New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Monday 10 August 2015

Yoga in Astrology - ஜோதிடத்தில் யோகங்கள்

Lord Shiva performs Cosmic Dance on Nandi(Bull) Head during Pradosha Day which comes twice a month during 4.30 P.M to 6.00 P.M .You can see worship this auspicious ceremony at any Shiva Temple. So Attend Pradosha Pooja regularly to get maximum benefits from yogas in horoscope

"I don’t have any good and important yogas in my chart. How will   my life be ?
  Do I have any good yoga in my chart ?"

The above are the questions generally asked by any person who has interest in astrology.

What is a Yoga in Astrology and their Benefits ?

When one Planet or Two or More Planets are placed in special position in a chart it leads to form Yoga. There are more than 1000 varieties of yogas. Some are good/Shubha Yoga which will provide wealth, status, fame, money, good wife/husband, children, spirituality, enlightenment, power, luxuries etc... and some are bad/Ashuba Yoga which will provide poverty, diseases, ill fame, no comforts in life, quarrelsome wife/husband etc ...

How to check the yogas in a horoscope chart or Rasi Chart ?

Open your chart in Jagannatha Hora.

Click on “Strengths” Tab,
Next Click on “Other Strengths” at bottom as highlighted in RED border in the below example chart picture.

Click to Enlarge

Now you can see the Yogas present in your horoscope chart. These yogas are listed as per your Rasi Chart (D-1) Chart. Look at the example picture above. You can also see the yoga name, which planets are giving the yoga, yoga description etc...

Some people might worry because they might have very less yogas in their chart. And feel low, that they are not worthy and they had done so many sins. Do not conclude in such a way. God is very kind and has shown great mercy to humans since the dawn of creation. So, check the Yogas in your NAVAMSA CHART  (D-9) too.

How to check Yogas in Navamsa Chart ?

Right Click anywhere in the Yoga section and Click on “Select a varga (divisional chart)”  option from the menu like in the below image.

Click to Enlarge

Now choose second option “Navamsa (D-9)”  from the drop-down menu and click “OK” like in the below image.

Click to Enlarge

Now Yogas present in your NAVAMSA (D-9) chart will be shown like below.

Click to Enlarge

Look the difference. This above example chart belongs to one of my friend. In the Rasi chart yogas were less, but in Navamsa Chart there are many good and luck giving yogas like Kalpadruma-Parijata yoga. This shows the power of the chart and the person to become a achiever of all goals in his life. Not all the yogas in Navamsa work because some yogas are born out a combination from both rasi and navamsa chart. Hence some yogas are always exception. But still research is needed in this aspect.


Important Note:
*************
In my research, Yogas in Rasi Chart are less effective than Yogas in Navamsa Chart. Person with more good/subha yogas in Navamsa chart will enjoy normal and pleasant life. This due to fact that Rasi Chart (D-1) denotes “how will your life be ?”, but Navamsa Chart (D-9) denotes how well you have lived your life ? This Navamsa chart of a person can be fully understood only when that person completes one cycle of his life, that is at 60 years of age only we can find answer to the question “how well the person has lived his/her  life ?”. I don’t know how many of you dear readers can understand what I am coming to tell. But this is the fact of astrology.

When will a Yogas in Astrology work ?

It depends on each yoga and the planets involved in giving the yoga. Some yogas start to work during the respective planets Dasha or Bhukti periods. Some major yoga will work throughout whole life and some does not work at all. Some yoga will give its effects in starting stage of life and some in latter stage of life.

Why a Yoga fails to work in Astrology ?

This state is called as Yoga Bhanga, i.e., yoga becomes ineffective  in Astrology. It is because of the Planet involved in Yoga. The corresponding planet which is the yoga giver cannot give the benefits because of its state like, it might be debilitated/neecha or situated in enemy’s house or conjoined with an enemy planet or might be in a planetary war or situated in a bad planets’s Nakshatra/star or Retrograde. These are some of the reasons.

Note: Jagannatha Hora software does show yoga bhanga.It just shows the list of yogas present in the chart. All astrology software show the same thing. It is astrologer’ s duty or the concerned person’s duty to find whether one can enjoy the benefits of the yoga.

Remedies if a Good/Shuba Yoga fails to give benefits ?

Worship respective yoga giving planets regularly at certain important pilgrim shrines to enjoy the benefits of yoga.  Participate in Yajna or Puja at temples regularly. At least attend Pradosha Pooja monthly twice on Pradosha days at nearest Shiva Temple regularly, start from coming Wednesday itself, 12.08.2015 Pradosha day check your calendar or if you too busy and cannot follow these then better purchase and WEAR a Planet’s Kavach.

Jagannatha Hora Software is able to calculate only 185 yogas. Some of the list of few important Yogas described so far in detail at HoroScience blog are given below with examples. Feel free to read in your leisure time.




1. Kalpadruma/Parijata Yoga Click here to Read
2. Dharma-Karmadhipati Yoga Click here to Read
3. Malavya Yoga Click here to Read
4. Chandra-Mangala Yoga Click here to Read
5. Gaja-Kesari Yoga Click here to Read
6. Mridanga Yoga Click here to Read
7. Saraswathi Yoga Click here to Read
8. Kemadruma Yoga Click here to Read


For consultation of your horoscope chart and to know which kavach to wear.
Pay using the below link.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4

(Or)

Send a facebook message to https://www.facebook.com/horoscience
Or email [email protected]


சிவன் நந்தி மீது பிரதோஷத்தன்று நடனமாடும் போது. மாதம் இருமுறை சிவன் கோவில்களில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு ஜாதகத்தில் உள்ள யோகங்களின் பலன்களை முழுமையாக பெறுங்கள்.

"என்னுடைய‌ ஜாதகத்தில் யோகங்கள் இல்லை. என்னுடைய வாழ்கை எப்படி இருக்கும் ?
என்னுடைய ஜாதகம் யோகமுள்ள ஜாதமா ?"


இவ்வாறான கேள்விகள் தான் இன்று பொதுவாக எல்லோராலும் கேட்க படுகின்றது.


ஜோதிடத்தில் யோகம் என்றால் என்ன ? 


யோகம் என்றால், ஒரு ஜாதக கட்டத்தில் ஒரு கிரகம் அல்லது இரண்டு கிரகமோ அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் விஷேசமான‌ சேர்க்கை அல்லது பார்வை அல்லது குறிப்பிட்ட‌
இடத்தில் இருந்தாலோ ஒரு யோகத்திற்கு வழிவகுக்கும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான யோக அமைப்புகள் ஜோதிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சிலது சுப யோகமாகவும் அதாவது புகழ், அந்தஸ்து, செல்வம், பொருள், நல்ல
மனைவி/கனவன், குழந்தைகள், ஆன்மீக ஞானம், உயர்ந்த பதவி, சுக போகங்கள் போன்றவற்றை கொடுக்க கூடியதாகவும். சிலது அசுப யோகமாகவும் அதாவது ஏழ்மை, நோய், அவமானம், கஷ்டங்கள், அன்பற்ற மனைவி/கனவன் போன்றவற்றை கொடுக்க கூடியதாக இருக்கும்.


உங்கள ஜாதகத்தில் உள்ள யோகங்கள் எவை என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது ?


உங்கள் ஜாதகத்தை ஜகன்நாத ஹோரா மென்பொருளில் திறவுங்கள்.


அதில் "Strengths" என கொடுக்கபட்டிருக்கு அதை கிளிக் செய்யுங்கள்.
பின்பு "Other Strengths" என கீழே கொடுக்கபட்டிருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள உதாரண ஜாதக படத்தில் சிவப்பு பெட்டி கொண்டு சுட்டி காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்து அறிந்து கொள்ளவும்.


Click to Enlarge

இப்போது உங்கள் ராசி (D-1) கட்டத்தில் உள்ள யோகங்களை நீங்கள் பார்க்கலாம்.இவை அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது உள்ளது. மேலே உள்ள உதாரண ஜாதகத்தின் படத்தை பாருங்கள்.


நீங்கள் அதில் யோகத்தின் பெயர், எந்த கிரகங்கள் யோகத்தை தருகிறது, யோகத்தின் போன்றவற்றையும் பார்க்கலாம்.
சிலர் அன்பர்கள் கவலை படலாம், தனது ஜாதகத்தில் அவ்வுளவாக பெரிய யோகங்கள் இல்லையே என்று. சிலர் அதை நினைத்து வருந்துவது உண்டு, அதாவது தனக்கு யோகமே இல்லை என்று. தயவு செய்து அவ்வாறான முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஏனேனில் கடவுள் நம்மை படைக்க அராம்பிக்கும் போதே நம்மீது கருனை உள்ளதுடனே தான் படைக்க ஆரம்பித்தார். ஆதலால், உங்கள் நவாம்சத்தில் (D-9) உள்ள யோகங்களையும் பார்க்கவும்.


நவாம்ச கட்டத்தில் உள்ள யோகங்களை எவ்வாறு பார்ப்பது ?

யோகங்களை காண்பிக்கபடும் இடத்தில் "வலது கிளிக்" செய்யவும். பின்பு "Select a varga (divisional chart)” என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள உதாரண ஜாதக படத்தை பார்க்கவும்.



Click to Enlarge


பின்பு நீஙகள் என்பதை “Navamsa (D-9)” தேர்வு செய்து “OK” பொத்தானை கிளிக் செய்யவும். கீழே உள்ள உதாரண ஜாதக படத்தை பார்க்கவும்.


Click to Enlarge



இப்போது நவாம்சத்தில் (D-9) உள்ள யோகங்களை உங்களால் காண கீழே உள்ள உதாரண ஜாதகத்தில் இருப்பது போல் பார்க்க இயலும்.


Click to Enlarge



வித்தியாசத்தை சற்று கவணியுங்கள். மேலே தந்த உதாரண ஜாதகம் எனது நன்பர் ஒருவருடையது. ராசி கட்டத்தில் யோகங்கள் குறைவாகவே காணப்படுகிறது, ஆனால் நவாம்ச
கட்டத்தில் மிக நல்ல அதிர்ஷ்டம் தரக்கூடிய யோகங்களான கல்படுரும பாரிஜாத யோகம் போன்ற யோகங்கள் உள்ளது. ஆகவே இந்த ஜாதகர் வாழ்வில் சிறப்பாக வெற்றிகளை
ஈட்டுவார் என்பது தெரியவருகிறது. எல்லா யோகங்களும் நவாம்சத்திற்கு பொருந்தும் என்று கூற இயலாது, ஏனேனில் சில யோகங்களின் கட்டமைப்பு ராசியையும் நவாம்சத்தையும்
சேர்த்து கூட்டு களவையாகயிருக்கும். எனவே சில யோகங்கள் விதிவிலக்கானவை. ஆனால் இன்னும் இந்த கருத்தை பற்றி நிறைய ஆராய்ச்திகள் செய்ய வேண்டும்.


முக்கியமான குறிப்பு:
***********************

என்னுடைய ஆராய்ச்சியில், நவாம்சத்தில் உள்ள யோகங்களை காட்டிலும் ராசியில் உள்ள
யோகங்கள் மிக குறைந்த பயன்களைத்தான் தரும். ஒரு ஜாதகருக்கு நவாம்சத்தில் மிக நல்ல சுப யோகங்கள் இருந்தால அவர் சுமுகமான சுகமான வாழ்வை வாழ்வார். இது ஏன் என்றால் ராசி கட்டம் (D-1) என்பது "உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் ?" என்பதை குறிக்கும். ஆனால் நவாம்ச கட்டம் (D-9) என்பது "நீங்கள் உங்கள் வாழ்வை எப்படி நன்றாக
வாழ்ந்தீர்கள் ?" என்பதை குறிக்கும்.
இந்த நவாம்ச கட்டத்தை பற்றி ஒருவரது ஜாதகத்தில் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர் தனது வாழ்வின் ஒரு சுற்றை முடித்திருக்க
வேண்டும, அதாவது 60 வயதை கடந்திருக்க வேண்டும். அப்போது அவர் "எப்படி நன்றாக‌ அவர் வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்" என்ற கேள்விக்கு விடையளிக்க முடியும். இந்த கருத்து எத்தனை அன்புக்குரிய வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இது
ஒரு ஜோதிட உண்மை.


ஜோதிடத்தில் யோகங்கள் எப்போது வேலை செய்யும் ?

அது ஒவ்வொறு யோகத்தையும் மற்றும் அந்த யோகத்திற்கு காரணமான கிரகங்களையும் சார்ந்தது. சில யோகங்கள் அந்தந்த யோகத்திற்குரிய கிரகங்களின் தசா அல்லது புத்தி
காலத்தில் பலன்களை தரும். சில முக்கியமான யோகங்கள் ஒருவரது வாழ்வு முழுவதும் வேலை செய்யும், சிலது வேலை செய்யாமலும் போகலாம். சிலது முன்யோகமாகவும், சிலது
பின்யோகமாகவும் இருக்கும்.


ஏன் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் சில சமயம் பயன் தருவதில்லை ?

இதை தான் ஜோதிடத்தில் யோகபங்கம் என்றழைப்பர். பங்கம் என்றால் பலன் தர இயலாத நிலை. இது யோகங்கள் உருவாக காரணமாக இருந்த கிரகங்களின் நிலையால் இவ்வாறு
பங்கம் ஏற்படுகிறது. யோகத்தை தரும் கிரகங்களின் நிலை, நீசமாகவோ அல்லது பகை வீட்டிலோ அல்லது பகை கிரகத்துடன் சேர்ந்தோ அல்லது கிரக யுத்தததில் இருந்தாலோ
அல்லது அசுப கிரக நச்சத்திரத்தின் பிடியில் இருந்தாலோ அல்லது வக்கிரம் அடைந்திருந்தால் யோகம் பங்கம் ஆகிவிடும். இவை எல்லாம் சில காரணங்கள் தான்.


குறிப்பு: ஜகன்நாத ஹோரா மென்பொருள் யோக பங்கத்தை பற்றி காண்பிக்காது. அது வெறும் என்னென்ன யோகங்கள் ஜாதகத்தில் உள்ளது என்பதை மட்டுமே பட்டியலிட்டு காட்டும்.
எல்லா ஜோதிட மென்பொருள்களும் இவ்வாறு தான் காண்பிக்கும். யோகத்தின் நன்மை குணத்தை ஆராய்வது அவரவரது கடமை அல்லது ஒரு ஜோதிடரின் கடமையாகும்.


நன்மை தரும் யோகங்கள் பங்கம் ஆகி இருந்தால் அதற்கு பரிகாரம் என்ன ?

பிரார்த்தனை செய்வதே. அந்தந்த யோகம் எற்பட காரணமாக இருந்த கிரகங்களின் சில முக்கியமான ஆன்மீக தலங்களுக்கு வழிபாடு செய்வது மிகவும் பலன் அளிக்கும்.  திருக்கோவில்களுக்கு அடிக்கடி சென்று பூஜைகள், வேள்விகளில் கலந்து கொள்ளுங்கள். மாததத்தில் வரும் இர்ண்டு பிரதோஷ தினங்களில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வரும் புதன் கிழமை  12.08.2015
பிரதோஷம் அன்றிலிருந்தே ஆராம்பியுங்கள். இல்லை நாம் மிகவும் பிஸி, இதிலெல்லாம் கலந்து கொள்ள நேரம் இல்லை என்பவர்கள் அந்தந்த கிரகத்திற்குரிய கவசத்தை அணியலாம்.

ஜகன்நாத ஹோரா மென்பொருள் 185 யோகங்களை மட்டுமே கணக்கிடும் திறம் கொண்டது. இந்த ஹோரோசயின்ஸ் வலைப்பதிவில் சில முக்கியமான யோகங்களை பற்றி
உதாரண‌ங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள பட்டியலில் அதை நீங்கள் கிளிக் செய்து பார்க்கலாம். உங்களது ஓய்வு நேரத்தில் படிக்கவும்.



1. கல்படுரும/பாரிஜாத யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
2. தர்ம-கர்மாதிபதி யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
3. மாலவ்ய யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
4. சந்திரமங்கள‌ யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
5. கஜகேசரி யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
6. மிருதங்க யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
7. சரஸ்வதி யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்
8. கேமத்துர்மம் யோகம் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்


உங்கள் ஜாதகத்தை பற்றியும், எந்த கவசத்தை அணிவது பற்றியும் 
தெரிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, ஆன்லைன் பேமேன்ட் செய்யவும்.
https://www.payumoney.com/paybypayumoney/#/6C3B95BEB6E964D80D39332DB9D546C4



(அல்லது)

கீழே உள்ள முகநூல் தளத்தில் செய்தி அனுப்பவும். 
https://www.facebook.com/horoscience
அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 
[email protected]

- Karthik. R



No comments:

Post a Comment