New to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. Subscribe and follow on social media for regular updates. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.

Sunday 28 September 2014

Yogas in Horoscope 6 - Mridanga Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 6 - மிருதங்க யோகம்

Mridanga Yoga, horoscience.com
Lord Ganesha dancing playing Mridanga (Pray to him and let the joy fill in all our lives)


This is one of the very rare yoga. If it is found in the charts of any person his/her life will be enriched with full of joy and happiness even though hard time comes he/she will move on easily. Everyone around this person will also be joyous.

This yoga is named after Mridangam a musical instrument. Also described as Divine Instrument / Deva Vaadyam. Mrida means, “one who makes joyful”. This instrument is widely used in South India. In temples and during wedding ceremonies in South India it is played sometimes along with Thavil and Nadhaswaram . In Tamil classics it is also named as tannumai. Read more here.
 

In the Temple Gopurams Temple Gopurams you can notice this instrument sculpted in the hands of divine beings to bring joy in lives of people.
 

Classic astrology authors state “Mridanga yoga can make one respected by rulers, famous, attractive and influential.”
 

According to my research, the person who has this yoga will be surrounded by many friends or relatives.
 

The formation of this yoga is caused by any planet which is exalted or in its own sign in a kendra/kona/friendly sign and its navamsa lord also being exalted or in its own sign in a kendra/kona/friendly sign provided lagna lord should be strong.
 

I recommend using Jagannatha Hora software to check for the presence of this yoga, as manually locating it in the horoscopes will be tedious for beginners in astrology.
 

If anyone has this yoga then he/she might in list among the happiest persons in the world. But remember when malefic planets run their dasa or bhukti one may suffer hurdles, hindrances and setbacks in life but still can be recovered easily.
 

Below is the chart of my friend who is having this yoga. He faced some hurdles related to relationships, but soon he recovered and started to move on quickly. He is an entrepreneur and a humble, polite and of course happy person.

Mridanga Yoga, horoscience.com
(Click to Enlarge)

The next chart is one of my friend’s chart. He is from Indonesia and he has very peculiar traits in regards with enjoying his life. He lives his own way touring and visiting countries. I got to know about him during our post graduate days. He is easy going, helping and of course joyful person.
 

Mridanga Yoga, horoscience.com
(Click to Enlarge)


So now open up your charts, friends and relatives in Jagannatha Hora and check for this joyful Mridanga Yoga and learn whether it is true about what has been written above.


மிகவும் அரிதான யோகங்களுள் இந்த மிருதங்க யோகமும் ஒன்றாகும். இந்த யோகத்தை ஒருவர் பெற்றிருப்பாரேயானால் அவரது வாழ்கை குதூகலமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். எந்த ஒரு துன்பமயமான காலம் வந்தாலும் அவர் அதிலிருந்த வெகு சுலபமாக மீண்டு வருவார். இவர்களை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.

 

இப்பெயர் இந்த யோகத்திற்கு வர காரணம் மிருதங்கம் என்ற தேவ வாத்திய கருவிதான். மிருதங்கம் என்றால் நாம் அறிந்த ஒன்றே. அதில் இருந்து வரும் ஓலியானது நம் அனைவர் மனதையும் காலம் காலமாக கவர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. மிருத என்ற சொல்லுக்கு உற்சாகத்தை கொடுப்பவர் என்பதாக பொருள். எனவே தான் இதை நமது கணபதி வாசிப்பதாக சிலைகளை காண்கிறோம். பல தெய்வ சிற்பங்களில் குறிப்பாக கோபுரங்களில் நாம் இந்த மிருதங்கத்தை காணலாம். தமிழ் இலக்கியங்களில் மிருதங்கம் தண்ணுமை என்றும் பெயர் பெற்றிருக்கிறது.

 

பழங்கால ஜோதிட நூல் ஆசிரியர்கள், மிருதங்க யோகத்தை பற்றி கூறுகையில், இந்த யோகம் ஒருவருக்கு புகழ், வசீகரத்தன்மை, அரசாளுபவர்களால் போற்றப்படுபவர் என்று கூறியிருக்கின்றனர்.
 

என்னுடைய ஆராய்ச்சியில், இந்த யோகம் உள்ளவர்கள் என்றும் நிறைய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் சூழ்ந்து இருப்பார்கள்.
 

இந்த யோகம் ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகம் உச்சமோ/ஆட்சியோ பெற்று கேந்திரம்/திரிகோணம்/நட்பு வீட்டில் அமயப்பெற்று, பின்பு அந்த கிரகத்தின் நவாம்ச அதிபதி உச்சமோ/ஆட்சியோ பெற்று கேந்திரம்/திரிகோணம்/நட்பு வீட்டில் அமர்ந்து, லக்னாதிபதியும் வலிமையுடன் இருந்தால் மட்டுமே உருவாகும்.

 

மேலே உள்ளதை படித்து ஜாதகத்தை ஆராய்ச்சி செய்கிற‌ புதிதாக ஜோதிடம் கற்கும் அன்பர்களுக்கு சற்று கடினம் தான். எனவே Jagannatha Hora மென்பொருளை பயன்படுத்தி யோகம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
 

இந்த யோகத்தை உடையவர்கள் நிச்சயம் உலகித்தில் சந்தோஷமாக வாழும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பர். ஆனால், அசுப கிரகங்களின் தசா/புத்தி ஆதிகத்தின் காலத்தில் துன்பங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டாலும், இந்த யோகத்தின் காரணமாக‌ சுலபமாக துன்பங்களிலிருந்து விடுதலை பெருவார்க‌ள்.
 

கீழே எனது நண்பரின் ஜாதகத்தை கொடுத்துள்ளேன். அவருக்கு இந்த யோகம் நன்றாக அமைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் மனைதை வாட்டும் விதமாக சில‌ துன்பங்களை அனுபவித்தார். ஆனால் அதிலிருந்து சீக்கிரம் விலகி வந்தார். அவர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். மிகவும் பணிவாக, கண்ணியமாக மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். 

 

Mridanga Yoga, horoscience.com
(Click to Enlarge)

 

அடுத்த ஜாதகம் என்னுடைய இந்தோனேசிய நண்பர் ஒருவருடையது. இவர் சற்று வித்தியசமாக மகிழ்வுற்று எப்போதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பார். இவரை சுற்றி இருப்பவர்களும் அப்படித்தான். இந்த யோகத்தின் வினோதம் என்று நினைக்கிறேன். இவர் எப்போதும் பல நாடுகளை சுற்றி கொண்டிருப்பார். இவரை பற்றி எங்களது முதுகலை படிப்பின் போது அறியப்பெற்றேன். இவர் ஜாலியாக, மற்றவர்களுக்கு உதவி புரிந்து என்றும் உற்சாகமாக இருப்பார்.
 

Mridanga Yoga, horoscience.com
(Click to Enlarge)

 

இப்போது தாங்கள், தங்களுடைய,  நண்பர்ளுடைய மற்றும் உறவினர்களின் ஜாதகங்களை Jagannnatha Hora'வில் திறந்து இந்த மிருதங்க‌ யோகம் இருக்கிறதா என்று பார்த்து மேலே கூறியது அனைத்தும் உண்மைதானா என்று பாருங்கள்.

-Karthik. R



No comments:

Post a Comment