஜாதகத்தில், 7 ஆம் வீட்டில் குரு இருப்பதால் சனி பகவான் தனது அஷ்டமத்து சனியில் இன்னல்களை ஜாதகருக்கு கொடுக்க இயலாது.


இப்படித்தான் அவரவர் சுய ஜாதகத்தை கொண்டு கோச்சார வேதை ஸ்தானங்களை பார்த்து கோச்சார பலன் கூற வேண்டும்.
வீணாக பொது பலன்களை தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிக்கைகளிலோ பார்த்து படித்து விட்டு பீதியடைந்து பயத்தோடு சனிஸ்வரர்ரிடம் சென்று நிற்காதீர்கள். மாறாக பக்தியுடன் சென்று வழிபடுங்கள். பைரவர் தான் சனிஸ்வரர்ரின் குரு, ஆக பைரவர் வழிபட்ட பின் அவர் அருகில் இருக்கும் சனிஸ்வரர்ரை வழிபடுங்கள். பொதுவாக சிவன் கோயில்களில் அவ்வாறான அமைப்பு இருக்கும்.
சகல செல்வங்களையும் அருள்வார்.


கோச்சார வேதை மற்ற கிரகங்களுக்கும் உண்டு. அதை அடுத்த பதிவில் முழுமையாக தருகிறேன். இன்று சனி பெயர்ச்சி என்பதால் இதை முதலில் பதிவிடுகிறேன்.


குறிப்பு: ஜோதிடர்கள் இந்த வேதை ஸ்தானங்கள கணக்கில் கொண்டு பலன் கூறலாம். நான் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் பலன்களை பல ஜாதகங்களுக்கு பொருந்துகின்றன.

நான் இதை குடும்ப ஜோதிட நூல் இருந்து படித்து கற்றேன். புத்தகம் வாங்க நினைப்போர் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பிலிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கலாம்.


-Karthik. R

Wednesday, 12 November 2014

Build your Immunity 2014 - எதிர்ப்பு சக்தியை கூட்டுங்கள் 2014


horoscience, neem tree
Sri Karuvurar Siddhar - painting from Tanjore, Tamilnadu


               In order to achieve things in this world we should be alive. To be alive we should be healthy.  To be healthy our IMMUNE SYSTEM, the defending mechanism in our body should be built up strong. How is that possible ?

               It is possible in an easy way. In the books written by Siddhars, the great Tamil Mystics. They have a solution for turning their bodies into super immunity, so that they can be free from diseases and do their research from alchemy to astronomy without bodily suffering. They achieved this some 2000 years back. 

               So it possible for people like us. Yes, in their medicinal research books they have mentioned. Usually Siddhars or Tamil Mystics used to write their findings with the grace of Lord Muruga in Tamil Langauage and also as poems. One such poem deal with this topic.

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
   தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
   வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
   இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
   அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.(Karuvurar)








             

As it is given in Tamil Language, I will write up here the instructions given in the poem on what to do to get immunity.

Medicine: Indian Neem Tree Leaf. (not the grown green leaf but the brown tender leaf usually seen in the tip of the bark).

Day: On Dec 7 or Dec 10, 2014 one should pluck 5 to 6 leaves from the neem tree, which has more juice in it and eat it raw anytime between 6.00 a.m to 10.00 a.m before taking any breakfast or hot drinks.

How many days to continue: For a total of 27 days one should eat it like said above.
If you start on Dec 7, 2014 you can continue till Jan 3, 2015
or
If you start on Dec 10, 2014 you can continue till Jan 6, 2015

This is the only simple solution. Many of you might ask why on Dec 7 and 10, 2014. It is because on the day of Dec 7, 2014, Mrigasirisha nakshatra/asterism shows up and on Dec 10, 2014 Pushya nakshatra/asterism shows up. If you can check in Indian calendar you will find it. 

It is only said that on the tamil lunar month of karthiga in mrigasirisha nakshatra or on pushya nakshatra one should start eating the tender neem leaves continuing up to 27 days.  Dec 7 and 10, 2014 are those days according to solar calendar. For each year it might be different in solar calendar.

The Siddhars call this as Vembu karpam. Vembu means neem, karpam means medicine. Karuvurar siddhar explained this in his medicinal treatise.

Try it and don’t miss the day because you will have to wait for one more year to do this.

horoscience, neem tree
I believe that the readers of the blog around the world could find this tree in their country

உலகத்தில் நாம் நமது கடமைகளை செய்ய நாம் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருக்க நாம் உடல் வலிமையோடு இருக்க வேண்டும். வலிமையோடு இருக்க நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட வேண்டும். எப்படி அதை செய்வது, அது சாத்தியமா ? சாத்தியம் தான்.

நமது தமிழ் சித்தர்கள் அதற்கு பாடல்களாக தங்கள் கண்டுபிடிப்புகளை இயற்றியுள்ளனர்.

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
   தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
   வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
   இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
   அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.


கருவூரார் சித்தர் கூறுவது போல், கார்திகை மாதத்தில் வரும் மிருகசிரிசம் அல்லது பூசம் நட்சத்திர நாளில் வேப்ப மர இலை கொகழுந்தை கிள்ளி தொடர்ந்து 27 நாட்களுக்கு மென்று சாப்பிட்டு வர, உடலில் எதிர்ப்பு சக்தி கூடும்.

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி மிருகசிரிசம் நட்சத்திரம் வருகிறது, 10 ஆம் தேதி பூச நட்சத்திரம் வருகிறது.


ஆகவே , டிசம்பர் 7 அல்லது 10 ஆம் தேதி ஆரம்பித்து 27 நாட்கள் தொடர்ந்து காலையில் உணவுக்கு முன் 6.00 - 10.00 மணிக்குள் நல்ல நீர் பதம் உள்ள வேப்பங் கொழுந்த்தை மென்று உண்டு வரவும். 


டிசம்பர் 7, 2014 ஆரம்பித்தால் ஜனவரி 3, 2015 வரை சாப்பிடலாம்
டிசம்பர் 10, 2014 ஆரம்பித்தால் ஜனவரி 6, 2015 வரை சாப்பிடலாம்


இது வேம்பு கற்பகம் என்று சித்தர்களால் சொல்லப்படும். முயற்சி செய்யுங்கள், இல்லை என்றால் அடுத்த வருடம் கார்த்திகை மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

 -Karthik. R



Wednesday, 8 October 2014

Yogas in Horoscope 8 - Kemadruma Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 8 - கேமத்துர்மம் யோகம்

Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
Goddess Lakshmi with Kubera and his consort. (Pray for prosperity of wealth. If possible buy a Lakshmi Kuber Yantra and keep in the altar. Note: Kindly avoid consuming diary products including milk and especially curd during night as it would irritate the Goddess and she will leave your house. It is said that even a rich man becomes poor if he consumes curd during night time) ல‌க்ஷ்மி தேவி, குபேரன் மற்றும் அவரது மனைவியுடன். (செல்வம் செழிக்க பிரார்தனை செய்யுங்கள். முடிந்தால் லக்ஷ்மி குபேர யந்தரம் ஒன்றை வீட்டின் பூஜை அறையில் வையுங்கள். தயவு செய்து இரவில் பால் சார்ந்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம். முக்கியமாக தயிர் சாப்பிட்டால் அரசனும் ஆண்டியாவான். எத்தனை பெரிய பணக்காரர் ஆக இருந்தாலும் இரவில் தயிர் உட்கொண்டால் எழை ஆவார்)



We have seen subha/good yogas, mostly wealth giving yogas in the previous posts. Now we will see about an asuba yoga which is Kemadruma Yoga. This a bad yoga regarding wealth. It makes a person poor even if he/she is born in a rich family as described in ancient texts. Moreover it is said person with this yoga will not be intelligent and be unlucky.

Kemadruma yoga is one of the Daridra yoga/Poverty yoga. There is a saying in Jataka Parijatam that all the Rajayogas will disappear from horoscope like elephants on seeing a lion due to Kemadruma yoga.

This yoga is formed when there are no planets “With Moon, Behind Moon and Ahead of Moon”. In other words when there is no moon no planet in 1st, 2nd, 12th place from Moon. Here only 5 planets other than Sun, Rahu and Ketu are considered.

But most of the times this yoga gets cancelled when,

1. Any planet (excluding Sun, Rahu and Ketu) are in a quadrant/kendra from Lagna and
2. Jupiter and Venus present in quadrant/Kendra from moon, especially planet like Jupiter form Gaja-kesari yoga when it is present in a Kendra position from Moon.
3. Even if the Moon is powerful and strong Kemadruma yoga gets cancelled. And sometimes if a powerful planet aspects the Moon this yoga gets cancelled.

Note: Too many rules are there for this yoga. So, one should not conclude that the person is poor and unlucky, just by looking the presence of this yoga in Jagannatha Hora software.

Below is a example chart of my friend who is not from a wealthy background. But he struggled and completed his bachelor’s degree and got into a software company thereby completing his master degree program provide by the company itself and also onsite work in Singapore made him grow financially steady and now he is working for a bank abroad offshore from Singapore. He has built his own house in his home town in India.

Look at the presence of Kemadruma yoga in his chart. But at the same time look at the presence of Jupiter in 10th Kendra/Quadrant from Moon which gives rise to Gaja-Kesari yoga and also Moon is in its exalted state in Rishaba/Taurus sign. Hence kemadruma yoga got cancelled and Gaja-Kesari yoga’s presence uplifted the person.


Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
(Click to Enlarge)


Some astrology works consider that this yoga should be looked into seriously only in the charts of Kings and not for normal people.

According to my research Kemadruma yoga does not work properly as it should.

Look at he below chart of my friend who studied with me during college days. He has this Kemadruma yoga. Moon is alone. No planets are present in Kendras/Quadrants. As only Rahu and Ketu present they are not considered. Kemadruma yoga did not show any adverse effects on him. He is intelligent and has completed his masters in computer engineering and also employed in a good company and financially steady.


Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
(Click to Enlarge)


So, I request students of astrology to research and check on this yoga by taking the examples from their friends, relative charts and give their inputs in the FB or blogger comment box below.


இதுவரை நாம் சுப யோகங்களை பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதுவும் தனம் தரும் யோகங்களை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நாம் கேமத்துர்மம் என்னும் ஒரு அசுப யோகத்தை பற்றி பார்ப்போம். இந்த யோகமானது, ஒருவர் வசதியான உயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரை எழ்மை நிலைக்கு தள்ளிவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று பழங்கால ஜோதிட நூல்கள் கூறுகின்றது. மேலும் இந்த யோகம் ஒருவருக்கு இருந்தால் அவர் அறிவற்றவராகவும், அதிர்ஷ்டம் இல்லாதவராகவும் இருப்பார்.
 

 

கேமத்துர்மம் தரித்திர யோகங்களுள் ஒன்றாகும். ஜாதக பாரிஜாதத்தில் இந்த யோகமானது ஜாதகத்தில் உள்ள எல்லா ராஜ யோகங்களும் சிங்கத்தை கண்ட யானைகளைப் போல் மறைந்துபோகும் என்று கூறப்பட்டுள்ளது.
 

 

சந்திரனுடன் கிரகங்கள் ஏதும் இல்லாமல், மற்றும் சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் ஏதும் இல்லாமல் இருந்தால் அதுவே கேமத்துர்மம யோகம் எனப்படும். இங்கே வெறும் ஐந்து கிரகங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளபடும் சூரியன், ராகு மற்றும் கேது விதிவிலக்காகும். அதாவது இந்த மூன்று கிரகங்கள் சந்திரனுடம், மற்றும் அதற்கு முன்னும் பின்னும் இருந்தாலும் கேமத்துர்மம் யோகம் உருவாகும்.
 

 

ஆனால் சில சமயங்களில் இந்த யோகம் பரிகாரமாகும். அதாவது யோகம் பங்கமாகும். எப்போதெல்லாம் என்றால்,
 

 

1. சூரியன், ராகு கேதுவை தவிர மற்ற ஐந்து கிரகங்கள் லக்ன கேந்திரங்களில் அமைந்திருந்தால்.

2. குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சந்திரனுக்கு கேந்திரத்தில் அமைந்திருந்தால். முக்கியமாக குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் அது கஜகேசரி யோகத்தை கொடுக்கும்.

3. சந்திரன் பலமாக இருந்தால் கேமத்துர்மம் யோக பங்கமாகும் மற்றும் சில சமயங்களில் சந்திரனை வேறு ஒரு பலமிகுந்த கிரகம் பார்த்தால் யோகம் பங்கமாகும்.
 

 

குறிப்பு: இந்த யோகத்திற்கு நிறைய விதிகள் உள்ளன. எனவே ஒருவர் Jagannatha Hora'வில் மட்டும் பார்த்து இந்த யோகம் இருந்தால் அவர் எழை மற்றும் புத்திசாலியாக இருக்க மாட்டார் என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது.
 

 

கீழே உள்ளது எனது நன்பர் ஒருவரது ஜாதகம். அவர் வசதியான குடும்பச்சூழலில் இருந்து வரவில்லை. ஆனால் அவர் மிகவும் கடினமாக உழைத்து பட்டதாரி ஆனார். பின்பு மென்பொருள் நிருவணம் ஒன்றில் வேலை பார்த்து அங்கே கொடுக்கப்பட்ட‌ தனது மேற்படிப்பையும் முடித்து சிங்கப்பூரில் அந்த நிருவணம் மூலம் வேலை பார்த்தார். இப்போது சிங்கபூரில் வேறு ஒரு நிருவணத்தில் வேலை பெற்று அயல் நாட்டு வங்கி ஒன்றிற்கு அங்கிருந்த படியே பணி செய்கிறார். பொருதார வசதி நன்றாகவே உள்ளது. நல்ல ஒரு வீட்டுமனை ஒன்றை தனது சொந்த ஊரிலே கட்டி முடித்தார்.
 

 

அவரது ஜாதகத்தில் கேமத்துர்மம் உள்ளதை பாருங்கள். அதே சமயம் குரு சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதையும்
கவணியுங்கள். மேலும் சந்திரன் தனது உச்ச வீடான ரிஷபத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே கேமத்துர்மம் யோகம் பங்கமாகி நற்பலன்களை கொடுத்துள்ளது. கஜகேசரியும் அவருக்கு துணையாக நின்றுள்ளது.
 

Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
(Click to Enlarge)

சில ஜோதிட நூல்கள் இந்த கேமத்துரமம் யோகத்தை அரசாலும் மன்னர்கள் ஜாதகங்களில் தான் பார்த்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சாதரன மக்களின் ஜாதகத்தில் இதை வெகுவாக பார்க்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.
 

 

என்னுடைய ஆராய்ச்சியின் படி இந்த கேமத்துரமம் யோகம் அதற்குரிய பலன்கள் படி சரியாக வேலை செய்வதாக தோன்றவில்லை.
 

 

கீழே உள்ள ஜாதகம் என்னுடன் கல்லூரி பயின்றவரின் ஜாதகமாகும். அவருக்கு கேமத்துர்மம் நன்றாக உள்ளது. சந்திரன் தனித்து உள்ளார். வேரு எந்த கிரகமும் கேந்திரங்களில் கிடையாது. ராகு கேதுக்கள் இருந்தாலும் அவை கணக்கில் வராது. கேமத்துரமம் யோகம் அவருக்கு எந்த ஒரு கெடுதல் பலன்களையும் கொடுக்கவில்லை. அவர் நன்றாக படித்து கணினி துறையில் மேற்படிப்பையும் முடித்து நல்ல நிருவணம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பொருளாதார ரீதியில் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. அவர் புத்திசாலியும் கூட.
 

Kemadruma yoga, கேமத்துர்மம் யோகம், horoscience.com
(Click to Enlarge)

எனவே, நான் ஜோதிடம் பயிலும் மாணக்கர்களை கேட்டுக் கொள்வது என்வென்றால் உங்களுக்கு தெரிந்த நபர்களின் உதாரண ஜாதகங்களைக் கொண்டு இந்த கேமத்துர்மம் யோகத்தின் பலன்களை ஆராய்ச்சி செய்து கீழே உள்ள முகநூல் அல்லது ப்ளாக்கரில் பின்னூட்டம் இடுங்கள்.

-Karthik. R