Lord Bairavar (Pray to him for Promotion in career) |
One of the most powerful yoga is Dharma-Karmadhipati yoga. You might have heard many astrologers talking/discussing about this yoga often.
This yoga is formed by combination of 9th lord (lord of fortune) and 10th lord (lord of profession) in a horoscope. We know that 9th house is one among the powerful Lakshmi Houses(Trikona-1,5,9) and 10th house is one among the powerful Vishnu Houses(Kendra-1,4,7,10).
The person who has this yoga would be the top most person at his work place and if he/she is in business line, his business would earn him more profits and would be a well known personality in his surroundings. Whatever profession a person is in he will shine like a star.
I have attached a screenshot of my friend who has this yoga, who is shining in his profession.
(Click to Enlarge) |
Note: Very Important thing is the planets which are giving this yoga in the horoscope, for example in the above screenshot you can see that Mars and Venus are giving this yoga.
Hence this yoga will start to give good results only under the following times,
During Mars Dasa which is 7 years.
During Venus Dasa which is 20 years.
During Mars Bhukti (years applicable to particular dasa).
During Venus Bhukti (years applicable to particular dasa).
There are few more timings which I am not sharing here as it would confuse the beginners in astrology.
In the chart of my friend who has this yoga he has Jupiter Dasa Venus Bhukti running now. Look at the screenshot below.
(Click to Enlarge) |
Hence he has Dharma-Karmadhipati yoga actively working now due to Venus.
He got promoted as one among the head priest in a famous temple where more than 30 priests are working.
மிக சக்திவாய்ந்த யோகங்களில் தர்ம கர்மாதிபதி யோகமும் ஒன்றாகும். இந்த யோகத்தை பற்றி நிறைய ஜோதிடர்கள் பேச நீங்கள் கேட்டிருக்க கூடும்.
இந்த யோகமானது 9 ஆம் வீட்டு அதிபதி(பாக்கிய ஸ்தானதிபதி) மற்றும் 10 ஆம் வீட்டு அதிபதி (தொழில் ஸ்தானதிபதி) ஆகிய இரண்டு கிரகங்கள் சேர்க்கை பெற்று தருவது. 9 ஆம் வீடு என்பது சக்தி வாய்ந்த லஷ்மி ஸ்தானமாகும்(திரிகோணம்-1,5,9) மற்றும் 10 ஆம் வீடு என்பது சக்தி வாய்ந்த விஷ்ணு ஸ்தானமாகும் (கேந்தரம்-1,4,7,10).
மேலும் வீடுகளின் வகைகளை பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்த யோகத்தை ஜாதகத்தில் உடையவர் தனது வேலையிடத்தில் முதன்மை பதவியில் இருப்பார்.
மேலும் வணிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு இந்த யோகம் வாய்க்கப்பொற்றால், அவரது வணிகத்தில் அதித லாபங்களை ஈட்டி கொடுத்து தனது சுற்று வட்டாரத்தில் மிகவும் அறியப்படும் செல்வாக்குடைய நபராக மாற்றிவிடும். எத்துறையில் ஒருவர் இருந்தாலும் அத்துறையில் நட்சத்திர அந்தஸ்தை இந்த தர்ம கர்மாதிபதி யோகம் பெற்றுத் தரும்.
எனது நன்பர் ஒருவரது ஜாதகத்தில் இந்த யோகம் உள்ளது.
அதன் படத்தை கீழே கொடுத்துள்ளேன். தனது தொழில் ஜோலித்து கொண்டிருக்கிறார்.
(Click to Enlarge) |
குறிப்பு: மிக முக்கியமாக கவணிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால், எந்த கிரகங்கள் இந்த யோகத்தை கொடுக்கிறதோ அந்த கிரகங்களின் தசா/புத்திகளில் மிகுந்த பலன் கொடுக்க ஆரம்பிக்கும்.
உதாரணத்துக்கு மேலே உள்ள ஜாதகப் படத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இந்த யோகத்தை தருபவர்கள் ஆவர்.
என்வே கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரங்களில் யோக பலன்களை கொடுக்க ஆரம்பிப்பர்.
செவ்வாய் தசையின் போது அதாவது 7 வருடங்கள்.
சுக்ர தசையின் போது அதாவது 20 வருடங்கள்.
செவ்வாய் புத்தியின் போது(வருடங்கள் அந்தந்த தசையை பொருத்து).
சுக்ர புத்தியின் போது(வருடங்கள் அந்தந்த தசையை பொருத்து).
இன்னும் வேறு சில சமயங்களிலும் பலன்களை தருவர். ஆனால் அவைகளை
பற்றி நான் இங்கே பகிர்ந்து கொள்ள இயலாது. ஏனேனில் ஜோதிடத்திற்கு புதிதானவர்களுக்கு அது குழப்பத்தை உருவாக்கும்.
எனது நன்பர் ஜாதகத்தில் அவருக்கு தற்சமயம் குரு தசை சுக்ர புத்தி நடைமுறையில் உள்ளது. கீழே உள்ள படத்தை பாருங்கள்.
(Click to Enlarge) |
ஆகவே இவருக்கு தர்ம கர்மாதிபதி யோகம் சுக்ர பகவானால் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது.
அவர் ஒரு புகழ் பெற்ற திருக்கோவிலில் ஒரு சில முதன்மை அர்ச்சகரர்களுள் இவரும் ஒருவராக உயர்வு பெற்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட அர்ச்சகரர்கள் அங்கு வேலையில் உள்ளனர்.
எனவே உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora'வில் திறந்து, இந்த தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கிறதா அப்படி இருந்தால் அது நடைமுறையில் இருக்கிறதா என்று பாருங்கள். இந்த யோகமானது பல ராஜ யோகங்களில் ஒன்றாகும். எனவே தான் Jagannatha Hora'வில் ராஜ/தர்ம கர்மாதிபதி யோகம் என பட்டியல் இடப் பெற்றிருக்கிறது.
-Karthik. R
No comments:
Post a Comment