New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Saturday, 13 September 2014

Yogas in Horoscope 4 – Chandra-Mangala Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 4 - சந்திரமங்கள‌ யோகம்

For Mars pray to Lord Muruga, For Moon pray to Somanathar(Lord Siva, as he adorns crescent moon in his head)

In the list of wealth giving yogas, Chandra-Mangala yoga is one among them.

Planet Mars and Moon are the only two planets when combined or in aspect with one another gives rise to this yoga.

To know about different aspects of planets click here.

This yoga can be seen in the charts of materially successful people. Easy Work Easy Gain is the principle for this yoga.


There are three ways on how this yoga forms.


Conjunction: Mars and Moon combined in the same house.
Below is a chart of my friend who has this yoga, where Mars and Moon are combined in the 11th house of gains. Hence his earning capability improves continuously. He is working in the States.

Conjunction(Click to Enlarge)
Opposition: Both Mars and Moon aspects each other through their 7th sight.

Below is a chart of my relative who has this yoga, where Mars and Moon are in aspect with each other through their 7th sight. He is working in one of the countries in Gulf.


 
Opposition(Click to Enlarge)

Parivartana: Both Mars and Moon exchange their houses to give this yoga.

We know that Mars owns two houses Aries/Mesha and Scorpio/Vrischika. And Moon owns only one Cancer/Kataka.


Exchange of planets can happen in two ways.
Mars in Cancer/kataka and Moon in Aries/Mesha.
Mars in Cancer/Kataka and Moon in Scorpio/Mesha.


To know more about houses and house lords click here.


Below is a chart of my friend in abroad who has this wonderful yoga. He is working in a wealthy island country in Southeast Asia.

Parivarthana(Click to Enlarge)
Look in the chart,

Mars is in cancer/kataka which is Moon’s house and
Moon is in Aries/Mesha which is Mars house.


Thus by exchange of house Parivartana Yoga is formed. As Mars and Moon are involved in this exchange Chandra-Mangala Yoga is formed.


Note: Some astrology authors say this yoga does not give much benefits regarding wealth. They say it because Mars is Neecha/debilitated in Moon House Cancer/Kataka and Moon is Neecha/debilitated in Mars house Scorpio/Vrischika. But according to my research and experience I have seen this yoga in full effect in charts of people who are earning a level good compared to those who do not have this yoga.


To know more strength of planets in different signs/rasis click here.


So, open your charts in Jagannatha hora and check whether you have the yoga to earn easily. Chandra-Mangala yoga formed due to Parivartana will not be listed in Jagannatha hora. So check manually yourself by looking at your rasi chart.



தன பாக்கியம் கொடுக்கும் யோகங்களில் சந்திரமங்கள யோகமும் ஒன்று.

 

செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் மட்டுமே இந்த யோகத்தை தர இயலும். அவை இரண்டும் சேர்ந்த நிலையிலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நிலையில் இந்த யோகமானது உதயமாகும்.


கிரங்களின் பார்வைகள் பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 

பொருளாதார வசதி திருப்திகரமாக‌ இருப்பவர்கள் ஜாதகங்களில் இந்த யோகம் இருக்கும். கஷ்டமில்லா வேலை நிறைவான ஊதியம் தான் இந்த யோகத்திற்கு தாரக மந்திரமாகும்.

 

 

மூன்று விதங்களில் இந்த யோகம் உருவாகும். அவை,

 

1. ஒரே வீட்டில்/ராசியில் செவ்வாய்யும் சந்திரனும் ஓன்றாக சேர்ந்து இருப்பது.

கீழே உள்ள என்னுடைய நன்பர் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சேர்ந்து அமர்ந்து இந்த யோகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே இவரது பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் ஸ்டேட்ஸில் வேலை பார்க்கிறார்.

 

Conjunction(Click to Enlarge)

2. செவ்வாய் சந்திரன் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது ஏழாம் பார்வையினால் பார்த்து கொள்வது.

 

கீழே உள்ள என்னுடைய உறவினர் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் தங்களது ஏழாம் பார்வையினால் ஒருவரை ஒருவர் பார்த்து இந்த யோகத்தை கொடுக்கிறார்கள். அவர் வளைகுடா நாடுகள் ஒன்றில் வேலை செய்கிறார்.

 

Opposition(Click to Enlarge)

3. செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனை பெற்றிருப்பது. அதாவது அவர்களது வீடுகளில்/ராசியில் இடமாறி அமர்ந்திருப்பது.

 

செவ்வாய் கிரகத்துக்கு ராசி சக்கரத்தில் மேஷம் மற்றும் விருச்சிகம் என இரு வீடுகளும் சந்திரனுக்கு கடகம் என ஒரு வீடும் இருப்பது நாம் முன்பே அறிந்த விஷயம் தான்.

 

பரிவர்தனை இரு நிலையில் நடக்கும்.

1. செவ்வாய் கடகத்தில் அமர்ந்து, சந்திரன் மேஷத்தில் அமர்ந்திருப்பது.

2. செவ்வாய் கடகத்தில் அமர்ந்து, சந்திரன் விருச்சிகத்தில் அமர்ந்திருப்பது.


மேலும் ராசி/வீடுகளின் அதிபதிகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

 

கீழே உள்ள‌ எனது நன்பர் ஒருவரின் ஜாதகத்தில் இந்த அற்புத யோகம் இருப்பதை பாருங்கள். இவர் தென்கிழக்கில் உள்ள செல்வம் மிகுந்த ஒரு தீவில் பணியாற்றி வருகிறார்.

 

Parivarthana(Click to Enlarge)

 

ஜாதகத்தை பாருங்கள்,

 

செவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கிறார் மற்றும்

சந்திரன் செவ்வாயின் வீடான மேஷத்தில் இருக்கிறார்.

 

எனவே தத்தம் வீடுகள் மாற்றி அமர்ந்து பரிவர்தனை யோகத்தை தந்துள்ளார்கள். செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனை ஆனதால் இந்த யோகம் சந்திரமங்கள யோகம் என பெயர் பெற்றது. 

 

குறிப்பு: சில ஜோதிட ஆசிரியர்கள் இந்த யோகம் செல்வத்துக்கு உண்டான பலன் ஏதும் அளிப்பதில்லை என கருத்துக்கள் கூறியிருக்கிறார்கள். ஏனேனில், செவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் நீச்சம் ஆகிறார் மற்றும் சந்திரன் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் நீச்சம் ஆகிறார். ஆனால் என்னுடைய ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தில் இந்த யோகமானது நல்ல வருவாய் இருக்கும் நபர்களின் ஜாதகத்தில் முழு பலத்துடன் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.



கிரகங்கள் எந்த ராசியில் அமர்ந்தால் என்ன நிலை என்பது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

 

எனவே, உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora'வில் திறந்து நீங்கள் சுலபமாக வருவாய் ஈட்டுவீர்களா என்று பார்க்கவும். பரிவர்தனையால் ஏற்படும் சந்திரமங்கள யோகமானது Jagannatha Hora'வின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. எனவே அதை நீங்கள் ராசி கட்டத்தை பார்த்து சுயமாக தெரிந்து கொள்ளவும். 

 

-Karthik. R



No comments:

Post a Comment