New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Monday 21 September 2015

Marriage Delay - திருமணம் தாமதம்

Shiva Parvati- Marriage ceremony. Worship them for successful marriage. Especially in a temple where Sun Rays falls on Shiva Linga.


There are so many astrology rules corresponding to the cause of delay in marriage.

We will see about one such rule called Punarphoo Dosha in this post.

Punarphoo is the term mentioned in KP astrology in detail. Punarphoo Dosha occurs when Saturn and Moon are combined or conjoined in same sign(rasi) or related in any way in a horoscope chart.

Effects of Purnarphoo dosha:

- Confusion in choosing the right bride or bridegroom, which takes    more time and hence it results in delay.
- Obstacles during commencement of betrothal(engagement) or marriage.
- Marriage does not happen on the fixed date due to silly reasons.
- Marriage event stopped due to confusion arisen from unknown reasons.
- Second Marriage or no marriage at all.


We will see an example of chart of girl whose engagement date and marriage date was fixed but the event was broken due to a silly reason.  The brigegroom for this girl is my close friend.

punarphoo, horoscience
Sat+Moon=Punarphoo


In the above chart, Saturn being the Asc/Lagna lord is with 7th lord Moon in 11th house. Look 7th lord moon is neecha/debilitated in virichika/scorpio sign.
Combination of Saturn+Moon=Purnarphoo, which broke the engagement event before a week and also resulted in no marriage yet. Still the problem is not solved.

So from the above chart we can understand that Punarphoo Dosha works and it still causes delay in marriage till the present day.

Since it is KP, I still have huge doubts in KP system of prediction. According to my research the reason of delay can also be the because of the Saturn + 7th lord Moon combined House of Obstacle. Yes, for Makara Lagna, which is a chara(movable) lagna, 11th house is obstacle house and its lord mars is lord of obstacle aspecting the 12th 3rd and 4th house from lagna which is also not good. Saturn, here is lord of 1st and 2nd(family) also. The delay in marriage can also be related to this particular rule.

To learn more about House of Obstacles, Click Here.

So, dear readers, to find out whether Punarphoo really works or not. Check for a relationship between Saturn+Moon in your friends and family members charts.

For more details on Punarphoo, refer here


சிவன் பார்வதி திருக்கல்யாணம். நல்ல இல்வாழ்க்கை அமைய வழிபடுங்கள். குறிப்பாக சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் கோவிலில் பிரார்த்தனை செய்யுங்கள்.


நிறைய ஜோதிட விதிகள், திருமணம் தாமதமாகுதல், தடைபடுதல் பற்றி விளக்குகிறது.

நாம் இன்று புனர்பூ தோஷம் என்ற ஒரு விதியை பார்ப்போம் இப்பதிவில் பார்ப்போம்.

புனர்பூ என்பது கே.பி. ஜோதிட முறையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. புனர்பூ தோஷம் சனி மற்றும் சந்திரனது சேர்க்கையால் உருவாவதாகும். சனி+சந் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது எப்படியாவது எதோனும் தொடர்பு இந்த இரு கிரகத்திற்கும் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அதுவே புனர்பூ தோஷமாகும்.

புனர்பூ தோஷத்தின் பாதிப்புகள்:

- மண‌மகன் அல்லது மண‌மகள் தேர்ந்தெடுப்பதில் குழப்பம், இதில் நேரம் காலம் போவதே  தெரியாமல் கால தாமதமாகி விடுதல்.
- நிச்சயதார்த்தம் நடப்பதில் தடை அல்லது நடக்கும் போது தடை.
- திருமணம் நிச்சயிக்கபட்ட நாளில் சில சாதாரண விஷயங்களுக்காக நடக்காமல் போவது.
- திருமணத்தின் போது சில புரியாத காரணங்களால் திருமணம் முற்றிலும் நின்றுவிடுதல்.
- மறுமணம் அல்லது திருமணமே ஆகாத நிலை.

நாம் ஒரு உதாரண ஜாதகத்தை பார்ப்போம். இது ஒரு பெண் ஜாதகம். நிச்சயம் மற்றும் திருமண தேதி குறித்த பின் சில அல்ப விஷயங்களுக்காக இரண்டுமே அரங்கேறாமல் போனது. மணமகன் என்னுடைய நெருங்கிய நன்பராவார்.


punarphoo, horoscience
Sat+Moon=Punarphoo


மேலே உள்ள ஜாதகத்தில், சனி லக்னாதிபதி ஆவார். 7 ஆம் வீட்டு அதிபதி சந்திரனுடன் சனி சேர்ந்து 11 ஆம் வீட்டில் உள்ளார். சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம். சனி+சந்=புனர்பூ தோஷம். ஆதலால், நிச்சயம் குறித்த தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தடை வந்துவிட்டது. மேலும் திருமணமும் இதுவரை நடந்தபாடில்லை. இன்றளவிலும் பிரச்சனை தீரவில்லை.


எனவே மேலே உள்ள உதாரணத்திலிருந்து புனர்பூ தோஷம் வேலை செய்கிறது எனபதை அறிந்து கொள்ளலாம்.

எனினும் கே.பி. ஜோதிட முறையில் நிறைய சந்தேகங்கள் எனக்குள்ளது. என்னுடைய ஆராய்ச்சியின் படி திருமணம் தடையானதற்கு காரணம் சனி+சந்திரன் சர லக்னத்திற்கு 11 ஆம் வீடான பாதக ஸ்தானத்தில் கூடியிருப்பது தான். 7 க்குடையவன் சந்திரன், 1, 2(குடும்ப) ஸ்தானதிற்குறிய சனியோடு சேர்க்கை பெற்று பாதகம் ஆகிவிட்டது. பாதாகதிபதி செவ்வாய் 12, 3, 4 ஆகிய வீடுகளை பார்வை செய்வது நல்லதல்ல. எனவே நிச்சயம் மற்றும் திருமணம் தடைபட்டு தாமதம் ஆவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

பாதக ஸ்தானங்களை பற்றி மேலும் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆக, அன்பு வாசகர்களே, புனர்பூ தோஷம் ஜாதகத்தில் வேலை செய்யுமா என்பதை கண்டறிய உங்களிடம் உள்ள உங்களது நன்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஜாதகத்தை வைத்து ஆராயுங்கள்.


புனர்பூ பற்றி மேலும் வாசிக்க(ஆங்கிலத்தில்)
- Karthik. R


No comments:

Post a Comment