New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on YouTube, Facebook or Instagram for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Tuesday 9 September 2014

Yogas in Horoscope 3 – Malavya Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 3 - மாலவ்ய யோகம்Sorna Aakarshana Bairavar(Pray to him for wealth and happiness, especially to overcome financial hindrances)


It is one among the five PANCHA MAHAPURUSHA YOGAS.

Luxuries and comforts are the main requirements in all people lives. Such a luxury giving yoga is Malavya yoga.

This yoga is given by the one and only planet VENUS/Sukran. Venus is the guru of demons. Sukracharya gives all the worldly comforts one dreams in his/her life. He gives the artistic capability and all your favorite cinema heroes are ruled by Venus(including Moon) only.

If a person has this yoga in his chart, he will be having good wealth, health and suka boga(comforts), throughout his/her lifetime. He will be rich and take life easily.

Note: For some people who have this yoga didn’t give all the above mentioned comforts during initial part of life that is until 20 or 30 years of age. This is due to bad position of venus in Navamsha chart. Yes, for this yoga to show its full power it should be placed good in both Rasi and Navamsha chart.

I will explain showing two examples below.

CHART 1: It is one of my friend’s chart. He is blessed with all the above mentioned comforts in life as per the Malavya yoga states.

CHART 1(Click to Enlarge)


Look the position of Venus it is well placed in Rasi and Navamsha in his own sign Taurus/Rishaba. In Rasi chart it is in 4th house(vehicles, house, education, mother) from Asc/Lagna . He is only student out of several students during our college days comes in his own car every day. This is due to the presence of Malavya Yoga. Since, Venus from 4th house is aspecting 10th house of profession with his 7th aspect his profession is also good. He is a business person. Look in Navamsha chart Venus is placed in the same position in Taurus/Rishaba sign thus acquiring Vargottama Strength(bala). Hence this shows how powerfully Venus is placed in his chart.CHART 2: This is the chart of my close relative.

CHART 2(Click to Enlarge)


Look at the chart where Venus is Exalted(Uccha Bala) and in Kendra, thus forming Malavya yoga in 4th house from Asc/Lagna. Until 20 years of age he led a normal life without any comforts or vehicles. But after that yoga started to work and he owned vehicle and his profession is also good he works in abroad as Venus aspects 10th house of profession.

Now, here comes the question ? Why did the Malavya yoga did not work during initial days that is in childhood and teenage.

Look at the position of Venus in Navamsha chart. It is placed in Leo/Simha Raasi which is owned by Sun. This house is the enemy house of Venus as Sun and Venus are enemies. Due to this reason Malavya yoga has be delayed to show its result.
So, now to check whether you have the wealthy Malavya Yoga in your chart or your family relatives chart. Open the charts in Jagannatha Hora and check it.

 பஞ்ச மகாபுருஷ யோகங்களில் இந்த யோகம் ஒன்றாகும்.

இன்றயை அவசர உலகில் எல்லோருக்கும் சுக போகமான வாழ்வு என்பதே ஒரு கனவு தான். அப்படிபட்ட சுக போக வாழ்க்கையை வழங்குவது தான் இந்த மாலவ்ய யோகத்தின் சக்தி.

சுக்கிரன் ஒருவரால் மட்டுமே இந்த யோகத்தை தர இயலும். சுக்கிராச்சாரியார் அசுரர்களின் குரு என்பது நமக்கு தெரிந்த விடயம்தான். அவர் தான் இவ்வுலகில் உள்ள சுக போக வாழ்வுக்கு காரணகர்த்தா. அவர் கலை ஆர்வத்தை கொடுப்பவர் மற்றும் நீங்கள் விரும்பும் சினிமா நடிகர்கள்/நடிகைகள் அனைவரும் சுக்கிரனால்(சந்திரனும் சேர்ந்து) கட்டுபடுத்தபட்டவர்களே.

ஒருவரது ஜாதகத்தில் இந்த மாலவ்ய யோகம் இருந்தால் அவருக்கு தனம், ஆரோக்கியம் மற்றும் எல்லா சுக போகங்களும் அவரது வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பார். அவர் செல்வந்தராகவும், வாழ்க்கையை சுலபமாகவும் வாழ்வார்.

குறிப்பு: சிலருக்கு இந்த யோகம் மேற்கூறியபடி பலன்களை 20 அல்லது 30 வயது வரை தரமால் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் சுக்கிரன் நவாம்ச சக்கரத்தில் மோசமான இடத்தில் அமர்ந்திருப்பதே. ஆம் இந்த யோகம் தனது முழு பலத்தை காண்பிக்க ராசி சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

நான் இரண்டு உதாரணங்களை கொண்டு கீழே விளக்குகிறேன்.

ஜாதகம் 1: இது எனது நன்பர் ஒருவருடையது. அவரது வாழ்வில் மேலே கூறிய அனைத்து சுக போகங்களும் மாலவ்ய யோகத்தால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது.

CHART 1(Click to Enlarge)


அவரது ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இடத்தை கவணியுங்கள், அவர் அவரது சுய வீடான ரிஷபத்தில் அமர்ந்துள்ளார். ராசி சக்கரத்தில் லக்கனத்திலுருந்து 4 ஆம் வீட்டில்(வாகனங்கள், வீடு, கல்வி, தாய்) அமர்ந்துள்ளார். எனது கல்லூரி நாட்களில் பல மாணவர்களில் இவர் ஒருவர்தான் தனது சொந்த காரில் ஒவ்வொரு நாளும் தானே ஓட்டி வருவார்.

இது மாலவ்ய யோகத்தால் தான் சாத்தியமானது. மேலும் சுக்கிரன் 4 ஆம் வீட்டில் அமர்ந்து 10 ஆம் வீடான தொழில் ஸதானத்தை தனது 7 ஆம் பார்வையினால் பார்ப்பதால் அவர் தொழிலும் நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நவாம்ச சக்கரத்தை பாருங்கள், அதில் சுக்கிரன் ராசி சக்கிரத்தில் ரிஷபத்தில் அமர்ந்திருப்பது போலவே இதிலும் அமர்ந்து வர்கோத்தம பலத்தை பெற்றிருக்கிறார். எனவே சுக்கிரன் நல்ல பலத்துடன் இருக்கிறார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.

மேலும் ஒவ்வொரு வீட்டின் செயல்பாடுகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கிரகங்கள் எந்த ராசியில் அமர்ந்தால் என்ன நிலை என்பது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ஜாதகம் 2: என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரது ஜாதகம்.

CHART 2(Click to Enlarge)


ராசி சக்கரத்தை பாருங்கள், அதில் சுக்கிரன் மீன ராசியில் அமர்ந்து உச்ச பலத்தில் இருக்கிறார். லக்ன கேந்திரமான நான்காம் வீட்டில் அமர்ந்து மாலவ்ய யோகத்தை தந்திருக்கிறார். ஆனால் 20 வயது வரை இந்த ஜாதகர் எந்ந விதமாக சொகுசு வாழ்கையை வாழவில்லை வாகனங்களும் இல்லை. 20 வயதிற்கு மேல் தான் மாலவ்ய யோகம் வேலை செய்ய ஆரம்பித்தது, வாகனங்கள், சுக்கிரன் 10 ஆம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாட்டில் வேலை என நன்றாக வாழ்ந்து வருகிறார்.

ஏன் 20 வயது வரை மாலவ்ய யோகம் தனது பலத்தை காண்பிக்கவில்லை என்பது தான் நமது கேள்வி ?

நவாம்சத்தில் சுக்கிரன் இருக்கும் நிலையை பாருங்கள். அவர் சிம்ம வீடான சூரியனது வீட்டில் அமர்ந்து உள்ளார். சுக்கிரனும் சூரியனும் எதிரிகள், ஆகவே எதிரியின் வீட்டில் அமந்ததால் சிறிது காலம் தாமதமாக்கி மாலவ்ய யோகம் தனது பலத்தை காண்பித்திருக்கிறது.

கிரங்களின் பார்வைகள் பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, உங்கள் ஜாதகத்தில் அல்லது உங்களது நன்பர், உறவினர் ஜாதகத்தில் தன பாக்கியம் கொடுக்கும் மாலவ்ய யோகம் இருகிறதா என்று பார்க்க, Jagannatha Hora'வில் ஜாதகங்களை திறவுங்கள்.

-Karthik. RNo comments:

Post a Comment