New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Sunday 21 September 2014

Yogas in Horoscope 5 – Gaja-Kesari Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 5 ‍- கஜகேசரி யோகம்



Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga, SImha Ganapathi, சிம்ம கணபதி
Simha Ganapathi. Lord Ganesha in the form of Lion(Pray to him as he saves his devotees from enemies and give them the strength to fight against the bad things) - சிம்ம கணபதி. எதிரிகளிடமிருந்தும், தீயவைகளை எதிர்த்து போராட நமக்கு சக்தி கொடுப்பவர்.

Sometimes called kesari yoga. Gaja means Elephant and Kesari is Lion. Hence the name Gaja-Kesari indicates that if a person has this yoga in his chart he would win over his enemies.

Two planets viz., Jupiter and Moon are solely responsible for this yoga to occur.

This yoga is formed when Jupiter is placed in Kendra houses(1,4,7,10) from Moon. It is called Gaja-Kesari.

“Note: In a horoscope, the place where Moon is positioned is called Moon Lagna/Ascendant.”

Further, here if Jupiter and Moon are conjunct that is both are placed in the same house(1st Kendra) then it is the powerful placement of other three Kendra(4,7,10) houses. This kind of placement is usually called as Guru-Chandra Yoga.

Many astrological authoritative classical works say great things about this Gaja-Kesari yoga. Lord Sri Rama has this yoga formation the birth Lagna/Ascendant itself which is cancer/kataka, where Jupiter is exalted and Moon in present in his own house, hence both the planets are in full power and this gave Lord Sri Rama full strength to win over his enemy the Great King Ravana. Also, all the other planets are a in exaltation in his chart as he is avatar and true incarnation of God Vishnu. Hence in India his chart is kept in prayer room with all other deities and worshipped for his blessings. The chart is given below(tamil). 

horoscience.com
Lord Sri Rama and Lord Hanuman Horoscope

King Alexander the Great has this yoga in his chart. Now, we can understand what made him conquer the world.

This yoga also gives wealth, long life and leadership qualities if the planets Jupiter and Moon are placed in good houses in a horoscope chart. You may notice this yoga in plenty of charts. But the strength of yoga differs according to the yoga giving planets position.

But according to my research one thing is sure whether the planets are powerfully placed or not, if the above mentioned yoga is present in your chart all your problems will fade away at-least in the last minute. You might get timely help through someone, even from a stranger. Any problem might it be, the strength will be there for you to come over it.

I have given two charts of my friends showing Gaja-Kesari yogas.

Chart 1 showing Gaja kesari yoga, here Jupiter is in 4th quadrant/Kendra from Moon. Jupiter is Exalted. 

Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga
Chart 1 (Click to Enlarge)



Chart 2 showing Guru and Chandra in same house in Aries/Mesha. Since Jupiter and Moon are in the same house it is powerful Gaja-Kesari yoga also called as Guru-Chandra Yoga. 

Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga
Chart 2 (Click to Enlarge)


So, now open up your charts in Jagannatha Hora and check whether you have this mighty yoga. If you have this yoga then you might be a leader in your surroundings and your skills, talents will be appreciated by all.
 

கேசரி யோகம் என்றும் சில சமயங்களில் அழைக்கப்படும். கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். எனவே கஜ கேசரியை போல் இந்த யோகத்தை யுடைய ஜாதகன் தனது எதிரிகளை வென்றிடுவான் என்பது பொருள்.

 

குரு மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரங்களால் மட்டுமே இந்த யோகம் உருவாகிறது.

 

சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து குரு 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் அதுவே கஜகேசரி யோகம் எனப்படும்.

"குறிப்பு: ஒரு ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்த இடத்தை சந்திர லக்னம் என்று கூறுவர்."

 

மேலும், குருவும் சந்திரனும் ஒன்றாக ஓரே வீட்டில் அமர்ந்திருந்தால் அதாவது 1 ஆம் கேந்திரத்தில் இருந்தால் இவ்வகையான கஜகேசரி யோகத்திற்கு குருசந்திர‌ யோகம் என்று கூறுவர். மற்ற கேந்திர(4,7,10) ஸ்தானங்களைக் காட்டிலும் இது வலிமையானது.

 

பல ஜோதிட ஆதார நூல்கள் இந்த கஜகேசரி யோகத்தை பற்றி மிகவும் போற்றி கூறியிருக்கிறார்கள். தசரத புதல்வனான ராமபிரானின் ஜாதகத்தில் ஜெனம லக்னமான கடகத்தில் இந்த யோகம் அமையப்பெற்றது மிகவும் சிறப்பாகும். அதாவது, குரு தனது உச்ச வீடான கடகத்தில் இருக்கிறார். சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தில் இருக்கிறார். இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்கள். எனவே சிறந்த கஜகேசரி யோகமான, குருசந்திர யோகத்தை பெற்று தனது சத்துருவான மகா பராக்கிரமசாலியான ராவனனை வதைத்தார். மேலும் பகவான் ராமபிரானின் ஜாதகத்தில் மற்ற எல்லா கிரகங்களும் உச்சமாகி உள்ளது. ஏனேனில் அவர் பரமாத்மாவான மகா விஷ்ணு ஆயீற்றே. ஆதலால் தான் அவரது ஜாதகத்தை நமது பாரத தேசத்தில் பூஜை அறையில் மற்ற ஏனைய தெய்வ படகங்களுடன் ஒன்றாக வைத்து பெருமாளின் அருளை பெற வேண்டி ஆராதனை செய்கிறார்கள். கீழே அவரது ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது.

horoscience.com
Lord Sri Rama and Lord Hanuman Horoscope

 மாவீரன் அலக்ஸான்டரும் தனது ஜாதகத்தில் கஜகேசரி யோகத்தை பொற்றிருந்தார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் அவர் எவ்வாறு உலக நாடுகளை தன்வசம் ஆக்கினார் என்று.

 

குருவும் சந்திரனும் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால் இந்த யோகமானது ஒருவருக்கு தனம், ஆயுள் மற்றும் தலைவராகும் தன்மைகளை அளிக்கவல்லது. இந்த யோகத்தை நிறைய ஜாதகங்களில்
பார்க்க இயலும். ஆனால் யோகத்தின் பலமானது, யோகத்தை கொடுக்கும் கிரங்கள் அமர்ந்த இடத்தை பொருத்து வித்தியாசப்படும்.

 

ஆனால், என்னுடைய ஆராய்ச்சியின் படி யோகத்தை தரும் கிரகங்கள் நல்ல இடத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, கஜகேசரி என்ற யோகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலே போதும், உங்களது பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் கடைசி தருனத்திலாவது சூரியனை கண்ட பனி போல் மறைந்து விடும். உங்களுக்கு தக்க சமயத்தில் யாரேனும் ஒருவரால் உதவி கிடைக்கலாம், முன் பின் தெரியாதவராக கூட இருக்கலாம். எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் சரி நீங்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான சக்தி உங்களிடம் இருக்கும்.

 

என்னுடைய நன்பர்கள் இருவரின் ஜாதகங்களை கீழே கொடுத்துள்ளேன்.

 

ஜாதகம் ஒன்று, சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து குரு நான்காம் இடத்தில்/கேந்திரத்தில் உள்ளார். குரு உச்ச பலத்தில் உள்ளார். நல்ல பலமான கஜகேசரி யோகம் இது.

Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga
Chart 1 (Click to Enlarge)

 

 

ஜாதகம் இரண்டில் குருவும் சந்திரனும் மேஷத்தில் அதாவது ஒரே வீட்டில் அமைந்திருக்கிறார்கள். எனவே இது சிறந்த கஜகேசரி யோகமான குருசந்திர யோகம் ஆகும்.

Gaja-Kesari Yoga, Guru-Chandra Yoga
Chart 2 (Click to Enlarge)

 

எனவே, உங்கள் ஜாதகத்தி கஜமும் கேசரியும் இருக்கிறதா என்று பாருங்கள். Jagannatha Hora'வில் உங்கள் ஜாதகங்களை திறவுங்கள். இந்த யோகம் உங்கள் ஜாதகத்தில் இருந்தால் தாங்கள் இருக்கும் சுற்று வட்டாரத்தில் தலை சிறந்து விள்ங்குவீர்கள், உங்களது திறமைகள் பலராலும் பாராட்டபடும்.

-Karthik. R



No comments:

Post a Comment